பக்கம் எண் :


628திருத்தொண்டர் புராணம்

 

அக்கோலம் - காண் எனப் பணித்துக்காட்ட அவர் கண்டு தொழுது நின்ற அந்த என அகரம் முன்னறி சுட்டு. கோலம் - காட்சி; "கயிலையி லிருந்தநின் கோலம்" (1633.)

சேயது ஆக்கினார் - மறைத்தனர் என்பதாம். சேயதாக்குதல் ஒரு பொருளை எட்டாதபடி செய்தல்; தூரிப்பதாக்குதல்.

திரு ஐயா றமர்ந்தமை திகழ - திருவையாற்றில் தாம் உலகங் காண முன் எழுந்தருளிய கோலம் வெளிப்பட நாயனாருக்குக் கயிலைக் கோலம் காட்டிய போதும் ஐயாறமர்ந்தமை உள்ளதாயினும் அப்போது அது கயிலைக் கோலத்தினுள் மறைந்து நின்றது; பின்னர் இப்போது அது திகழ நின்றது என்பதாம்.

அருளிச் - சேயதாக்கினார் - முன் 1640 முதல் 1644 வரை ஐந்து பாட்டுக்களும் மகா சதாசிவ மூர்த்தி தரிசனக் குறிப்புத் தருவனவாயின், இத்திருப்பாட்டு அதோ முகதரிசனக் குறிப்புத் தருவதெனக் கூறலாம்.

ஆயகாலையி லமர்மனங் களியுற - மேயநாயகர் - என்பனவும் பாடங்கள்.

382

1648.

ஐயர் வேடமங் களித்தகன் றிடவடித் தொண்டர்
மையல் கொண்டுள மகிழ்ந்திட வருந்தி, "மற் றிங்குச்
செய்ய வேணிய ரருளிது வோ?" வெனத் தெளிந்து
வைய முய்ந்திடக் கண்டமை பாடுவார் மகிழ்ந்து,

383

வேறு

1649.

"மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடு" மென்னுங்
 கோதறு தண்டமிழ்ச் சொல்லாற் குலவு திருப்பதி கங்கள்
"வேத முதல்வரை யாற்றில் விரவுஞ் சராசர மெல்லாம்
 காதற் றுணையொடுங் கூடக் கண்டே" னெனப்பாடி நின்றார்;

384

1650.

கண்டு தொழுது வணங்கிக் கண்ணுத லார்தமைப் போற்றிக்
கொண்ட திருத்தாண் டகங்கள் குறுந்தொகை நேரிசை யன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான்றிரு வையா றமர்ந்தனர் நாவுக் கரசர்.

385

1648. (இ-ள்.) ஐயர்...அகன்றிட - பெருமான் தாம் இவ்வாறு திருக்கயிலாயத்திருந்த கோலத்தை அங்குக் காணக்கொடுத்து மறைத்தருளினாராக; அடித்தொண்டர்...வருந்தி - திருவடித் தொண்டு பூண்ட நாயனார் மயங்கி உள்ளத்தில் முன்போலவே இன்னும் மகிழ்ச்சி பெற்றிருக்கும் வண்ணம் வேண்டி வருந்தி; மற்று...எனத் தெளிந்து - "இனி, இங்குச் சிவந்த சடையினை யுடையராகிய இறைவரது திருவருள் இவ்வளவு தானோ?" என்று தெளிவு கொண்டு; வையம் உய்ந்திட - உலகம் உய்யும் பொருட்டு; கண்டமை - தாம் கண்ட செய்தியினை; மகிழ்ந்து பாடுவார் - மகிழ்ச்சியோடும் பாடுவாராகி,

383

1649. (இ-ள்.) மாதர்ப் பிறை...என்னும் - "மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகோளடும்" என்று தொடங்குகின்ற; கோதறு...திருப்பதிகங்கள் - குற்றமறும் தண்ணிய தமிழின் சொல்லினாற் குலவும் திருப்பதிகங்களை; "வேதமுதல்வர்...கண்டேன் எனப் பாடி நின்றார் - "வேதமுதல்வராகிய சிவபெருமானுடைய திருவையாற்றிலே, பொருந்தும் சரிப்பனவும் நிற்பனவுமாகிய உயிர்கள் யாவையும், காதல் பொருந்திய தமது துணைகளுடனே கூடக்கண்டேன்" என்ற கருத்துப் புலப்படப் பாடி நின்றனராகி,

384