ஒன்றரைக் கண்களே யாம் என்பது. இன்றரை.....இல்லை - அரைக்கண்ணுடையோர் எங்கும் இல்லை; திருவொற்றியூரர்பால் இவ்வதிசயம் கண்டோம் என்பது. நிந்தைத்துதி. கண்ணைப்பற்றிக் கூறியது தலைவர் கண்ணோட்ட மின்றிப் பிரிந்து உள்ளமை குறிப்பு. -(8) ஒற்றியூர் - ஒற்றி - (அடைவு வைத்துக்கொண்டு கடன் வாங்குதல்) என்ற சொற்சிலேடை பற்றி எழுந்த கருத்து. ஒற்றியூர் - ஒற்றி வைத்த ஊர். "ஒற்றியூர் என்ற ஊனத்தினால்", "ஒற்றி யூரே லும்ம தன்னு" (நம்பி). வண்டு யாழ் செய்யும் - வண்டுகள் யாழ்போலப் பண் பாடுதற்கிடமாகிய. பெற்றி - தன்மை. உறும் என்று - விலைப்பணம் கிடைக்குமென்று. விலைப்படுத்தல் செய்யத் தக்கதென்று. வீற்றி கண்டாய் - விற்று விடாதே. இடம் இது ஒப்பது இல் - விற்றம் வேண்டாவென்று மறுத்துக் கூறுதற்குக் காரணம். மாற்றி யாவருங்கொள்வர் - இதன் சோலை - கா முதலிய செழிப்புக்களைக் கண்டால். யாரும் ஆசைப்பட்டு இதனைப் பெற முயல்வர். -(9) பிரிவாற்றாது தன் தீவினையை நோக்கித் தலைவி கூறியது. ஒற்றியூரன் எனது சிந்தை பிரியாதிருக்கின்றபடியால், இத்தீவினை உலகமெல்லாந் திரியும்படி வருத்தினும் என்ன செய்ய வல்லது?"-(10) திருமுடி - கடுக்கைக்கும், தலைக்கும், கங்கைக்கும், அரவுக்கும், திங்கட்கும் இருப்பிடமாக இருத்தலின் அவ்வவற்றின் இயல்புக்குத் தக்க வெவ்வேறு தன்மை பெற்ற இடமாக அமைந்து உள்ளது. கடுக்கை - கொன்றை. கொன்றை முல்லைநிலத்துக் குரியது. முறுவல்......தலை - நகுதலை - நகுசிரம் என்ப. இது இருடிகள் வேள்வியில் பெற்று அழிவு செய்ய ஏவியது. சுடலைக்களறி - சுடு காட்டின் புறம். மண்டையோடுகள் கிடைக்குமிடம்; வேலை - கடல்; கங்கை சேர்ந்து தங்குமிடம்; புற்று - அரவு தங்கு மிருப்பிடம். வானம் - நிலாத் தங்குமிடம். முல்லை - பாலை (சுடலை) - நெய்தல் (வேலை) - குறிஞ்சி (புற்று) - என் றித்திறத்த நாற்றிணைக் குறிப்பும் பெற வைத்தலால் இறைவர் எல்லா உலகும் காலமும் ஆகித், தம்மிற் பொருந்த உள்ளவர் என்ற குறிப்புப்படக் கூறியதுமாம். கலை நிரம்பாத் திங்கள் - பிறை. (11) பருகின - என்பது எதுகை நோக்கிப் பருக்கின என விகாரப்பட்டு நின்றது. என் செய்கேன் - இரங்கற் குறிப்பு. பண்டங்கன் - பண்டரங்கன் - பண்டரங்கம் என்ற கூத்தாடுவோன். V திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| ஒற்றி யூரு மொளிமதி பாம்பினை, யொற்றி யூருமப் பாம்பு மதனையே, ஒற்றி யூர வொருசடை வைத்தவன், ஒற்றி யூர்தொழ நம்வினை யோயுமே, 1 வரையி னாலுயர் தோளுடை மன்னனை, வரையி னால்வலி செற்றவர் வாழ்விடம் திரையி னாற்புடை சூழ்திரு வொற்றியூர், உரையி னாற்பொலிந்தாருயாந்தார்களே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- (1) ஒற்றியூரிறைவர் நீற்றுத் தண்டத்தராய். நினைவார்க் கெலாம் ஊற்றுத் தண்டொப்பர்; நெஞ்சே அவரடியே யடை; அவரை அடையும் உள்ளத்தவர் வினை அல்கும்; அவரை உரைப்பவர் உயர்ந்தவர்கள். பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) ஒற்றி....ஒற்றியூர - பாம்பும் மதியும் தம்மிற் பகைப் பொருள்களாயினும ஒன்றை யொன்று ஒற்றி யூரும்படி: மதியை மறக்கும் அரவை அது செய்யாமற் செய்து பகை தீர்ப்பவன் உயிரறிவை மறைக்கும் ஆணவப் பகையின் வலிமை போக்குவன்; ஆதலின் தொழ வினை ஓயும் என்பது குறிப்பு. -(2) ஈட்டவே - அணுகி உடனாயிருக்கவே. ஈண்ட என்பது ஈட்ட என வந்தது.- (3) கூற்றுத்தண்டம் - இயமதண்டனை. ஆற்றுத் தண்டத்து அடக்கும் - ஆற்றும் தண்டனையினால் - உதையினால் - அக்கூற்றுவனை அடக்கும். நீற்றுத் |