பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்621

 

1643. (வி-ரை.) அந்தண்...எதிர் நிற்ப - வெள்ளிமலை இரண்டு காணப்படுகின்றனவே என்று அங்கு ஆணைந்தவர்கள் சிந்தை செய்திட என்றது, அப்பெருங்கோயிலே கயிலை மால்வரையாக அது ஒரு வெள்ளிமலையாகவும், அங்கு முன் நிற்கும் வெள்ளை மால்விடைத் தேவர் (இடப தேவர்) மற்றும் ஒரு வெள்ளிமலையாகவும் நினைக்கும்படி என்றதாம்.

அணைந்தோர் - "அணைந்தோர் தன்மை" (சிவஞான - போதம் - 12 சூத்.) என்றபடி சிவத்தன்மை அணைந்து சிவனை நேர்காணும் தகுதி வாய்ந்து வந்து அணைந்தவர்கள். அணைந்தோர் - வந்து ஐயாறடைந்தவாகிய நாயனார் என்ற குறிப்புமாம்.

விடை எதிர் நிற்ப - எதிர் - இறைவருக்கு எதிரில்.

முந்தை மாதவப் பயன் பெறும் முதன்மை - நந்திதேவர் இத்தலத்தில் மாதவம் செய்து அருள் பெற்ற செய்திக் குறிப்பு.

நந்தி பெருமான் தவஞ்செய்து பேறு பெற்றது இத்தலத்துக்குரிய சிறப்பு. இது திருக்கயிலையையும் இத்தலத்தையும் தொடர்புபடுத்தும் சிறப்பு. திருமலைச் சிறப்பு (45) பார்க்க. ஆதலின் இங்கு அது குறிக்க முந்தை மாதவப் பயன் பன்றார்.

முதன்மை - சிவகணங்களுக் கெல்லாம் முதல்வராம் தன்மை. "நங்கள் நாதனாம் நந்தி" (45); "நங்குரு மரபுக் கெல்லா முதற்குரு நத னாகி" (திருவிளை - புரா - பாயி) முதலியவை பார்க்க. "முதற்பெரு நாயகமாகி" (திருமூலர் - புரா - 1), "ஆதிதேவனார் கோயினாயகன்" (20). முதன்மையான் - முதன்மையையுடையார் என்றலுமாம்.

நாடு இடை யாடி - நடுவில் நின்று, இறைவருக்கும், சேவிக்க வந்தவர் கூட்டத்துக்கும் இடையே போய்.

இடை யாடுதல் - இருதிறத்தார்க்கும் இடையில் சேவகம் செய்தல். "தம்பிரானார்தாம் இடையாடிச் செய்த..." (ஏயர்கோன் - புரா - 381). இறைவர் நந்தி பெருமானுக்கு ஆணையிடுதலும், அந்த ஆணை வழியே தேவர் முனிவர் முதலியோர் உள் விடுக்கப்பெறுதலும் முதலியவை இங்கு நினைவு கூர்தற்பாலன. நடு இடை ஆடி முன் - நடுவின்கண் உள்ள கண்ணாடியின்முன் என்பது ஆறுமுகத் தம்பினாருரை. இப்பொருளில் ஆடி - கண்ணாடி; இறைவர் திருமுன் வைக்கப்பெறும் கண்ணாடி; அதன் முன் என்றது அதற்கும் இறைவர் திருமுன்புக்கும் இடை என்றதாம். நடு இடை ஆடி முன் - ஆடி - ஆடுபவன் என்றும், நடு - சபை - அம்பலம் - என்றும், கொண்டு, அம்பலத்தில் நடம்புரியும் சிவபிரான் முன்பு என்றுரைப்பாரு முண்டு. நடுவிடத்தினின் றங்கு மிங்கும் போய் என்பதும் ஒருரை. "வேத்திரப் படையாற்றாக்கி" (திருவிளை - புரா).

முன் நணுக - ஏனை யாவர்க்கும் முன்பு இறைவரை அடுத்து இடம் பெற்று நணுக. நணுகுதல் - இறைவர் பணி கேட்ப அடுத்திருத்தல்.

விடைத் தேவர் வேறு; இடப தேவர் வேறு; இருவரும் இப்பாட்டிற் குறிக்கப்பட்டனர்.

முறைமையால் - என்பதும் பாடம்.

378

1644. (வி-ரை.) வெள்ளி வெற்பின்மேல் - பவள வெற்பு என - வெள்ளிமால்வரை" (1643) என்ற கருத்தையே தொடர்ந்துகொண்டு இடப தேவராகிய அந்த வெள்ளி மலையினையும் வெள்ளி மாலையாகிய கயிலையையும் குறித்து நின்றது.

பவள வெற்பு - "செம்மேனி யெம்மா" னாகிய சிவபெருமானைப் பவளமாலை என்றார். உருவம் பற்றி எழுந்த உவமம்.

மரகதக் கொடி - பச்சை நிறமுள்ள கொடிபோல என்றது உமையம்மையாரை. உருவும் மெய்யும் பற்றிவந்த உவமம். மரகதம் - மலைபடு மணிகளுள் ஒன்று என்க.