பக்கம் எண் :


626திருத்தொண்டர் புராணம்

 

உணர்வென்னு மூர்வதுடையாய்!, எரியாய தெய்வச் சுடரே!, விண்மேலு மேலு நிமிர்ந்தாய்!, மேலார்கண் மேலார்கண் மேலாய்!, காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே! - என்று இறைவர் உலகமாய் நிறைந்து நிற்குமாறு பலவும் துதித்துக் கயிலை மலையானே போற்றி போற்றி என்று முடித்தது. கைலாயம் - பதியின் (ஐந்தொழில்) விளையாட்டுக்கு இடம். "காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி" (திருவா).

பதிகங்களின் பாட்டுக் குறிப்பு :- II - (1) பொறையுடைய பூமி - "அகழ்வாரைத் தாங்கு நிலம்" (குறள்). மறையுடைய வேதம் - வேதம் இறைவரை இருதயத்துள் பொதிந்து வைத்திருத்தல் குறிப்பு. "அருமறைப் பயன்" (1037). "வேதநாயகன்" (1633). - (3) மாலை எழுந்த மதி - முழுமதி; காலை முளைத்த கதிர் - இள ஞாயிறு. ஞாயிறும் திங்களும் இறைவரது எட்டுத் திருமேனிகளுள் ஆவன. - (5) மிக்கார்கள் - அன்பினால் மிகுந்தோர். - (6) கிழமை ஏழு - நாட் கூறுபாடு. காலமும் அதன் கூறுகளும் என்பது கருத்து. - (7) பாரோர் விண் - பாரோரும் விண்ணோரும். உம்மைத் தொகை. தொண்டர் பரவு மிடத்தாய் - "ஆண்டாண் டாயினுமாக" (முருகு). தொழில் நோக்கி ஆளும் - அவ்வவர் வினைக்கேற்ப ஆண்டு அருளும் - (8) பெருகி அலைகின்ற ஆறு - பனிமலையினின்றும் பெருகிவரும் கங்கையின் குறிப்பு. - (9) செய்ய...நின்றாய். - (10) சீலத்தான்...வைத்தாய். - இவற்றைத் தனித்தனி ஒரு தொடராக்கி உரைக்க. கோலத்தாற் குறைவில்லான் - மன்மதன். கோலம் - அழகு. இப்பாட்டிற் புரமெரித்ததும் இராவணனை அடக்கியதும், காமனை எரித்ததும், காலனை உதைத்ததுமாகிய நான்கு வீரங்களை ஒருங்கே கூறியருளினர்.

III (1) பாட்டான நல்ல தொடை - புனருற்பவத்தில் நாத விந்து வடிவாக அருளிய முதல் நூல்களைப் பஞ்சமந்திர ரூபியாகிய சதாசிவமூர்த்தியாய் நின்று செய்யுளாக்கி உபதேசிப்பார் என்பது ஆகமம். (ஸ்ரீ முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள் குறிப்பு.) ஊழி முடிவின் புனருற்பவத்தின் பொருட்டு இறைவர் செய்யும் நாத கீத முழக்கு. "வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீனை வாசிக்குமே" (தேவா - விருத்). பரிசை யறியாமை நின்றாய் - "இன்ன தன்மையனென்றறி யொண்ணா வெம்மான்" (தேவா - நம்பி). சூட்டு - சூடும் பொருள். ஆட்டு - திருமஞ்சனம். - (2) மீளாவருள் - மீண்டும் பிறவாநெறி; முத்தி. கதிரார் கதிருக்கோர் கண் - விளக்கும் கதிர்களையுடைய ஒளிப் பொருளுக்கு ஒளி தருபவர். சுடர்களைச் செலுத்துபவர். "ஒளியா யொளியத னொளியா யொளியதனொளியுந் தனிதரு மொளியாகி" (பேரூர்ப்புரா - நிருத் - பட - 63). - (3) செய்யாய் கரியாய் வெளியாய் - செம்மை - இறைவர் பாகம். கருமை - அம்மை பாகம். வெளி - இரண்டுங் கடந்தது. செல்லாத செல்வம் - "சென்றடையாத்திரு" (தேவா). ஐ - தேவு. - (4) சூட்சி - வஞ்சம்; பொய். - (5) முன்னி - முன்னிற்பவர். என்னி - எனது உடைமையானவர். எனக்குரியவர். "நானுடைமாடு" (தேவா). கன்னியார் - கன்னியாம் தன்மை பொருந்திய. - (6) உணர்வென்னும் ஊர்வது உடையாய் - உணர்வைத் தம் ஊர்தியாக்கொண்டு செலுத்துபவர். ஊர்வது - ஊர்தி. கரியான் - திருமால். - (7) எண் மேலும் எண்ணம் - எண்ணங்களை எல்லாம் கடந்த எண்ணம். மேலார்கள்...மேலாய் - தேவதேவர் - (9-10) எண் ஆயிரம் நூறு - எண்ணப்படும் நூறாயிரம் - இலக்கம்; அனேகம் என்றலுமாம்.

தலவிசேடம் :- திருக்கயிலாயமலை - (திருநொடித்தான்மலை) - சங்கார கருத்தாவாகிய உருத்திரருடைய மலையாதலின் இது நொடித்தான்மலை எனவும் வழங்கப்படும். ஆளுடைய நம்பிகளது இத்தலத் தேவாரங் காண்க. (நொடித்தல் - அழித்தல்). சிவபெருமானது இருப்பிடமாய் எங்கும் பரவியுள்ள அருவமாகிய கயிலாயம் வேறு. இங்குக் குறித்தது பூ கயிலாயம். தேவர்கள் முதலியோராலும் சென்று சேர்தற்கரியது. இராவணன் இதனைப் பெயர்க்க முயன்று