| தருக்கின நான்றக வின்றியு மோடச் சலமதனால் நெருக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளி யுருக்கின வாறடி யேனையை யாற னடிமைக்களே பெருக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. |
4 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- எனது வினைக்கீடாக மறக்கவும் செய்து, அவ்வாறு மறந்ததன் பயனாகச் சூலைநோய் வினைகாட்டி, அந்நோய் வினையையும் தீர்ப்பானுகந்தருளி, ஐயாறன் அடியேனைத் தன் அடிமைக்கண்ணே அறிவித்துச் செலுத்தித், தன் பொன்னடிக்கீழ் என்னைச் செறிவித்தவாறுதான் என்னே அற்புதம்! குறிப்பு :- இப்பதிக முழுமையும் சூலைதந்து சமண் தீர்த்து ஆட்கொண்டருளிய சரிதக் குறிப்புடையது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) குறுவித்த - குறுகுவித்த. குறுகுதல் - கூடுதல் நோய் உறுவித்தல் - சூலை தந்து தண்டித்து அதனால் வினையை அனுபவிக்கச் செய்து கழித்தல் கருத்து. அடிமைக்குளே என்பதும் பாடம். அடிமைக்கள் - பன்மை உயர்வு குறித்தது. பலதிறப்பட்ட அடிமைத்தொண்டு என்றலுமாம். "மாலுங் காட்டி நெறிகாட்டி வாரா வுலக நெறியேறக், கோலங் காட்டி யாண்டாயை" (திருவா). ஆறு என்பது கடை குறைந்து ஆ என நின்றது. ஆ - ஆறு தான் என்னே! அற்புதம். அடியேனை என்றும் அடிமைக்களே என்றும், அடிக்கீழ் என்றும் இப்பதிகத்திலும், "அடித்தலமே" என்று முன் குறித்த திருப்பதிகத்திலும், "ஆடகக்கால்" என்று மேற்குறிக்கும் பதிகத்தினும் திருவடி சம்பந்தமாகவே போற்றியமை குறிக்கத்தக்கன. இக்குறிப்புப்பற்றித் "தொண்டனார்" (1645) என்றதும் இங்குக் கருதுக. அடிக்கீழ்ச் சேர்வித்தவர் என்க. - (2) கூர்வித்தல் - மிகுதிப் படுத்துதல். ஊர்வித்தல் - அனுபவிக்கச் செய்தல். அடிமைக்களே - ஆர்வித்தவா என்று கூட்டுக. ஆர்வித்தல் - அன்பு நிறைவித்தல். எனையே அடிக்கீழ்ச் சேர்வித்தவா என்று கூட்டுக. இவ்வாறே மேல்வரும் பாட்டுக்களிலும் கொள்க. - (3) சலமே தாக்கினவா - சலம் - மாறுபாடு. சைவத்திறனின்றும் திறம்பிய தன்மை சலம் எனப்பட்டது. சலம் - துன்பம் என்றலுமாம். "ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே" என்ற ஏழைத் திருத்தாண்டகத்தில் இகழ்ந்த என்றது சலத்தின் காரணத்தாலாகியது என்பதாம். தண்டித்த நோய் - தண்டிப்பதற்காகத் (கழுவாயாகத்) தந்த நோய்; சூலை. "இறை வழுவுந் தொண்டரையா ளத்தொடங்குஞ் சூலைவே தனைதன்னைக், கண்டருநெற் றியரருள" (1314) என்றது காண்க. நோய் நீக்கினவா - "மறப்பிணிதான், அந்நின்ற நிலைக்க ணகன்றிடலும்" (1336) என்றபடி பதிகம் பாடிய உடனே நோய் நீங்க. அருள் பெற்றமை குறிப்பு. நெடு நீரிநின் றேற - கயிலைச்சாரற் பொய்கையின் மூழ்கி நின்று ஐயாற்றில் வாவியில் வந்து ஏறும்படி என்ற சரிதக் குறிப்பு. மேல்வரும் பாசுரத்திலும் இவ்வாறே கூறுதல் காண்க. அடிமைக்களே ஆக்கினவா - ஆக்குதல் - ஆகச் செய்தல். நோக்கின - இருக்க அருள் செய்த. - (4) சலம் - முன்பாட்டில் சலமே என்ற கருத்து. நெருக்கின - நோய் தந்து நல் உணர்வு வரச்செய்த. உருக்கின - அன்பினால் உருகச்செய்த. பெருக்கின - அன்பு பெருக. - (5) இடர்ப்படுத்துக் கழிவித்தவா - கன்மத்தை அனுபவிக்கச்செய்து கழிக்கச் செய்தபடி. அழிவித்த - நேய் நீக்கிய. - (7) படக்கின - படச்செய்த?. தொடக்குதல் - உள்ளாக்குதல். - (8) இறப்பித்தல் - தன் வசமிழக்கச் செய்தல். |