பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்615

 

விரும்பி வீற்றிருக்கும் தன்மை இங்கும் ஆகும்படியாக; சக்தியும் சிவமும் ஆம் சரிதை - சத்தியும் சிவமுமாகும் தன்மையில்; பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே - பற்பல யோனிகள் எல்லாம் விளங்கும் முறைமையைக் கண்டு வணங்கிக்கொண்டே; மன்னும்...வந்தார் - நிலைபெற்ற பெருமுனிவராகிய நாயனார் தமது பெருமானது திருக்கோயிலின் முன் வந்தருளினார்.

374

இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1637. (வி-ரை.) வம்புலாம் மலர்வாவி - கயிலைமலைச் சாரலில் நாயனார் மூழ்கியது - "நன்னெடும் புனற்றடம்" (1626), "பாற்றடம் புனற்பொய்கை" (1635) எனப்பட்டதுடன் இதனை ஒப்பு நோக்குக. மூழ்கியது புனற்பொய்கையாக, எழுந்தது வம்புலா மலர்வாவி யாயிற்று. நாயனார் வந்தெழும் பெருமை நாம் இன்றுங் காணவுள்ளது என்பது குறிப்பு. வம்பு - புதுமையுமாம். "வம்பார் குன்றம்."

வந்து - வடகயிலை மலைச்சாரற் பொய்கையுள் மூழ்கியவர் தென்றிசை ஐயாற்று வாவியின் கரையில் வந்த நீளமாகிய அளவுக் குறிப்பு. கயிலை வழியேறிச் சென்று நின்றநிலை 1613 முதல் 1625 வரை 13 திருப்பாட்டுக்களாலும், அங்கு நின்று அவ்வளவும் மீண்டு வந்தது, வந்து என்ற ஒரு மொழியாலும் உரைக்கப்பட்ட அமைதி குறிக்கத் தக்கது. ஒன்று, ஏறிச் செல்தும் நிலையும், மற்றொன்று இறங்கிவரும் நிலையுமாம்; ஒன்று நடந்து நிலத்தின் வழி நிகழ்ந்தது; மற்றொன்று நீரின் வழிச்சார்ந்தது; ஒன்று வெளிமுகமாகவும் மற்றையது உள்முகமாகவும் கூடிற்று. இரண்டும் திருவருள் வழியே நிகழ்ந்தனவாயினும், மீண்டு வந்த இச்செயல் இறைவர் அருள் மொழியாற் பணித்த (1634) அவ்வழியே தலைநின்று தமது ஆன்மபோத முயற்சி என்பது சிறிதுமின்றி நிகழ்ந்த செயலால் அதி சூக்குமத் தன்மையில் உளதாயிற்று; ஆதலின் ஆசிரியர் அதனை வந்து என ஒரு மொழியால் அதி நுட்பமாகிய வழியாலுரைத்தனர். ஆதலின் இஃதெவ்வாறு கூடிற்று என்ற ஆராய்ச்சியில் மக்களின் மனது புகுதலாகாது என்பது துணிக. "ஆட்பாலவர்க் கருளும் வண்ணமு மாதிமாண்பும், திருப்பாசுரத் திருவாக்கும், "நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால், ஓதுமெல்லை யுலப்பில வாதலின், யாது மாராய்ச்சி யில்லையாம்" (திருஞான - புரா - 833) என்று ஆசிரியர் அதனை விரிவுரை செய்ததும் இங்கு நினைவு கூர்தற்பாலன. இதுபற்றியே "திருவருட் பெருமை யாரறிவார்" (1636) என்று முன்பாட்டில் எடுத்துக் காட்டியருளினார்."

ஏறி - "ஏற்றினார்" (1635) திருவருளின் வழி ஏறி." "யாதும் சுவடுபடாமல் ஐயாறடைகின்றபோது" என்ற இத்தலத் தேவாரமும் இக்குறிப்பு.

உம்பர்...உணர்வார் "திரு அருட்பெருமை யாரறிவார்" (1636) என்று வினாவினாற் கூறிய ஆசிரியர் அதனையே தொடர்ந்துகொண்டு, அத்திருவருள் உணர்த்த அதனை அனுபவத்தில் உணர்ந்த நாயனாரையன்றி வேறு யாவரும் உணரும் வலியிலர்; நாயனார் உணர்வாராகி என்றதாம். உணர்வார் எதிர்கால வினையெச்சமுற்று. உணர்வார் - படிந்து எழும்படியார் (1637) வந்து - உறுவார் - கண்டார் (1638), பணிந்தே - வந்தார் (1639) என்று இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக் கொள்க.

"எம்பிரான் தருங் கருணை கொல் இது" என - அடியேனையும் பொருட்படுத்திப் பெருமான் செய்யும் திருவருளே இது என்று நாயனார் மனத்து எண்ணி ஆராமை மிக்கனர் என்க. இந்த ஆராமையாற் கண்ணிர் பெருகிப் பொழிந்தது என்பது "இருகண் பம்பு தாரை நீர் வாவியிற் படிந்து" என்பதனால் உணர்த்தப்பட்டது.

இருகண்...படியார் - மலர் வாவியில் வந்தேறும் நாயனார் கண்ணீரின் பெருந்தாரை தமது திருமேனியினை நனைக்க நின்றமையால் அந்த நீர் வாவியிலன்றிக்