| ஆறாத வானந்தத் தடியார் செய்த வனாசாரம் பொறுத்தருளி யவர்மே லென்றுஞ் சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தே னானே. |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- பாரான், பாரினது பயனான், பல்லுயிர்க்கும் பரிவோன், கருதுவார் மனத்தான்,ட மெய்யடியார் வேண்டுவதே, ஒங்காரத் தொருவன், கற்றான், கற்பனவும் தானேயானான், குறையாத உவகைக் கண்ணீர் ஆறாத வானந்தத் தடியார் செய்த வனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றும் சீறாத பெருமான், பிறப்பான், பிறவாத பெருமையான், நினையாதாரை நினையான், நினைவோரை நினைவோன், சங்கரன், சம்பு என்றிவை முதலிய பெருமைகளா லறியப்படும் திருமாற்பேற்றின் இறைவானை நான் சென்றடைந்தேன். பதிகப் பாட்டுக் குறிப்பு :- திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தே னாளே என்பது மகுடம். - (1) கருதுவார் மனத்தான் - கருதும் மனத்துள் விளங்குபவன். 6, 8-லும் காண்க. (3) முத்து - முழுமணிச்சோதி. 492 பார்க்க. மரகதம் - அம்மைபாகம். மாமணி - இறைவன் பாகம். விலை பெரிய வெண்ணீறு - திருநிற்றுப்பதிகம் பார்க்க. மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவான் - "வேண்டத் தக்க தறிவோய்நீ" (திருவாசகம்). - (4) ஒங்காரம் - பிரணவம். பிரணவ வாச்சியன் சிவன் என்பது வேதம். - (5) நீறுமிழு நெருப்பு - நீற்றை விளைக்கும் நெருப்பு. குறையாத...பெருமான் - கண்ணப்பதேவ நாயனார் முதலியோரது சரிதங்கள் காண்க. (7) பிறப்பானை - பிறவாத பெருமையானை - பிறவிகளில் வரும் எல்லா உயிர்களுள்ளும் நிறைந்தும் தான் பிறவியில் வாராதவன், "கருவினா லன்றியே கருவெலா மாயவன்க்ஷ" (தேவா). பிறப்பானை - பிறக்கச் செய்வானை என்றலுமாம். - (8) "இன்பஞ் செய்தலிற் சங்கரனெம் பிரான் ன்பமாக்கலிற் சம்பு விடும்பைநோய், என்ப தோட்டு மியல்பி னுருத்திரன்" (காஞ்சிப் புரா - பரசிரா - 44) காளத்தி - இறைவர் பெபயர். - (9) பற்றாகிப் பல்லுயிர்க்கு பரிவோன் - (1) பார்க்க. உயிர்கள்மேல் வைத்த பரிவு காரணமாகவே, மாறா அருட்கூத் தியற்றுபவன். நோக்கம் - பார்வை. சங்கரன் - இன்பஞ் செய்பவன். சம்பு - இன்பத்துக்குப் பிறப்பிடமானவன். தலவிசேடம் :- திருமாற்பேறு - தொண்டை நாட்டின் 11-வது தலம். இங்குச் சக்கரம் பெறவேண்டித் திருமால் தமழது ஒரு கண்ணைத் தோண்டி அருச்சித்துப் பேறு பெற்றனர் என்பது வரலாறு. தலப் பெயர் இதனை விளக்கும். அருச்சித்த தாமரைக் கீடாகத் தமது கண்ணை எண்ணித் தோண்டிப் பூசித்த. காரணத்தால் மாலுக்குப் பத்மாட்சன் என்ற பெயரும் வழங்கும். ஆளுடைய பிள்ளையார் பதிகத்துள், "மன்னிய மாலொடு சோமன் பணிசெய" என்றது இவ்வரலாறு குறிப்பது. அரசுகளது திருக்குறுந்தொகைப் பதிகங்களும் பார்க்க. இறைவர் திருமுன்பு மேற்கு நோக்கி அவரைக் கைகூப்பித் தரிசித்துக்கொண்டு திருமால் எழுந்துள்ள கோலம் காண்க. சுவாமி - மால்வண்ங்கீசர்; மணிகண்டீசர்; அம்மை கருணைநாயகி; பதிகம் - 6. இது காஞ்சிபுரம் - அரக்கோணம் கிளைப்பாதையில் பளூர் என்ற இருப்புப் பாதை நிலயத்தினின்றும் தென்மேற்கில் மட்சாலை வழி இரண்டு நாழிகை யளவில் அடையத் தக்கது. 1593. | "ஏகம்பன் காணவனென் னெண்ணத்தா"னெனப் போற்றிப் பாகம்பெண் ணுருவானைப், பைங்கண்விடை யுயர்த்தானை, |
|