அவ்வெள்ளிப் பொருப்பில் அமர்தன்மை ஆம்படி - என்க. வெள்ளிப் பொருப்பு - திருக்கயிலாயமலை. தன்மை ஆம்படி - அத்தன்மை பொருந்தும்படியினால்; விளங்கும்படியினால்; "தன்னுள்ளே இருவேறு வகைப்பட்ட தன்மைகள் வகுத்தலான்" என்றபடி; சத்தியும்...பயில்வன - சரிதை - நிலைமை; தன்மை. சரிதையின்கண் பயில்வன - என ஏழனுருபு விரிக்க. பன்மை யோனிகள் - 84 இலக்கம் என்று வகுக்கப்பட்ட பற்பலவாகியயோனி பேதங்களாய் வரும் உயிர்கள். யோனிகள் பயில்வன - சத்தியும் சிவமுமாம் சரிதைக்கண்ணே யோனிகள் எல்லாம் பயிலுதலாவது, இறைவன் "சத்தி யும் சிவமுமெனத் தன்னுள்ளே இருவேறு வகைப்பட்ட தன்மைகள் வைத்தலான் - பல்வேறு வகைப்பட்ட உயிர் வடிவங்களனைத்தும் குறியானுங் குணத்தானும் ஆண்பெண்ணென அவ்யோனிக்குள் இருவேறு வகையா யடங்கித் தம்முட்கூடிக்களித்து வாழாநிற்குமியல்பு. (சித்தி - 1 - 69 - மாதவச் சிவஞான முனிவருரை). சத்தியும் சிவமும் ஆம் சரிதை (க்கண்) யோனிகள் பயில்வன - "பீட லிங்கத்தினியல்பு" (சித்தி 1-69) என்று இதனை ஞானசாத்திரம் பேசும். "தாமே உலகுக்கு முதல் என்பதனைக் கண்கூடாக விளக்கு முகத்தால் தனது இலச்சினையை உலகெங்கும் பொறித்து அறியவைத்தாங்கு உயிர்கள் பெண் ஆண் என வகுக்கப்படுவன. "சத்தியுஞ் சிவமு மாய தன்மையிவ் வுலகமெல்லாம், ஒத்தொவ்வாவாணும் பெண்ணு முணர்குண குணியு மாகி, வைத்தனன்" (சித்தி-1-69) என்ற உண்மையை இங்குக் காண்க. யோனிகள் பயில்வன பணிந்தே - "அவளால் அந்த வாக்கமிவ் வாழ்க்கையெல்லாம்" (சித்தி1-69) என்றபடிப், "பிறப்புக் கியைய வடிவங்கள் எல்லாம் ஒத்தும் குறிகுணங்கள் ஒவ்வாது பெண்ணென ஆணென இருவேறுவகைப்பட்டு நிற்றலாலும், அவயவப் பகுப்புடைமை, தோன்றி நின் றழியும் முத்தொழிலுட்படுதல், கருத்தாவை யுடைமை, சங்காரக்கடவுளினின்றும் தோன்றுதல், அவனையே முதற் கடவுளாக உடைமை, என்னும் இத்தன்மைகள் புலப்பட நிற்றலாலும்," நிற்பனவும் சரிப்பனவுமாகிய உயிர்கள் தத்தம் துணையொடும் பொலிந்து நிற்றலால் சத்தியும் சிவமாஞ் சரிதையிற் பயில்வன வென்பதும், அது கயிலையில் அம்மையோடுடனாகி இறைவர் விளங்கும் நிலையைப் புலப்படுத்துவதென்பதும் திரு அருள் காட்டக் கண்டாராதலின் பணிந்தனர் என்பதாம். இவ்வாறன்றிச், சராசரமுழுதும் பெண் ஆணாகச் சத்தியும் சிவமுமாய்த் தோன்றும் இதுவே அப்பர் பெருமானுக்கு இறைவர் வழங்கிய கயிலாயக் காட்சி என்றும், சராசர முழுதும் சத்தி சிவமாக வழங்கப்படும் நிலையே கயிலாயக் காட்சியாம் என்றும் இங்குவிசேட உரை காண்பாருமுண்டு. இக்காட்சி காணப்பட்ட வுலகாற் காணப்படாத கடவுளைக் காணும் காட்சி. அக்கடவுள் உலகினோ டுடனாகி நிற்பதன்றி, வேறாயும் நிற்பானாதலால் அக்காட்சியே பின்னர்த் திருக்கோயிலில் வழங்கப்படுவதாம். அதனை மேல்வரும் (1640 - 1644) ஐந்து பாட்டுக்களால் தனி விரித்துரைப்பது காண்க. யோனிகளுட் சத்தி சிவமாம் சரிதை காணும் இதுவே கயிலைக் காட்சியா யமைந்துபடு மாயின் பின்னர்க் காணும் வேறு தனிக் காட்சி காட்டுதல் வேண்டப்படாதென்க. 1638 - 1639 இந்த இரண்டு பாட்டுக்களாலும் உலகுயிர்களின்மேற் காணும் இறைவரது காட்சி கூறப்பட்டது. சிவஞானபோதம் முதற் சூத்திரக் கருத்தை இங்கு வைத்துக் காண்க. ஆயின் சாத்திரத்தின் வழி ஏனையோர் இவ்வாறு காணும் உலகக் காட்சிக்கும் இங்கு நாயனார் கண்ட காட்சிக்கும் வேறுபா டென்னையோ? எனின், ஏனையோர் இவ்வுலகத்தனுபவமுடைய தேசிகராலேயே நூல் வழி காணும் காட்சி கருதலளவையாற் காண்பது : நாயனார் கண்டது அவ்வா |