பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்641

 

தும்பர், உண்டு போலுமொ ரொண்சுடர்" (தேவா). மந்திரிப்பார் - சிவநாம மந்திரம் பயில்பவர். நடுவே - புருவத்திடையில். யோகசாதனையில் - அழிந்தியறியு மிடத்தில். "நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி, யுற்றுற்றுப் பார்க்க வொளிவிடு மந்திரம்." ஞானச்சுடர் - ஞான ஒளி. - (15) மாதிரம் - திசை. முகடு - தண். - (16) ஏணிப்படிநெறி - உயிர்களின் பக்குவ பேதப்படி வகுத்த முத்திப் படிமுறை. - (17) ஓதிய ஞானம் - இறைவர் திருவாய் மலர்ந்த சிவாகமம். ஞானப்பொருள் - ஞானத்தினால் அறிப்படும் பொருள். "ஞேயம்" என்பர். செஞ்சுடர் ஞாயிறு - காலை மாலைகளில் ஞாயிறு வெப்பமின்றிச் சிவந்திருத்தல் குறிப்பு. சோதி - தீ. தூ மதி - அருள்பெற்று வளர்ந்த சந்திரன். - (18) உமை அம்மையார் செய்த தவத்தின் வரலாறு குறிப்பது. தலசரிதக் குறிப்புமாம். - 1(19) சுழலார் துயர் வெயில் - பிறவிச் சுழலாகிய கொடுந்துன்பம் வெப்பமாக உருவகிக்கப்பட்டது. "வன்பிறவி வேதனை" (தாயுமா). வெயில் என்றதற்கேற்பத் திருவடியை நிழல் என்றார். நிழல் - உவம ஆகுபெயர். கழலா வினைகள் - சஞ்சித கன்மங்கள். பழவினை - (1) என்ற கருத்து. கழுற்றுதல் - தீக்கையின் அத்துவ சுத்தியால் ஒழித்தல். "என் வல்வினைக் காட்டைநின் மன்னருட் டீக்கொளுவும் விடங்க" (திருவா). காலவனம் - தேவர் முதலிய எல்லாவுயிர்களையும் அளக்கும் காலத்தத்துவம். காலவனங்க கடந்த - காலங்கடந்த - காலதத்துவத்துக்கு அப்பாற்பட்ட. காலவனம் - சுடுகாடு என்றலும், இருள் என்றலுமாம். - (20) வலியான் - இராணவன். மெலியா - வேறு யாவரிடையிலும் மெலிதலில்லாத.

Xதிருச்சிற்றம்பலம்

திருவிருத்தம்

குறுவித்த வாகுற்ற நோய்வினை காட்டிக் குறுவித்தநோ
யுறுவித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பா னுகந்தருளி
யறிவித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே
செறிவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

1

 1.

இத்திருப்பாட்டின் அனுபவமாகக் கண்டதோர் உண்மை :- பல ஆண்டுகளின் முன் ஆச்சாள்புரம் என வழங்கும் நல்லூர்ப் பெருமணத் தலத்திற்கு ஆளுடைய பிள்ளையாரது திருநாள் தரிசிக்கச் சென்றிருந்தேன். கடும் வெயிலில் பகல் 16, 17 நாழிகையளவில் நாயனார் திருவீதிப்புறப்பாடு செய்து திருவீதியெழுந்தருளினர். வைகாசிமாத மாதலால் வெயிலின் கொடுமையால் பவனியில் முன் செல்லும் இசைவாணர்களும், குடைகொடி சின்னம் பிடிப்போர்களும், பின் செல்லும் வேதபாராயண மறையவர்களும் உடன் வரலாற்றாது, அங்கங்கும் பக்கங்களில் வீடுகளில் அமைத்த பந்தர்களிடை ஒதுங்கி வருவாராயினர். திருவீதிகயில் சீபாதந் தாங்குவோரும் அருச்சகரும் தாம் விடாது போவதாயினர். பின்பற்றிவந்த தேவார பாராயணத் திருக்கூட்டத்தாரும் விடாது பின்பற்றலானார்; ஆயினும் வெயிலின் கொடுமையினால் நிற்கவு மாட்டாது, அன்பு நிலையின் நியதியினால் விட்டு நீங்கவுமாட்டாது வருந்தினர். அடியேனும் உடன் நின்றேன். அதுபோழ்து தேவார ஐயா அவர்கள் இத்திருப்பாட்டினை மனமுருகி ஓதினர். 5 கணங்களுக்குள் மேகஞ்சூழ்ந்து ஞாயிற்றை மறைத்தது. பின் அந்நாள் முழுதும் ஞாயிறு காணப்படவில்லை. இஃது அடியேன் உடனிருந்து கண்ட காட்சி. இதனைச் சில அன்பர்களிடத்துப் பேசிப் போற்றிக்கொண்டிருந்தேன். கேட்டு மகிழ்ந்த அன்பர்கள், சில ஆண்டுகள் கழித்துத் திருப்புக்கொளியூர் அவிநாசியில் நாயனாரது திருநாளின்போது இவ்வாறு கொடிய வெயில் பொறுக்கலாற்றாது அந்நிகழ்ச்சியை நினைந்து இத்திருப்பாட்னை ஓதினர். அதுபோலவே பயனையும் பெற்றதனை மகிழ்ந்து எனக்கறிவித்தனர்.