பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்547

 

துன்றி நின்று உணங்காக் கிடந்தார்; அவர் திருமாலின் கண் கொண்டவர்; அவர், முன் அறவுரை காட்டிப், பின், அமணரொடே இசைவித்து, நோய் தந்து தீர்த்துத் தன்பாற் போதுவித்து என்னை ஆட்கொண்டருளினார்; அவர் உரைக்கவும் உணரவும் அரியவர்; கருவுற்ற நாள்முதலாக அவர் பாதமே காண்பதற்கு என் உள்ளம் உருகிற்று; திருவேகம்பரே! தேவர்கள் நும் வாய்தல்பற்றி நிற்றலில் நாங்கள் நெடுந்தூரத்தில் நின்றோம்; எங்ஙனம் வந்திறைஞ்சுவேம்? உம்மையன்றி வேறு ஒரு பற்றும் இல்லாததைக் கண்டு எனக்கு இரங்குவீராக! அவ்வாறே உமது தாள்களே சரண் என்று ஏம்பலிப்பார்க்கு இரங்குவீராக!

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) முன் அறவுரை காட்டி ஒதுவித்தாய் - நாயனார் இளமையில் "தேசநெறி நிலையாமை கண்டறங்கள் செய்த" (1300) சரிதப் பகுதிக்கு அகச்சான்று. முதலில் அறங்களே சிறந்தனவென்று காட்டுவித்தவர் நீரே என்பது. அறவுரை காட்டி அமணரொடே காதுவித்தாய் என்று பின்னுங் கூட்டிச், சமணர் சார்பு புகுந்த சரிதப் பகுதிக்கு அகச்சான்றாதலும் காண்க. சமணத்தில் முகப்பிற் காண்கின்ற கொல்லாமை முதலிய அறவுரைகளே நாயனாரை வஞ்சித்து அகப்படுத்தின. "கொல்லாமை மறைந்துறையும்...குறுகுவார்" (1302). காதுவித்தாய் - அலமரச் செய்தாரும் நீரே. கட்டநோய் பிணி சூலை - சூலையை; தந்தவரும் தீர்த்தவரும் நீரே. போதுவித்தாய் - உமது திருவடிச் சார்பிற் புகுவிததீரும் நீரே "நின்பணி....மோதுவிப்பாய்; உகப்பாய் முனிவாய்" - சூலை தந்த செயல் பணி பிழைத்தமைக்கா இறைவர் தந்த கழுவாய் என்பது நாயனார் கொள்கை. உமது முனிவே உகப்பின் வருவது. "எக்கிரமத்தி னாலு மிறைசெய லருளே யென்றும்" (சித்தி - 2 - 15). புளியம் வளார் - புளியின் சிறுகொம்பு. "வளாரினா லடித்துத் தீய பந்தமு மிடுவர்", "பார்த்திடிற் பரிவே யாகும், இந்தநீர் முறைமை யன்னோ வீசனார் முனிவு மென்றும்" (சித்தி - 2 - 16). - (2) அமணொ டிசைவித்தெனை - சரிதச் சான்ற. "கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுதல்" பழமொழி. கொத்தை - குருடன். "என்கண் கொத்தை யாக்கினீர்" (தேவா. நம்பி). மூங்கர் - மூகர்; ஊமை. கோகு - கபடம். ஏய்க்கும் - நிகர்க்கும். படி - வண்ணம்; நிறம். - (3) ஆவம் - ஆவம் அம்பு பொய் எய்து என்க. குய்யம் - வஞ்சகம். வஞ்சகமாவது நிறைந்திருந்தும் மறைந்து நிற்றல். - (4) சூல்வித்தல் - தோண்டுவித்தல். - (5) உரைக்கும் கழிந்து இங்கு உணர்வரியான் - "உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்" உள்குவார்...எனக் கைதொழுவதல்லால்... அறியவொண்ணான் - நினைப்பவர் வினைதீர்ப்பர் என்று எண்ணித் தொழுதல் அல்லது சொல்லவும் அறியவும்படான். - (6) கருவுற்ற - தாயின் கருவில் வந்த. இப்பாட்டு நாயனார் தம்பொருட்டுச் செய்த விண்ணப்பம். 8-வது பாட்டு அடியார் பொருட்டுக் கேட்ட வரம். கருவுற்ற நாள்முதல்...உள்ள முருகிற்று - கருவுற்ற உயிர்கள் கரணங்களால் உணர்வு தோன்றியபோது இறைவனையே நினைக்கும். "கருவாய்க் கிடந்துன் கழலே நினையும்" (தேவா). "பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங்தாதல், சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்" (அம்மையார்). இவ்வாறு துணிபுடன் சொல்லுதல் பிறர் எவர்க்குமரிதாகும். "ஆறுங் கருவி லமைப்பு" என்றபடி பின்னர் உள்ள நிலைமைபற்றிக் கருவினிலமைந்த தென்பது துணியப்பட்டது. இடையில் சமணத்துட்பட்டு "ஏழையேன் நான்பண்டு இகழ்ந்தவாறே" என்றபடி கழிந்த நாட்களின் தன்மை இக்கருத்துடன் அமைவுபடுதல் எவ்வாறெனின்? இதுபற்றிக் "கூற்றாயினவாறு" என்ற பதிகக் குறிப்பில் "நெஞ்சம்" (2) என்ற பாட்டின் குறிப்பு (பக் - 78) பார்க்க. ஒருபற்று - மற்றும் ஒருபற்றும். முற்றும்மை தொக்கது. "மற்றுப் பற்றெனக் கின்றி" (நம்பிகள்). - (7) அரி..