பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்643

 

XIதிருச்சிற்றம்பலம்

திருவிருத்தம்

அந்திவட்டத் திங்கட் கண்ணிய னையா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.

1

பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்தி
நாடகக் கானங்கை முன்செங்க ணேனத்தின் பின்னடந்த
காடகக் கால்கணங் கைதொழுங் காலெங்க ணாய்நின்றகால்
ஆடகக் காலரி மான்றேர் வலவனை யாற்றனவே.

2

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- இப்பதிகத்தில் இரண்டு பாசுரங்களே கிடைத்துள்ளன. எனது புந்தியினுள் தானேவந்து புகுந்தருளி நின்ற இறைவனையும் நான் பொய்யென்னல் இயலுமோ? அவரது பொற்பாதம் என்னிடத்தாய் நின்றது.

பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) அந்தி - மாலைப்பொழுது. புந்தி வட்டம் - புத்தி. சிந்தி - பலதிசையும் பரவி. நந்திவட்டம் - நந்தியாவர்த்த மலர். "நந்தி கரவீரம்" (240). வளாவிய - சூடிய.- (2) இப்பாட்டு இறைவரது திருப்பாதத்தையே பலதிறப்படப் போற்றியது. பாடகம் - அம்மையின் காலணி. "பொன்னனையாள் சிலம்புஞ் செறி பாடகமும்" (திருவி - ஐயா - 12). பரிதிக்கதிர் உக்க அந்தி நாடகம் - மாலைப்போதில் கூத்தாடுகின்ற. அந்தி - இங்கு - ஊழி முடிந்த இடைக்குறித்தது. காடகம் - காட்டகம் என்பதில் டகரவொற்று இரட்டிக்காது வந்தது; "வீடகத்தே புகுந்திடுவான்" (திருவா). என்புழிப்போல. எதுகை நோக்கிக் காடகம் என வந்தது செய்யுள் விகாரம் என்றலுமாம். ஆடகம் - பொன். காணாய் - கண்ணாய்; களைகணாய் என்றலுமாம்.

குறிப்பு :- இப்பதிகம் ஐயப்பாடு ஆசிரியர் குறிப்பிடாமையும் கருதுக.

தலவிசேடம் :- திருவையாறு - ஐந்து ஆறுகள் சேர்ந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. இக்காரணத்தால் இதனைப் பஞ்சநதமென்பதும், பஞ்சாக்கர செபச் சிறப்பினால் செப்யேசம் என்பதும் வடவர் வழக்கு. இத்தலத்தை விரும்பித் தங்கிவிட்ட காவிரியைப் பெறுவதற்குக் கடலரசன் இங்குவந்து பூசித்ததன் பயனாகக் காவிரி ஒரு கலையோடும் கிழக்கே சென்று, கடலடைந்தனள் என்பது தலவரலாறு. "ஆழி வலவனின் றேத்தும்" என்ற தேவாரம் இத்குறிப்புப் பற்றியதென்ப. சிலாத முனிவர் தவத்தால் அவர்க்கு மகனாக அவதரித்த திரு நந்திதேவர் பூசித்துச் சிவசாரூபமும், கணநாயகமும் பெற்றுச் சுயசா தேவியை மணம் செய்விக்கப்பெற்று அபிடேகிக்கப் பெற்ற சிறப்பினை "நங்க ணாதனா நந்தி தவஞ்செய்து, பொங்கு நீடரு ளெய்திய பொற்பது" (45) என்ற திருமலைச் சிறப்பில் ஆசிரியர் எடுத்துக் காட்டுவதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. தம்மை வழிபட்ட ஒரு மறைச் சிறுவரின் பொருட்டு இறைவர் இயமனைத் தண்டித்து, அவரை ஆட்கொண்டமைபற்றித், "ஆட்கொண்டார்" என்ற திருப்பெயருடன் தெற்குக் கோபுர வாயிலில் விளங்க வீற்றிருந்தருளுகின்றார். சத்தத் தானம் என்னும் ஏழு தலங்களுள் முதன்மை பெற்றது. இலக்குமி பூசித்துப் பேறுபெற்ற தலம். திருக்கோயில் இரண்டாவது சுற்றில் இலக்குமி தவஞ்செய்து கொண்டிருக்கின்றாள் என்றலால், இன்றும் அங்கு ஒருவரும் போவதில்லை. தம்மைப் பூசிக்கும் சைவர் ஒருவர் காசிக்குச் சென்று குறித்த காலத்தில் வாராமையால் பூசைமுறை தவறநேர்ந்தபோது அவரது வடிவோடு இறைவர்