தனால், புறக்கண்ணிருந்தும், குருடர் எனப்பட்டார்; குழி என்றதற்கேற்பக் கைகொடுத்து ஏற்றும் என்றார். - (5) எழுவாய்- இறுவாய் - தொடக்கம் - ஈறு; ஆதி - அந்தம்; வெங்கண்பிணி - பிறவிப்பிணி - பிணிக்கெல்லா - மிருப்பிடமாதலின், வெங்கண் என்றார். பிறவிப்பிணி என்றதற்கேற்ப மருத்துவமெனப்பட்டது. நரகக்குழிவாய்......மீட்பன - நரகத்து வீழும் செயலுடையோரை அச்செயலுக்குத் தக்கவாறு அங்கு விழுத்தி அனுபவிக்கச் செய்து, பின் அங்கு நின்றும் மீட்பன. வீழ்ப்பன - என்றதும் கருமம் ஆனபவித்துக் கழிக்கச் செய்யும் அருள் ஆதலின் திருவடியின் செயலாயிற்று. அன்போடு அழுவார்க்கு அமுதங்கள் - "அன்புள் ளுருகி யழுவ னரற்றுவன்" என்றபடி ஆனந்தக் கண்ணீர் பெருக்குவோர்க்குத் தரும் இன்பம் அமுது எனப்பட்டது. அமுதம் - வீடு என்றலுமாம் - (6) தோணித்தொழில் - கடலில் அழுந்தாது சரக்குக்களை மட்டும் இங்குமங்கும் செலுத்துதல். - (7) இப்பத்தரை - நாயனாரையும், "போதொடு நீர்சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்" என்றபடி அவர் முன் செல்லக்கண்ட அடியார்களையும் உடன் குறித்தது. இ - அண்மைச் சுட்டு. அவர்களை மிக அணுகி நாயனார் இருத்தமை குறித்தது. பெருஞ்செல்வம் - அருட்செல்வம். - (8) திருத்தி - நிறுத்தி - செறுத்து - வருத்தி - ஓச்சி - சென்று - உழக்க என்பன சிவனை அடையும் யோகம் முதலிய சாதனம் குறித்தன. வல்லோர் - அவற்றினருமை குறித்தது. பட்டிகை - சிங்காதனம் போல அலங்கரித்தலாம். அருத்தி - அன்பு; அருத்தித்து - அரும்தவர் - அருத்தித்து - அருத்தி என்னும் பெயரடியாகப் பிறந்த வினையெச்சம். விரும்பி என்பது பொருள். - (9) பறண்டை - கூகைவகை? வாத்திய வகை என்பாரு முண்டு. பிணக்காடு - ஊழிமுடிவில் உலகமழிந்தநிலை. - (10) நின்போல் - நின்னைப்போல யாமும் தேவர்கள் என்று எண்ணும். "மூவரென்றே யெம்பிரானொடுமெண்ணி...தேவரென்றே யென்னபாவம் திரிதவரே" (திருவா.) நிமிர்த்து - மனத்தை வணங்கச் செய்யாது நிமிரச்செய்து. "பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலராகி" என்க. பைம்போது - கற்பகம் - மந்தாரம் முதலிய தேவமரப் பூக்கள்; விதிப்படி கொய்து கொணரப்பட்டவை. உழக்கிப் பவளந் தழைப்பன - உழக்கி - உழக்குதலால். உழக்குதலாவது அன்பின்மை பற்றி ஏற்றுக்கொள்ளாது ஒதுக்குதல். திருவடி பவளம் போன்றிருத்தலுக்குக் காரணம் கற்பித்தவாறு; தற்குறிப்பேற்ற அணி. பாங்கு - அடிமை செய்யும் நெறி. என்போலிகள் - பறித்து இட்ட - போலி - என்னைப் போன்றவர்கள். அடிமைத்திறம் இல்லாது அடியாரைப் போன்றிருத்தலால் போலி என்ற குறிப்பமுாம். "நாடகத்தா லுன்னடியார் போனடித்து" (திருவாசகம்). இலை - முகை - விதியறியாமை குறிப்பு. அம்போது - விதிப்படி கொண்ட புதுமலர்கள். கொள்ளும் - ஏற்றுக்கொள்ளும். கொள்ளுதல் - உழக்குதலுக்கு மறுதலை. இப்பாட்டினால் நாயனார் ஆன்மார்த்த பூசை சிவாகம விதிப்படி செய்த நியமமுடையார் என்பது விளங்கும். "தொண்டனேன்" என்ற திருநேரிசையும் "பகையாத சித்தமொடு சிவபூசை கற்ற மதியினன்" என்ற திருநாவுக்கரசு நாயனார் திருவேகாதச மாலை (6) யும் பிறவும் காணக். இஃது பூசை முடிவிற் பிரார்த்திக்கப் பயிலத் தக்க சிறப்புடைய பாசுரம். - (11) நிலையாயிருப்பன - நிலைபெற்ற தலைவராம் தன்மை குறித்தது. புலையாடு புன்மை - பிறவி. புலை ஆடு - புலால் கமழும் உடம்பினை எடுத்தல். - (13) உற்றார் - இலாதார் - சிவனைத்தவிரவேறுஉற்றார் இல்லாதார். "உறவாவா ருருத்திரபல் கணத்தி னோர்கள்" (தேவா - காண்); "மற்றுப் பற்றெனக்கின்றி" (தேவா - நம்பி); "தந்தைதாய் குரவ னாசான் சங்கரன்" (திருவிளை - புரா - வாத - உப); நன்னூல் ஒதிக் கற்றார் - நன்னூல் - ஞானநூல். ஒதி - பயின்று - கற்றார் - அதன்படி ஒழுகியவர். "கற்றபின் னிற்க வதற்குத் தக" (குறள்); "கற்றாங்கெரியோம்பி" (தேவா). - (14) வானை...மதிப்பன - "அண்ட மாரிரு ளுடு கடந் |