பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்575

 

தில்லையப்பாற், றீயா யெரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே" என்ற திருவிருத்தக் கருத்து. முன்காலத்தில் என்றலுமாம். கணை எய்யுமுன் என்றதும் குறிப்பு. இவையெல்லாம் உட்கொண்டு "புரமூன்று மெரித்தருள் வெடுத்த தனிப் பொருப்பார்வெஞ் சிலையார்" (1604) என்றது காண்க. முந்தி என்றதற்கேற்பச் சிந்திப்பார்...செல்வனார் - நினைப்பார்க்கு நினைக்கும் முன்னே வினை தீர்ப்பர் என்றதும் விரைவுக் குறிப்பு. அந்திக்கோன் - சந்திரன். சந்திரனுக்கு அருளியது தலவரலாறு. பந்தி - கற்றையாகிய; பின்னல் கொண்ட; வரிசை பெற விரிந்த. -(2) படர்ந்த நாகத்தா - நீளர வந்தனைப் பற்றி ஆட்டுவர் (4) தீயதொர் பாம்பு மாட்டுவர் (9); படவரவொன் றதுவாட்டி - (தாண் -3). தலவரலாறு, தரலவிசேடம் பார்க்க. (3) காறு - கரிய. கொடிய. கொல்லும் விடமுடைய. (4) வெற்றியூர் - தேவார வைப்புத்தலங்களுள் ஒன்று; ஒற்றி - ஊர்ந்து. உகந்து என்றலுமாம். (5) மட்டவிழ்ந்த.....வேட்கையார் - கண்ணி - தலைவி. மலர் நெடுங்கண்ணி - பூப்போன்ற கண்களையுடையவள். மட்டு - தேன். மணம் என்றலுமாம். இப்பாட்டுத் தாய் கூற்றாகிய அகப்பொருளில் அமைந்தது. தோழி கூற்றுமாம். இப்பாட்டுத் தாய் கூற்றாகிய அகப்பொருளில் அமைந்தது. தோழி கூற்றுமாம். துட்டர் - துட்டுத் தன்மையுடையவர். -(6) எல்லி - வெயில். தோழி கூற்றாகிய அகப்பொருள். மேல் வரும் இரண்டு பாட்டுக்களும் இக்கருத்தின. -(10) பரியர் - நுண்ணியர் - அணுவோர் அண்டமாம்படி நேரிய னாதலால் உயிர்க்குயிராதலும், அண்டமோர் அணுவாம்படி பரியனுமா தலால் எங்குமாய் நிற்றலும் பெறப்படும். பாசூரடிளே - பதிகத்தின் மகுடம்.

II திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி, வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற
வெண்ணாகி யெழுத்தாகி யியல்பு மாகி யேழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற
கண்ணகி மணியாகிக் காட்சி யாகிக் காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற
பண்ணாகி யின்னமுதாம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டபடியே னுய்ந்த வாறே.

புத்தியினாற்சிலந்தியுந்தன்வாயினூலாற் பொதுப்பந்தலதுவிழைத்துச்சருகான்மேய்ந்த
சிந்தியினாலாசாண்டு சிறப்புச் செய்யச் சிவகணத்துப் புகப்பெய்தார் திறலான் மிக்க
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா வன்பு விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்
பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- விண் முதலிய பூதங்களும், எண்ணும் எழுத்தும், கண்ணும் மணியும் காட்சியும் ஆவார்; வேதமும் ஆறங்கமுமாகி விரியும் பொருட்கெல்லாம் வித்துமாவர்; அனல்கையேந்திக் காளிகாணக் குடமுழவச் சதிவழியே கூத்தாட வல்ல குழகர்; வேடனாய் ஏனத்தின் பின் கூடினார்; சிலந்திக்கும் ஆனைக்கும் அருளினார்; அருமந்த நன்மையெல்லாம் அடியார்க்கீவர்; விடமுண்ட கண்டர்; கூற்றுவனை உதைத்து அந்தணனைக் கைக்கொண்டருளியவர் என்றிவ்வாறு பல பெருமைகளால் அறியப்படும் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறு.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) இயல்பு - விரும்புகின்ற - இயல்பு - வேதம் என்க. இயல்புடையதனை இயல்பென்றது உபசாரம். எண் - கணிதமுடைய சோதிடம். தருக்கமுமாம். எழுத்து - இலக்கணம். "எண்ணெண்ப" (குறள்). கண்மணி - காட்சி - இறைவன் காட்டுமுபகாரம் செய்தல் குறிப்பு. -(2) வித்து - விந்து - சுத்த மாயை. கூதல் - குளிர். சாரல். -(3) வரைகள் ஏழு - கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், கந்தமாதனம், "ஏழ்கடலு மேழ்மலையுமானான்" (தாண்), விசும்பின் உச்சி - ஐம்பூதங்கடந்த நிலை. குட முழவச் சதி - நந்தி