பக்கம் எண் :


590திருத்தொண்டர் புராணம்

 

மலரால் அருச்சித்துப் பேறு பெற்றதனால் மல்லிகார்ச்சுனர் எனப் பெயர் வழங்குவதாயிற்று என்பதும் தல வரலாறு. மூவர் பாடலும் பெற்ற பெருமையுடையது. இதற்குச் சென்று சேவிக்கும் அருமை பற்றிச் "செல்லல்லுற வரிய சிவன் சீபர்ப்பத மலையே" என்று ஆளுடைய நம்பிகள் விதந்து போற்றியருளினர். இது திருக்கயிலையினை ஒத்ததலமாதலின் மகாசிவராத்திரி இங்குச் சிறப்பு. காளத்தியிலும் அவ்வாறே காண்க. சுவாமி பருப்பத நாயகர்; அம்மை - பருப்பத நாயகி - பிரமராம்பாள்; மரம் - மருது; பதிகம் 3.

இது கர்னூல் ஜில்லாவில் M. S. M. இருப்புப் பாதையில் நந்தியால் என்ற நிலயத்தினின்றும் வட கிழக்கில் கற்சாலை வழி 32 நாழிகையளவில் உள்ள ஆத்ம கூர் வரையில் மோட்டார் பஸ் வழி சென்று, அங்கு நின்றும் நாகலூட்டி - பெட்சேருவு - என்ற இடங்களின் வழியாய்க் கால் நடையில் மலை ஏறி 32 நாழிகையளவில் அடையத்தக்கது. ஆத்மா கூரினின்றும் மலையேற்றம் 32 நாழிகை யளவு உள்ளது. இடையில் தங்கு மிடங்களும், பிற வசதிகளும் உண்டு.

பல நாடுகளும் பலர் சூழ்ந்து வட நடந்தது - (பருப்பதம் முதல் வாரணாசி வரை.)

தெலுங்கு - கருநடம்

1615.

அம்மருங்கு கடந்து போமவ ரார்கொள் சூல வயிற்படைச்
செம்மல் வெண்கயிலைப் பொருப்பை நினைந்தெ ழுந்ததொர்சிந்தை யால்
எம்ம ருங்குமொர் காத லின்றி யிரண்டு பாலும் வியந்துளோர்
கைம்ம ருங்கணை யுந்தெ லுங்கு கடந்து கன்னட மெய்தினார்;

திருநதி - மாளவம்

1616.

கருந டங்கழி வாக வெய்திய பின்க லந்தவ னங்களுந்
திருநதித் துறை யாவை யும்பயில் சேணெ டுங்கிரி வட்டையும்
பெருந லங்கிளர் நாடு மெண்ணில பிற்ப டச்செறி பொற்பினால்
வருநெ டுங்கதிர் கோலு சோலைய மாள வத்தினை நண்ணினார்;

இலாடம் - வெற்பு - வனங்கள் - ஆறு - மத்திமபைதிரம்

1617.

அங்கு முற்றி யகன்று போகி
         யருஞ்சு ரங்கள் கடந்துசென்
றெங்கு மிக்க வறங்க ணீடு
         மிலாட பூமி யிகந்து போய்
மங்குல் சுற்றிய வெற்பி னோடு
         வனங்க ளாறு கடந்தயற்
பங்க யப்பழ னத்து மத்திம
         பைதி ரத்தினை யெய்தினார்;

352

வாரணாசி. கற்சுரம் தனி சென்றது

1618.

அன்ன நாடு கடந்து கங்கை
         யணைந்து சென்று வலங்கொள்ளும்
மின்னு வேணியர் வார ணாசி
         விருப்பி னோடு பணிந்துடன்
பின்னை ணைந்தவர் தம்மை யங்க
         ணொழிந்து கங்கை பெயர்ந்துபோய்
மன்னு காதல்செய் நாவின் மன்னவர்
         வந்து கற்சுர முந்தினார்.

353