பக்கம் எண் :


554திருத்தொண்டர் புராணம்

 

நாகம்பூ ணுகந்தானை, நலம்பெருகுந் திருநிற்றின
ஆகந்தோ யணியானை யணைந்துபணிந் தின்புற்றார்.

328

(இ-ள்.) வெளிப்படை. கச்சி ஏகம்பன் காணவனென் னெண்ணத் தானே" என்று துதித்து, ஒரு பாகத்தில் அம்மையக் கொண்ட திருவுருவுடையவரை, பசிய கண்ணுடைய இடபத்தைக் கொடியாகக் கொண்டவரை, பாம்புகளை அணியாகக் கொண்டவரை, நலம் பெருகும் திருநீற்றினை நிறையப் பூசிய திருமேனியின் அழகுடையவரை, அணைந்து பணிந்து இன்ப மடைந்தார்.

(வி-ரை.) "ஏகம்பன் காணவனென் எண்ணத்தான்" இது தாண்டகத் திருப்பதிகங்களின் குறிப்பும் கருத்துமாம். எனப் போற்றி - என்ற கருத்துடைய மகுடமுடைய, திருப்பதிகங்களாற் றுதித்து. முன்பாட்டிற். கூறியபடி பிற தலங்களைச் சென்று இறைஞ்சிய நாயனார் காஞ்சியின்மேல் வைத்த தொடர்ந்த பொருங்காதலினால் அங்கு மீண்டும் "துன்னினார்" ஆதலின் அக்காதலானது கச்சி ஏகம்பன் தம் எண்ணத்தில் நின்று அகலாமை காரணமாக உளதாயிற்று என்பது இப்பதிகங்களாற் பெறப்பட்டது.

பாகம் பெண் உருவான் - "அருந்தவத்தா ளாயிழையா ளுமையாள் பாகமமர்ந்தவன்காண்" (5) என்ற இத்தலத் திருத்தாண்டகக் ("உரித்தவன்காண்" என்ற பதிகம்) கருத்து. பெண்பாக உருவான் என்க.

திருநீற்றின் அணிநோய் ஆகத்தானை என்க. நலம் பெருகும் - திருநீற்றினால் விளையும் நலங்களைத் திருநீற்றுப் பதிகத்தாலும், உபநிடதங்களாலும் அறிக. "கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை, நீற்றவன் காண்" என்ற இத்தலத் திருத்தாண்டகக் கருத்து.

பாகம் பெண் - அருட்கோலமும், விடை யுயர்த்தல் - அறக்கோலமும், நாகம் பூண் - அன்புக் கோலமும், திருநீற்றின் அணி - இன்பக் கோலமும் குறித்தன.

328

கச்சித்திருவேகம்பம்

திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

கூற்றவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண்
         குவலன்காண் குவலயத்தி னீரா னான்காண்
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கு மின்காண்
         கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்
         நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்
ஏற்றவன்கா ணெழிலாரும் பொழிலார் கச்சி
         யேகம்பன் காணவனென் னெண்ணத் தானே.

1

அறுத்தான்கா ணயன்சிரத்தை யமரர் வேண்ட
         வாழ்கடலி னஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை
செறுத்தான்காண் டேவர்க்குந் தேவன் றான்காண்
         டிசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையிற்
பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து
         பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோ ணாலைஞ்
சிறுத்தான்கா ணெழிலாரும் பொழிலார் கச்சி
         யேகம்பன் காணனென் னெண்ணத் தானே.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- "எழிலாரும் பொழிலார் கச்சி யேகம்பன் காணவனென் னெண்ணத் தானே" என்பது பதிகக் கருத்தும் மகுடமுமாம். இரண்டு