பக்கம் எண் :


546திருத்தொண்டர் புராணம்

 

II திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

நம்பனை நகர மூன்று மெரியுண வெருவ நோக்கும்
அம்பனை யமுதை யாற்றை யணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனைக் கதிர்வெண் டிங்கட் செஞ்சடைக் கடவு டன்னைச்
செம்பொனைப் பவளத் தூணைச் சிந்தியா வெழுகின் றேனே.

1

பொன்றிகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியில் புகுந்தென் னுள்ள மெள்ளவே நவில நின்று
குன்றியி லடுத்த மேனிக் குவளையங் கண்ட ரெம்மை
யின்றுயில் போது கண்டா ரினியரே கம்ப னாரே.

2

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- கச்சியேகம்பரைச் சிந்தியா எழுகின்றேன்;வாழ்த்துமா றறியமாட்டேன் மால்கொடு மயங்கினேன்; நான் பிதற்றுகின்றேன்; அவரது உருவினை உள்ளத்தால் உள்கி உகக்கின்றேன்; கண்டு அடிமை செய்யக்கருதியே திரிகின்றேன்; அவரைத் தொழுவல்லார்க்குக் கடுவினை களையலாம்; தொழுவார் தலைவார்க்குந் தலைவர்; அவரைக்காண ஞாலம் உய்ந்தது; அவர் எம்மை இன்றுயில் போது கண்டார்; அவர் இனியர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) நகர மூன்று - திரிபுரம். கம்பன் - ஏகம்பர். சிந்தியர் - சிந்தியா நின்று; "தொழுதெழுவாள்" (குறள்) என்பதுபோல. - (2) உருவகம். ஒரு முழமுள்ள குட்டம் - குட்டம் - ஆழம். அகலம் - அரைமுழம். முதலை ஐந்து - ஐம்பொறி. பெருமழை வாய்தல் - முதலையின் பகுவாய் - "மாறி நின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழி" (திருவா). ஒன்பது துறை - உடலின் ஒன்பது வாசல். - (6) உரு - உருவமில்லாத கடவுள் ஒருருக்கொண்டு இங்கு வீற்றிருக்கின்றான் என்பது. - (7) நஞ்சமுண்டது உலகமுய்யும்பொருட்டு. - (8) காண - கண்டு. - (9) தலைவி கூற்றாகிய அகப்பொருட்டுறைச் சுவைபடக் கூறியது. குன்றியில் அடுத்த மேனிக் குவளையங் கண்டர் - உருவம்பற்றி எழுந்த சிவந்த திருமேனிப் பிழம்பில் நீலவிடமாகிய கண்டம் காண உள்ளவர். உவமநயம் போற்றத்தக்கது. - (10) அவரவர்க்கு - ஏற்றபடி என்க.

III திருச்சிற்றம்பலம்

திருவிருத்தம்

ஒதுவித் தாய்முன் னறவுரை காட்டி யமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக் கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாயுகப் பாய்முனி வாய்கச்சி யேகம்பனே.

1

உந்திநின் றாருன்ற னோலக்கச் சூளைகள்; வாய்தல்பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ ரீட்டம்; பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு மாலு; மதிற்கச்சியாய்!
இந்தநின் றோமினி யெங்ஙன மோவந் திறைஞ்சுவதே?

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- திருவேகம்பர், விட்டுணு, பிரமர், ஆதித்தர், சந்திரன், இந்திரன், வசுக்கள் எண்மர், உருத்திரர் பதினொருவர், அமிர்தர் முதலிய தேவர்கள் யாவராலும் அறியவொண்ணாதவர்; தேவர்களும் அவரது வாய்தல் பற்றித்