பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்565

 

முழுதும் நிலந்தோய நமக்கரித்ததும் எழுந்ததுமாகிய செயல்களை மேல்வரும் பாட்டாலும் ("நிலத்தில் தோய்ந்தெழுந்தே") அறிக.

பெரு நாகத்தின் - என்பதும் பாடம்.

334

1600. (வி-ரை.) எழுதாத மறை - வேதம். அளித்த - சொன்ன. எழுத்தறியும் பெருமான் - திருவொற்றியூர் இறைவர். தலசரிதக் குறிப்பு. "திருவொற்றியூர் நீங்கவென் றெழுதும்" (1116) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க.

நிலத்தில் தோய்ந்து - எட்டங்கங்களும் நிலந்தோய வணங்கி; எழுந்தே - "வீழ்ந்தார்" (1599) என்றபடி வீழ்ந்த நிலையினின்றும் எழுந்தே.

அங்கமெலாம் மூழ்க என்க. முகிழ்த்த மயிர்க்கால் - மயிர்க்கால்கள் தோறும் உடல் முழுதும் புளகம் கொள்ள - மயிர்க் கூச்செறிய. முகிழ்த்தல் - நேர் நிற்றல்.

விழு தாரை - வீழ்கின்ற தாரையாகிய - மழைபோல - நீரை. தாரை - இங்கு இடையறாது பொழியும் நீருக்கு வந்தது.

விதிர்ப்புறுதல் - அன்பின் மிகுதியால் அசைதல். நடுக்குறுதல்.

மெய்ம்மயிர் முகிழ்த்தல் - கண்ணீர் பொழிதல் - விதிர்ப்புறுதல் - விம்முதல் இவை அன்பின் மிகுதியாலாகிய மெய்ப்பாடுகள்.

விம்மினாராகிப் பாடிப் பரவுவார் என்று வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க.

335

1606. (வி-ரை.) "வண்டோங்கு செங்கமலம்" - இது திருத்தாண்டகப் பதிகத்தின் தொடக்கம். எடுத்து - தொடங்கி.

பண் தோய்ந்த சொல் திருத்தாண்டகம் - பண் - இசையமைதியினையும், சொல் - சொல்லமைதியினையும், தாண்டகம் - யாப்பமைதியினையும் குறித்தன.

திருவுருவம் - கண்டு ஓங்கு களி சிறப்ப - பதிகத்தின் பொருளமைதிக் குறிப்பு. பதிகக் குறிப்பும் பாட்டுக் குறிப்பும் பார்க்க.

336

1602. (வி-ரை.) விளங்கு......பணி செய்தே - திருமுன்றிலில் நாயனார் தம் நியதிப்படி திரு உழவாரப் பணிசெய்து. ஏகாரம் - தேற்றம். கைத்திருப்பணி செய்தலை நாயனார் எங்கும் விடாது செய்து வந்தனர் என்பது ஆசிரியரால் நமக்கு நினைவூட்டும் வகையால் அங்கங்கும குறிக்கப்படுதல் காண்க. சைவ சமயாசாரியராகிய பெருமக்கள் நால்வருள், நாயனார் ஒருவர்தாம் இவ்வாறு கைத்திருப்பணியும் செய்தனர்.

உளங்கொள் திருவிருத்தங்கள் - நாயனாரது திருவிருத்தப் பதிகம் ஒன்றே கிடைத்துள்ளது. விருத்தங்கள் - என்றது பதிகப் பாட்டுக்களைக் குறிப்பது போலும்.

உளங்கொள் - இறைவரது உருவும் திருவும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அருளினவென்பது. பதிகக் குறிப்பும் பாட்டுக் குறிப்பும் பார்க்க. பயின்று உள்ளத்தில் கொள்ளத்தக்க என்றலுமாம்.

ஓங்கு திருக்குறுந்தொகைகள் - ஓங்குதலாவது - அடியளவாற் சிறியதேனும பொருளாழத்தானும், உபதேச முறைமையின் அமைதலானும் பெருமைகொண்டிருத்தல். குறுந்தொகை - யாப்பமைதி. குறுந்தொகைகள் - பதிகம் ஒன்றே கிடைத்துள்ளமையின் பதிகப் பாட்டுக்கள் என்க.

களங்கொள் திருநேரிசைகள் - திருநேரிசைகள் - கிடைத்துள்ள இரண்டு பதிகங்களையும் குறித்தது. நேரிசை - யாப்பமைதியும் பண்ணமைதியும் குறித்தது. களங்கொள் - திருநேரிசை பாடும்போது ஒலியானது மிடற்றை இடமாகக் கொண்டு பிறத்தல் குறிப்பு.

களங்கொள் - எப்போதும் சொல்வதற்குரிய என்றலுமாம்.

பல - இவ்வாறாகிய பல திருப்பாட்டுக்களையும்.

வளங்கொள் திருப்பதி - "ஒற்றியூர் வள நகரத்து" (1599) என்றமையும் பிறவும் காண்க. வளம் - தெய்வவளம். உலக வளமுமாம்.

337