பக்கம் எண் :


552திருத்தொண்டர் புராணம்

 

பதிகக் குறிப்பு :- ஆழி பெறபேண்டித் திருமால் தவஞ் செய்து பெற்ற திருமாற்பேற்றினைத் தொழ வினை தேயும்; கவலை தீரும்; துயரம் இல்லை; கைதொழுவார் பரலோகம் பெறுவர்; அவர் எம்மையாளுடையார்களே; மாற்பேறுடைய நாயகர் தமது திருநாமத்தை மகிழ்ந்துரைத்து அழவல்லார்களுக்கு அன்புசெய்து இன்பொடும் வழுவிலா அருள் செய்பவர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பொரும் ஆற்றின் படை - போர்செய்யும் வழியால் உறும் படை. சக்கரம். ஆற்றின் வரும் பூம்புனல் மலர் - நதியின் நீரும் மலரும் என்க. உம்மைத்தொகை. ஆறு - இங்கு இத்தலத்தினை அடுத்து வடக்கில் உள்ள பழைய பாலாறு. கருமாற்கு - கரிய திருமாலுக்கு. வழிபடும் - திருமால் வழிபட்ட தலவரலாறு. 2, 3-லும் இவ்வரலாறு போற்றப்படுதல் காண்க. - (2) கோலத்தால் உரை செய்தவன் - வாகக்னிாற் சொல்லாது தாம் வீற்றிருந்த நிலையும், காடடிய ஞானமுத்திரையும் ஆகிய கோலத்தினால் உணர்த்தியவர் ஏல - மிகவும். - (3) மணிவண்ணன் - திருமால். மணி - நீலமணி. - (7) திருநாமம் - திருவைந்தெழுந்து. அழவல்லார் - அன்பு மேல்லீட்டினால் அழுபவர். வழுவிலா - பொய்யாத. - (10) வருத்தி ஆரருள் செய்தவன் - மன்னர் வருத்தம் செய்து, பின்னர் இரங்கி நிறைந்த அருள் செய்தவர். அருத்தி - ஆசை.

III திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

ஏது மொன்று மறிவிலா ராயினும், ஒதி யஞ்செழத் தும்முணர் வார்கட்குப்
பேத மின்றி யவரவ ருள்ளத்தே, மாதுந் தாமு மகிழ்வர்மாற் பேறரே.

1

ஈட்டு மாநிதி சால விழக்கினும், வீட்டுங் காலன் விரைய வழைக்கினங்
காட்டின் மாநட மாடுவாய் காவெனில், வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற்பேறரே.

பதிகக் குறிப்பு :- மாற் பேற்றின் இறைவர், அஞ்செழுத்தும் இதி உணர்வார்களது உள்ளத்தே மாதும் தாமும் மகிழ்வர்; அவர் நாமங்கள் நித்தலும் நினையின் வைச்ச மாநிதி யாவர்; பணிதிரேல் மாத்திரைக்குள் அருள்வார்; மருந்து மாகுவர்; வாட்டந் தீர்த்து வையமாளவும் வைப்பர்; அந்தமில்லா இன்பம் வந்து அணுகும்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (2) வைச் - சேமித்து வைத்த. - (3) சிவனது நினைவின்றிச் சாத்திரமுமு கோத்திரமும் குலமும் பயன்றரா என்பது கருத்து. இது கொண்டு, குலம் கோத்திரம் சாத்திரம் முதலியவை பயனில்லாதன என்றும், அவை விட்டுவிட்த் தக்கன என்றும் நாயனார் கருதியதாகக் கொள்வார்சிலர்; அது தவறு; அவை தம்மை மறந்த நிலையில் தூங்கினவன் கைப்பொருள் போலத் தாமாய் நழுவத்தக்கன வன்றி நாமே விடத்தக்கன வல்லவென்பது. - (6) இந்நாட் கொடிய போர் காரணமாக வரும் கேடுகளைத் தவிர்க்க நல்லுபதேசமா மித் திருப்பாட்டு. - (10) அந்தமில்லதோர் இன்பம் - பேரின்பம்.

IV திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

பாரானைப் பாரினது பயனா னானைப்
         படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னை
யாராத வின்னைமுதை யடியார் தங்கட்
         கனைத்துலகு மானானை யமரர் கோனைக்
காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக்
         கருதுவார் மனத்தானைக் காலற் செற்ற
சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ்
         செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தே னானே.

1

நீறாகி நீறாமிழு நெருப்பு மாகி
         நினைவாகி நினைவினிய மலையான் மங்கை
கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக்
         குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்