1587. (இ-ள்.) திருவாயிலினைப் பணிந்து எழுந்து - கோபுரத் திருவாயிலைக் கீழ் வீழ்ந்து வணங்கி எழுந்து; செல்வம்...அணைந்து - (உட்புகுந்து) செல்வநிறைந்த திருமுற்றத்தினைச் சேர்ந்து; கருவார்....சூழ்ந்து - கருவாரும் கச்சிமா நகர்த் திருவேகம்பநாதருடைய அழகிய பொன் மாளிகையை வலமாகச் சூழ்ந்து; வருவார் - வலம் வருவாராகிய நாயனார்; செம்பொன்....கண்டிறைஞ்சி - செம்பொன்மலை வல்லியாராகிய காமாட்சியம்மையார் தழுவக் குழைந்து காட்டிய அழகிய திருமேனியையுடைய பெருவாழ்வாகிய திருவேகம்ப வாணரை முன்பு கண்டு வணங்கி; பேரா அன்பு பெருகினார் - பேராத அன்பு பெருகினாராய்; 322 1588. (இ-ள்.) வார்ந்து.....புறம்பு அலைப்ப - பெருகிச் சொரியும் கண்ணீர் மழையானது மயிர்க்கால் எங்கும் வருகின்ற புளகம் நிறைந்த திருமேனியின் புறத்தை அலைப்பவும்; அன்பு...உள் அலைப்ப - அன்பு மேலீட்டினால் மனமானது கரைந்து எலும்பினுள்ளும் அலைப்பவும்; சேர்ந்த...திளைப்ப - பெறும் பயனைப் நாதரை நேர்ந்த மனத்தினுள்ளே பொருந்தும்படி வைத்து; நீடும்....பாடுவார் - நீடும் திருப்பதிகம் பாடுவாராகி, 323 1589. (இ-ள்.) கரவாடும்....பாடியபின் - "கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானை" என்று தொடங்கிப் போற்றுதலாகிய சொன்மாலைத் திருப்பதிகம் பாடிய பின்பு; விரவார்தம்...புறத்தணைந்தார் - பகைவருடைய முப்புரங்களை எரித்தவரும், வெள்ளெயிறுடைய பாம்பாகிய ஆரம் புனைந்தவரும் ஆகிய இறைவர் கோயிலின் திருமுற்றத்தின் புறத்தே அணைந்தனர். 324 இந்த நான்கு பாட்டுக்களும் பொருட்டொடர்பும் சொற்றொடர்பும் பெற்று ஒரு முடிபு கொள்ளும்படி உரைக்க நின்றன. 1586. (வி-ரை.) இறைஞ்சும் - அடியார் தம்மை - இறைஞ்சி - அடியார்கள் தம்மை வணங்க, அவர்களைத் தாமும் வணங்கி என்பது அடியார்கள் எதிர்கொண்ட முறையினையும், அதனை நாயனார் ஏற்றுக்கொண்ட முறையினாயும் உணர்த்தியதாம். அடியார் வணக்கம் ஆண்டவன் வணக்கத்தினும் முன்வைக்கப்பட்ட சிறப்பும் காண்க. இறைஞ்சி - எழுந்தருளி - போந்து - குறுகினார் என முடிக்க. மதில் கொண்டணிந்த - நகர் மறுகுட்போந்து - அடியார்கள் நகர்ப்புறத்து மதிலின்புறத்தே நகர் வாயிலின் வந்து எதிர்கொண்டனர் என்பது உணர்த்தியபடி. மறுகு - முன் 1584 - ல் கூறியபடி அலங்கரித்த மாடவீதி. வானநதி குதிகொண்டு இழிந்த - வானநதி - சடையில் வருதற்முன், கங்கை, குதிகொண்டு ஆரவாரித்தது என்றும், வந்தபின் பனிபோலாகச் சிறுத்து இழிந்து போந்ததென்றும் குறித்தபடி. செம்பொன் கோயில் - பலவிடங்களிலும் பொன்னாலியன்ற பணிகள் செய்யப்பட்ட கோயில். பொன்றோன் றஅழகிய கோயில் என்றலுமாம். அதிர் கொண்டல் - நீர் நிறைதலால் கறுத்த இடியுடன்கூடிய அதிரும் மேகம். மிக்க கருமையுடைய நிறத்தினாலும் மழைதரும் பயனாலும் போந்த உவமம். உருவும் பயனும் பற்றி வந்தது. மிடற்றார் ஆண்ட - ஆளுடைய அரசு என்ற வழக்கினை விரித்தபடி. 321 1587. (வி-ரை.) திருவாயிலினை நிலமுறப் பணிந்தெழுதல், திருமுன்றிலை அணைந்து திருமாளிகையைச் சூழ்ந்து வலம் வருதல் முதலிய இவை, திருமுன்பு அணைந்திறைஞ்சுமுன் இன்றியமையாது செய்யத்தக்க வழிபாட்டு றைகளாம். திருவாயில் - முன் கோபுரத்துள்ளது; முதற்றிருவாயில். |