1631. (இ-ள்.) "மீளும்...கடன்" என - "இங்கு நின்றும் மீண்டு செல்லும் அவ்வளவே இனி உமக்குக் கடனாவது" என்று; விளங்கும்......சொல்ல - விளங்குகின்ற தோளிலும் திருமேனியிலும் கிடந்து துவளுகின்ற முப்புரி நூலினையுடைய முனிவர் சொல்ல; "ஆளும் நாயகன்...மீளேன்" என - "என்னை ஆளும் நாயகரது திருக்கயிலையில் இருக்கும் கோலத்தைக் கண்டபின் பல்லது, அழியும் தன்மையுள்ள இந்த உடலைக்கொண்டு மீளமாட்டேன்" என்று; மறுத்தார் - (நாயனார்) மறுத்துரைத்தனராக; 366 1632. (இ-ள்.) ஆங்கு மற்றவர் துணிவு அறிந்து - அவ்விடத்தில் அவருடைய துணிவை உலகம் அறிந்து உய்யுமாறு தாம் அறிந்து; அவர் தமை அறிய - அவர் தம்மை அறிந்துகொள்ளும்படி; நீங்கும் மாதவர் - நீங்குகின்ற முனிவர்; விசும்பிடைக் கரந்து - ஆகாயத்தில் மறைந்து; நீண் மொழியால் - நீண்ட தம் வாக்காகிய அசரீரியால்; ஓங்கு......உரைப்ப - "ஓங்கும் நாவுக்கரசனே! எழுந்திரு" என்று சொல்ல; தீங்கு...ஒளி திகழ்வார் - ஊறுகள் எல்லாம் நீங்கிய உடம்புடனே எழுந்து ஒளியில் விளஙகுவாராகி; 367 1633. (இ-ள்.) அண்ணலே! - பெருமையுடையவரே!; எனை...அமுதே! என்னையும் ஆட்கொண்டருளிய அமுதாகியவரே!; விண்ணிலே...நாயகனே! - ஆகாயத்தினிடமாக மறைந்து அருள்செய்யும் வேதநாயகரே!; கண்ணினால்...புரி - திருக்கயிலையில் வீற்றிருந்தருளும் உமது திருக்கோலத்தை, அடைந்து, நான் கண்ணினாற் கண்டு தொழும்படியாக விரும்பி யருள்புரிவீராக!; எனப் பணிந்தார் - என்று சொல்லி வேண்டிக்கொண்டு கீழ் வீழ்ந்து பணிந்தனராக; 1634. (இ-ள்.) தொழுதெழுந்த......நோக்கி - அவ்வாறு தொழுதெழுந்து நின்ற நற்றொண்டராகிய நாயனாரை நோக்கி; விண்தலத்தில்...வாக்கினால் - ஆகாயத்தினின்றும் எழுகின்ற தமது அசரீரியாகிய பெருந்திருவாக்கினாலே; "இப்பொய்கை ... காண்" என - இந்தப் பொய்கையில் முழுகி, நாம் திருக்கயிலையில் வீற்றிருக்கும் அம்முறையினையே நம்மைக், குற்றமற்ற சிறப்புடைய திருவையாற்றிலே காண்பாயாக" என்று; இறைவர் - முதல்வராகிய சிவபெருமான்; பணித்தார் - ஆணையிட்டருளினார். 369 இவ்வேழு பாட்டுக்களும் சொற்றொடர்பும், பொருட்டொடர்பும் பெற்று ஒரு முடிபாக்கி உரைக்க நின்றன. 1628. (வி-ரை.) இப்பாட்டு, இறைவர் முனிவராய் வந்த திருக்கோலத்தை நம் கண்முன் கொண்டுவர ஓவியம்போல வரைந்து காட்டும் திறம் காண்க. இஃது ஆசிரியருக்குரிய சிறப்பு. நாயனாரது திருவடிவத்தை 1405 - 1490 பாட்டுக்களிலும், "சிந்தை யிடையறா வன்பும்" (திருஞான - புரா - 270) என்ற திருப்பாட்டினும் எழுதிக்காட்டிய ஆசிரியர், நாயனார் கண்ட இறைவரது திருக்கோலத்தை இவ்வொரு பாட்டால் கூறும் முறைமையும், "அவனருளாலே அவன்றாள் வணங்ங்கி" என்றபடி அருள்வழியே அவரைக் கயிலையிலிருந்த அம்முறையில் நேர்காணும் திருக்கோலத்தை 1640 முதல் 1644 வரை ஐந்து திருப்பாட்டுக்களாலும் அறிவிக்கும் முறைமையும் கருதுக. மெய்த்தவராகி நின்றவர் தமைநோக்கி - உணர்வுறப் - பெரியோர் - விளம்பு வாராய் (1628), "முனியே! வடகயிலை - அண்டர் நாயகர் மலைமகளுடனிருக்கும் பரிசு கண்டு - கும்பிட அடைந்தேன்; என்குறிப்பு இது" எனக்கூற (1629), முனி, "கயிலை வரை மானுடப்பான்மையோர் அடைவதற்கு எளிதோ?; அமரரும் அணுகுதற்கு அரிது! - வெஞ்சுரத்து வந்து என் செய்தீர்! (1630) |