பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்549

 

மலும் நிற்குநிலை. ஆன்மாக்கள் பலவுமாய்த் தானேயாய் என்ற கருத்தாகக் கொள்வது மொன்று. - (11) நலங்கொள் செலவு - நன்றாய்ச் செல்லும் செலவும்.

IV திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

பூமே லானும் பூமகள் கேள்வனு, நாமே தேவ ரெனாமை நடுக்குறத்,
தீமே வும்முரு வா!திரு வேகம்பா!, ஆமோ வல்லற் படவடி யோங்களே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- திருவேகம்பரே! அடியோங்கள் அல்லற் படலாமோ? பொறி புலன்களைப் போக்கறுத்து உள்ளத்தை நெறிப்படுத்துக் குறிப்பினாற் சென்று ஏகம்பம் தொழுவோம்; திருவேகம்பர் சிந்தையுட் சிவமாய் நின்ற எந்தை; அவரை அடைந்து கும்பிட்டு உய்தும்; அவரைத் தொழுவார்க்கு அல்லலில்லை.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) நாமே தேவர் எனாமை - தாந்தாங் கடவுள் என்று கூறாமல். - (2) புடைபட்டு - நெருங்கி. - (3) முறைமை - ஆளாகும்முறை. ஆகம விதிமுறை. - (4) பொறிப் புலன்களை - பொறிகளின் வழியே புலன்களை நோக்கிச் செல்லும் ஆசையை. போக்கு - அவற்றின் வழியே சேர்தல். அறிப்பு - அறிதல் - உணர்தல். குறிப்பு - குறி; குறிக்கோள்.- (5) சிந்தையுள் ஒளித்து நிறைந்த சிவம். - (6) பாக்கியம் - சிவநெறிப்பேறு. பாடு - பக்கம். துன்பம் என்றலுமாம். - (7) அமரர்க்கிறை கரப்பு அதுஆய - பிரமனாற் படைக்கப்படாது சிவனது படைப்பும் காவலும் பொருந்திய. "காப்புத் திருத்தாண்டகம்" (1130). சேர்ப்பது - சேர்வன். பிறவினை தன்வினைப்பொருளில் வந்தது. நன்னெறிச் லெுத்துவது என்றலுமாம். - (9) மெய்யன் - உண்மையாய் விளங்குபவன். - (10) தருக்கு - "சிந்தையார்க்குள்ள செருக்கு"; "இறுமாந் திருப்பன் கொலோ" (தேவா). அடியோம் என்ற பெருமித நினைவு.

தலவிசேடம் : (1) திருக்கச்சியேகம்பலம் - II - பக்கம் 1537 பார்க்க. (2) திருக்கச்சிமயானம் - (1590). தேவார வைப்புத் தலம். திருஏகம்பக் கோயிலின் முன்புறம் கொடிமரத்தின் முன்புறம் தென் கீழ்த் திசையில் உள்ள தனிக்கோயில். "மைப் படிந்த கண்ணாளுந் தானும் கச்சி மயானத்தான்" (பொது - வினாவிடைத் தாண் - 10). திருக்குறிப்புத் தொண்டர் புராணத்திறுதியில் (பக்கம் 1537) தலவிசேடம் திருக்கச்சியேகம்பம் பார்க்க.

திருக்கச்சித்திருமேற்றளி

IV திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் வாழ்வார்
பிறையது சடைமு டிமேற் பெய்வளை யாடன் னோடுங்
கறையது கண்டங் கொண்டார் காஞ்சிமா நகர்த னுள்ளால்
இறையவர் பாட லாட லிலங்குமேற் றளிய னாரே.

1

செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனைக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்த னுள்ளால்
எல்லியை விளங்க நின்றா ரிலங்குமேற் றளிய னாரே.

8

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- காஞ்சிமாநகர் தன்னுள்ளால் இலங்கும் மேற்றளி யிறைவனார் மறை பாடிப் பிச்சைகென் றகந்திரிவர்; விருத்தராகும் பாலனார்; கண்