திருவொற்றியூர் I திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| வண்டோங்கு செங்கமலக் கழுநீர் மல்கு மதமத்தஞ் செஞ்சடைமேல் மதியஞ் சூடித் திண்டோள்க ளாயிரமும் வீசி நின்று திசைநேர நடமாடிச் சிவலோ கனார் உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி யொற்றியூர் மேய வொளிவண் ணனார் கண்டேனான் கனவகத்திற் கண்டேற் கென்றன் கடும்பிணி யுஞ்சுடுந் தொழிலுங் கைவிட்டவே. 1 மத்தமா களியானை யுரிவை போர்த்து வானகத்தார் தானகத்தா ராகி நின்று பித்தர்தாம்போலங்கோர் பெருமைபேசிப்பேதையரைச்சுறுத்திப்பெயரக்கண்டு, பத்தர்தாம் பலருடனே கூடிப் பாடிப் பயின்றிருக்கு மூரேதோ பணியீ ரென்ன, வொத்தமைந்த வுத்திரநா டீர்த்த மாக வொளிதிகழு மொற்றியூ ரென்கின் றாரே. மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை மலையல்லை கடலல்லை வாயு வல்லை, யெண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை யிரவல்லை பகலல்லை யாவு மல்லை, பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே, யுண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை யுணர்வரிய வொற்றியூ ருடைய கோவே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- தலைவரைப் பிரிந்த தலைவி பிரிவாற்றாது வருந்தி யிருப்பவள், தலைவரைக் கனவிற் கண்டு மயல்மிக்க நிலையுற்று, விழித்துக், கனவுமிழந்த நிலையில் கூறும அகப்பொருட் டுறையில் அருளப்பட்டது இத்திருப்பதிகம். உயிர் இறைவனிடம் ஈடுபட்டுச் செய்யும் முறைப்பாடு உட்குறிப்பு. 9-வது பாட்டு இறைவர் உலகிறந்து நிற்கு நிலைபற்றி எழுந்தது. கனவிழந்திரங்கல் என்பது நெய்தற்றிணைக்குரிய இரங்கல் என்னும் உரிப் பொருள் பற்றியது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கமலம் - கழுநீர் - மத்தம் - இறைவர் சடையிற் சூடுபவை. தோள்களாயிரம் - இறைவரது எங்கு நிறைந்த திருமேனி. ஆயிரம் - அனேகம். "ஆயிரம் பொன்வரை போலு மாயிரந் தோளுடை யானும்" (ஆரூர் - நேரிசை.) உண்டார்.....வேண்டி - நஞ்சுண்ட கருத்து உலக முறுதி கண்டு உய்யும் பொருட்டு. கண்டேன்.....கைவிட்டவே - கனவிற்கண்ட அகப்பொருள். கடும்பிணி - காமமிக்க நிலை. சுடுந்தொழில் - தலைவரைப் பிரிந்த நிலையில் நிலா முதலிய தண்ணிய பொருள்களும் சுடும் தன்மை பூண்டு உடற்றுதல். இனிக், கனவகத்திலும் நனவிற் போலக் காணும் நிலை கைகூடவே, கடும்பிணி - பிறவி நோயும், சுடும்தொழிலும் - இறந்துபட உடலைச்சுடும் தொழிலும், கைவிட்ட - இல்லையாயின; என்று பிறிதோருண்மைப் பொருளும் காண்க. -(2) பாகமது ஓர் பெண்ணுடையார் ஆயினும் பரமயோகி என்க. காமத்தால்...கண் மூன்றினார் - காமனை முனிந்த செயல்பற்றிக் கூறியது தலைவனைப் பிரிந்தாருக்கு அவனால் வரும் வேதனை நோக்கித் தலைவி எரிந்து கூறியதென்க. "காமனை முன்செற்ற தென்றா ளவளிவள் காலனென்னுந், தாமநன் மார்பனைமுன் செற்ற தென்றுதன் கையெறிந்தாள்" (பொன் - அந் - 45). காமத்தால் - காமன்கொண்ட காமங்காரணமாக. ஓமத்தால் - வேதமந்திர வேள்விகள் செய்யுமாற்றால். -(3) கள்ளம். "உள்ளங்கவர் கள்வன்", "உள்ளத்தை நீர் கொண்டீர்" என்று இக்கருத்தை விளக்கப்பட்டது. -(4) கலங்கள் - மரக்கலங்கள். நாவாய் - கப்பல் என்ப. நின்று தோன்றும் - திருவொற்றியூரின் அணிமையில் கலங்கள் கரைசேருந் துறை அந்நாளிலும் |