பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்623

 

டார்" (434); ஏலவார் குழலா டன்னோ டிடபவா கனனாய்த் தோன்றி" (464) முதலியவை காண்க.

379

1645.

கண்ட வானந்தக் கடலினைக் கண்களான் முகந்து
கொண்டு கைகுவித் தெதிர்விழுந் தெழுந்துமெய் குலைய
அண்டர் முன்புநின் றாடினார் பாடினா ரழுதார்;
தொண்ட னார்க்கங்கு நிகழ்ந்தன யார்சொல வல்லார்;

380

1646.

முன்பு கண்டுகொண் டருளினா ரமுதுண்ண மூவா
வன்பு பெற்றவ ரளவிலா வார்வமுன் பொங்கப்
பொன்பி றங்கிய சடையரைப் போற்றுதாண் டகங்கள்
இன்ப மோங்கிட வேத்தினா ரெல்லையி றவத்தோர்.

381

1645. (இ-ள்.) கண்ட...முகந்துகொண்டு - இவ்வாறு கண்ட ஆனந்தக் கடலைத் தமது கண்களாலும் முகந்து கொண்டவராய்; கைகுவித்து......குலைய - கைகளைச் சிரமேற் கூப்பித் திருமுன்பு வீழ்ந்து பின் எழுந்து உடலெல்லாம் அசையும்படி; அண்டர் முன்பு நின்று - உலக நாயகராகிய சிவபெருமான் திரு முன்பு நின்றுகொண்டு; ஆடினார் பாடினார் அழுதார் - நாயனார் - ஆடினாரும் - பாடினாரும் - அழுதரற்றினாரு மாக; தொண்டனார்க்கு...வல்லார்? - அத்தொண்டனாருக்கு அவ்விடத்தில் அப்பொழுது நிகழ்ந்தனவாகிய அற்புதமாகிய அனுபவ நிலைகளைச் சொல்லவல்லவர் யார்? (ஒருவருமிலர்).

380

1646. (இ-ள்.) முன்பு கண்டுகொண்டு - தமது முன் நேரே கண்டுகொண்டு; அருளின் ஆர் அமுதுண்ண மூவா அன்பு பெற்றவர் - திருவருளாகிய அப்பெரிய அமுதத்தினை உண்ணும்படி கெடுதலில்லாத அன்பினைப் பெற்றவரும்; எல்லையில் தவத்தோர் - அளவில்லாத தவத்தினை உடையோரும் ஆகிய நாயனார்; அளவிலா...பொங்க - அளவற்ற ஆசை முன்னே ததும்ப; பொன்...ஏத்தினார் - பொன் வண்ணமாக விளங்கிய சடையினையுடைய சிவபெருமானைப் போற்றும் திருத்தாண்டகப் பதிகங்களை இன்பம் பெருகும்படிப் பாடித் துதித்தனர்.

381

இந்த இரண்டு பாட்டுக்களும் பொருளால் தொடர்பு பெற்று ஒரு முடிபாக உரைக்க நின்றன.

1645. (வி-ரை.) கண்ட - "முன் கண்டனர்" (1644) என்ற முன்பாட்டிற் கூறியவாறு கண்ட.

ஆனந்தக் கடல் - சிவபெருமானை ஆனந்த நிறைவாகியதொரு கடலாக உருவகித்தார். ஆனந்தம் - இனப் விளைவுக்குக் காரணமாம் தன்மை. கடல் - நிறைவினாலும் எடுக்கக் குறையாமையினாலும் கடல் எனப்பட்டது. "கயிலை மாமலை மேவிய கடலே" (திருவாசகம் - 23 - 10).

கண்களால் முகந்து கொண்டு - கடல் என்றதற்கேற்ப முகந்து கொண்டு என்றார். குறிப்புருவகம். கொண்டு - உட்கொண்டு என்ற குறிப்புமாம்.

அண்டர் - உலகங்களை எல்லாம் உடையவர். அண்டம் - உலகங்களின் தொகுதி. தேவதேவர் - பெந்தேவர் - என்றலுமாம்.

கண்களால் முகந்து கொண்டு - என்றதனால் கடலமுதத்தை உட்கொண்ட வாயிலும், மனத்துள் நிகழ்ச்சியும், கை குவித்து...மெய் குலைய - என்றதனால் அவ்வமுத முட்புகுதலால் உளவாகும் புற நிகழ்ச்சிகளாகிய மெய்ப்பாடுகளும், ஆடினார் பாடினார் அழுதார் - என்றதனால் மெய்ப்பாடுகளினைத் தொடர்ந்து நிகழ்ந்த