1600.(இ-ள்.) வெளிப்படை.எழுதாத மறைகளைச் சொன்னவராகிய எழுத்தறியும் பெருமானாராகிய திருவொற்றியூர் இறைவரைத் தொழுது, அன்பு மீதூரப்பெற்று, நிலந்தோய்ந்து வணங்கி எழுந்து, உடல முழுதும் பரவசமாய் மயிர்ப்புளகம் கொள்ளத் திளைத்துக், கண்கள் தாரையாகக் கண்ணீர்சொரிய உடல் விதிர்த்து, விம்மினாராகி; 335 1601.(இ-ள்.) வண்டோங்கு.......எடுத்து - "வண்டோங்கு செங்கமலம்" என்று தொடங்கி; மனமுருக...பரவுவார் - மனமுருகப் பண் பொருந்திய சொற்களாலாகிய திருத்தாண்டகப் பதிகத்தைப் பாடித் துதிப்பவர்; விண்தோய்ந்த....கண்டு - ஆகாய நதியாகிய கங்கையைச் சடையில் வைத்த பெருமானது திருவுருவத்தைக் கண்டுகொண்டு; ஓங்கு.....அணைந்தார் - மிக்க ஆனந்தம் பெருகக் கைதொழுது திருக்கோயிற் புறத்தே அணைந்தவராய்; 336 1602.(இ-ள்.) விளங்கு......செய்தே - விளங்குகின்ற பெருமையுடைய திருமுற்றத்தில் பொருந்திய திருப்பணிகள் செய்தே; உளங்கொள் திருவிருத்தங்கள் - உள்ளத்திற் கொள்ளும் திருவிருத்தங்களும்; ஓங்கு திருக்குறுந்தொகைகள் ஓங்கும் திருக்குறுந்தொகைகளும்; களங்கொள் திருநேரிசைகள் - கண்டத்தையிடமாகக்கொண்டு பாடப்படும் திருநேரிசைகளும்; பலபாடி....வைகினார் - ஆகிய பலவற்றையும் பாடிக் கைதொழுது வளம்பொருந்திய அந்தத் திருத்தலததிற் பலநாள்கள் தங்கியருளினாார். 337 இந்த நான்கு பாட்டுக்களும் பொருளால் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டுரைக்க நின்றன. 1599. (வி-ரை.) அமர்ந்த - விரும்யி எழுந்தருளிய. பொருசிலையார் - நாகச்சிலையார் - திண்சிலையார் என்று அடைமொழிகளைத் தனித்தனி கூட்டி உரைத்துக் கொள்க. பொருசிலை - பொருதற்கு உதவும் வில். சிலை - வில். நாகம் - மலை. இங்கு மேருவைக் குறித்தது. திண்மை - கல்லாயிருந்தும் பிளந்திறுதலின்றி வளைந்தமையும், அம்பு எய்யப்படாமலே பகையை வென்றமையும், உலகிற்கு நடுவாதலும் முதலிய தன்மைகள். கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு - தூல லிங்கமாகிய கோபுரத்தை முன்னர் இறைஞ்சிப் பின் உள் புகுதல் முறை. புக்கு - கோயிலினுள்ளே புகுந்து. ஒருஞானம் - சிவனிடத்திலே மனம் ஒன்றிய சிவஞானம். "ஒன்றி யிருந்து நினைமின்கள்" (தேவா), "ஒருநெறிய மனம்வைத் துணர் ஞானசம்பந்தன்" (தேவா). ஒரு ஞானம் - ஒப்பற்ற ஞானம் - சிவஞானம் என்றலுமாம். தொண்டர் - தம்மை எதிர்கொண்ட வழித் தொண்டர். தொண்டருடன் உருகி - தொண்டர்களுடனாகி இறைவரை வழிபடுதல் ஒரு தனிச் சிறப்புடையது. இங்கு உருகி என்றது நாயனாரது உள்ள நெகிழ்ச்சியாகிய மனநிலையினையும், 1601-ல் மனமுருக என்றது அவ்வாறு உருகியதனால் விளைந்த பாடலாகிய பயனையும் கூறியபடி. கேட்ட அடியவரும் உலகமும் உருக என்றலுமாம். கரு நாமம் - கரு - பிறவி. நாமம் - (பிறவியின்) அச்சம். நாமம் - பெயர் என்று கொண்டு கருவினாலாகிய பெயர் தவிர்ப்பார் என்றலுமாம். கருவினால் வரும் பெயராவது சீவன் என்பது. அதைத் தவிர்த்தலாவது சீவன் என்ற தன்மையைக் கெடுத்துச் சிவ தத்துவத்தை அருளுதல். "ஓர்மாத்திரை யளவென், பேரிற் குறுகினேன்" என்று இக்கருத்தைப் பிற்காலப் பெரியார் சுவைபட விளக்குதல் காண்க. முன் வீழ்ந்தார் - முன் - சந்நிதியின் முன்பு. வீழ்ந்தார் - உடல் முழுதும் நிலந் தோயுமாறு விழுந்து இறைஞ்சினார். விழுந்த செயலை இதனாலும், உடல அங்கங்கள். |