பக்கம் எண் :


624திருத்தொண்டர் புராணம்

 

செயல்களும் கூறப்பட்டன. கண்களால் முகந்து - கண்கள் முகத்தலளவைக்குரிய கைகளின் தன்மை கொள்ள.

ஆடினார் - பாடினார் - அழுதார் - வினை முற்றுக்கள் வினையெச்சப்பொருள் தந்து, ஏத்தினார் என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க நின்றன. இச்செயல்கள் ஆனந்த நிறைவாகிய ஒருகாரணத்தால் நிகழ்வனவாயினும், பித்தர் செயல்போல, ஒன்றற்கொன்று புறத்தொடர்பின்றி நிகழ்வனபோலக் காணப்படுதலின், வினை யெச்சங்களை முற்றாகக் கூறினார். வினைமுற்றுக்காளாகக் கொள்ளினுமிழுக்கில்லை. "நெக்கு நெக்குள் ளுருகி யுருகி நின்று மிருந்துங் கிடந்து மெழுந்து, நக்கு மழுதுந் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தாற் கூத்து நவிற்றிச், செக்கர் போலுந் திருமேனி திகழ நோக்கிச் சிலிர்சிலிர்த்துப், புக்கு நிற்பதென்றுகொல் லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே" (புண் - பத் - 8ஸ்ரீ என்ற திருவாசகம் இங்கு நினைவு கூர்தற்பாலது. பாடினார் - என்றது கீதங்களையும், இசைகளையும், பண்ணொன்ற விசைபாடு மடியார்கள்" "கீதத்தை மிகப்பாடும் அடியார்கள்" (பிள் - தேவா - புள்ளிருக்கு வேளூர்) தேவாரப்பதிகம் பாடுதலை மேல்வரும் பாட்டில் உரைப்பது காண்க.

தொண்டனார்க்கு...வல்லார்? - இப்பாட்டிற் கூறிய நிகழ்ச்சிகளாகிய மெய்ப்பாடுகளுக்கும் செயல்களுக்கும், அவற்றைத் தொடர்ந்து மேல்வரும் பாட்டிற்கூறும் தேவாரம் பாடுதலாகிய செயலுக்கும் இடையே இந்த வினா நிகழ்த்தி வைத்தமை, நாயனார் அங்கு அடைந்த அனுபூதி நிலையின் நிகழ்ச்சிகள் உரையினுள் அடங்காதன என்ற அச்சத்துடன் அவற்றை உளங்கொள்ள வேண்டுமென்று குறித்தற்கு. சொல்ல வொண்ணாத தொன்றைச் சொல்லப் புகுகின்றோம் என்று ஆசிரியர் திருவுள்ளத்தில் எழும் உணர்ச்சி மிகுதியினால் இவ்வாறு இடையில் கூறியதுமாம். இவ்வாறே 1647-ல் தொண்டனார் என்பதும், 1648-ல் அடித் தொண்டர் என்பதும் காண்க. "தொண்டனேனை" என்ற திருவிருத்தமுங் குறிக்க. யார் வல்லார்? என்ற வினா ஒருவருமிலர் என்று எதிர்மறை குறித்தது. என்னால் சொல்ல இயலாமை மட்டுமன்றி வேறுயாராலும் இயலாதென்பது குறிப்பு. தொண்டராகிய தம்மையும் ஒரு பொருட்படுத்தித் தலைவர் செய்த கருணை என்று நாயனார் எண்ணி நைந்தாராதலின் தொண்டனார் என்ற தன்மையாற் கூறினார்.

380

1646. (வி-ரை.) கண்டு கொண்டு - கண்டு, அவ்வாறு கண்ட காட்சியின் மூலம் உள் நிறையக் கொண்டு. அருளின் ஆர் அமுது உண்ண - "ஆனந்தக் கடல்" (1645) என முன் பாட்டிற் கூறியதற்கேற்ப அக்கடலின் விளைந்த அமுது என்றார். "அன்பினில் விளைந்தவா ரமுதே" (திருவா) - அன்பும் அருளும் பெருகிய நிலையிற் கடலாகக் கூறப்படுவன. "அருட்பெருகு தனிக்கடலும்" (1450) என்றது காண்க.

அமுது உண்ண மூவா அன்பு பெற்றவர் - உண்ண - உண்ணுதற்குத் தகுதி பெற. மூவா அன்பு - எஞ்ஞான்றும் எந்நிலையிலும் குறையாத அன்பு. மூவா அன்பாதலின் அருளின் ஆர் அமுதை உண்ணும் நிலையைத் தேடித் தந்தது என்பதாம். "அருளென்னும் அன்பீன் குழவி" என்றது காண்க.

ஆரமுது - சிவபிரான் கொடுத்த பொதிசோறு என்றுரைப்பர் இராமநாதச் செட்டியார்.

அன்பு பெற்றவர் - நாயனார். அன்பினைத் தமது உடைமையாகப் பெற்றவர்.

போற்றுதாண்டகங்கள் - திருக்கயிலைப் போற்றித் திருத்தாண்டகப்பதிகங்கள் மூன்றனுள், 1635-ல் குறித்த "வேற்றாகி" என்றது நீங்கலாக, ஏனைய இரண்டு பதிகங்களும் இங்குக் கருதத்தக்கன. முந்திய பதிகம் கயிலைச் சாரலில் முனி