பக்கம் எண் :


646திருத்தொண்டர் புராணம்

 

வானிலும் நிலத்தும் வாழும் உயிர்கள். ஆகு பெயர். இனம் பற்றிக் கீழுலகத்தவர்களையும் கொள்க. அன்றினார் - பகைவர்.

IIIதிருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான், புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்,
நெல்லியானிலை யானநெய்த்தானனைச், சொல்லிமெய்தொழு வார்சுடர்வாணரே.

முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே, சங்கியாது சமுத்திர நஞ்சுண்டான்
நங்கை யொடு நவின்றநெய்த் தானனைத், தங்கை யாற்றொழு வார்தலை வாணரே.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- கொல்லியான், குற்றாலத்தான், குரவன், முதலியவாற்றால் அறியப்படும் திருநெய்த்தானத்தின் இறைவரைத் தொழுவார் சுடர்வாணர் - வலிவாணர் - இன்ப வாணர்; அவரது வினை பாறும்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- கொல்லி - கொல்லிமலை; தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று; குளிர் தூங்கு - இடைநிலைத் தீபமாய் கொல்லியுடனும், குற்றாலத்துடனும் கூட்டியுரைக்க நின்றது. புல்லியார் - புன்மையுடையோர். கீழ்மையோர். நெல்லி - நெல்வேலியை யுடையவன். நெல்லிக்காவையுடையவன் என்றலுமாம். வாணர் - வாழ்நர். வாழ்வை யுடையவர். சுடர்வாணர் - சுடர் - ஒளி. ஞான ஒளி குறித்தது. ஒளியுடன் வாழ்பவர். (4)ம் (9)ம் இவ்வாறு. - (2) இரவன் - இரப்பவன். நிரவன் - அழித்தவன். நிரவுதல் - தரைமட்ட மாக்குதல். கொடி வாணர் - கொடி சூழ்தல்போலப் புகழாற் சூழப்படுவோர். - (3) மலரிடைத் தேன் பாயும் என்க. - (4) விண்டவர் - பகைவர். - (5) முன்கை......நிற்க. நகைச் சுவைபடக் கூறியது. சங்கியாது - ஐயமின்றி. உறுதியாக. - (7) கொள்ளி - சுடுகாட்டுக் குறைக்கொள்ளி. - (8) நெற்றி ஆர் அழல் கண்ட - நெற்றியில் தீக்கண்ணினையுடைய. - (9) மாலொடு - நான்முகன் - காலொடு முடி என்று நிரனிறையாகக் கூட்டுக. சேலொடும் செருச் செய்யும் - சேல்மீன்கள் ஒன்றோடொன்று தாக்குதல் செருச்செய்வது போலும் என்றதாம். தற்குறிப்பேற்றம். செரு - போர். "போர்த்தொழில் புரியும் பொரு காவிரியும்" (திருவிடை - மும் - 7). மால் - மயக்கம். அன்பு மேலீட்டினால் தன்வச மிழத்தல் மால் எனப்பட்டது. - (10) புரிந்து - இடைவிடாது சொல்லி. அன்பு செய்து என்றலுமாம். பரிந்தன் - பரிவு செய்தவன். இரங்கியவன். பாறும் - அழியும்.

IVதிருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

வகையெலா முடையாயு நீயே யென்றும் வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
மிகையெலா மிக்காயு நீயே யென்றும் வெண்காடு மேவினாய் நீயே யென்றும்
பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும் பாசூ ரமர்ந்தாயு நீயே யென்றுந்
திகையெலாந் தொழச் செய்வாய் நீயேயென்று நின்றநெய்த்தானாவென்னெஞ்சுளாயே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- வகையெலா முடையாயும் நீயேயென்றும், ஆர்த்தவெனக்கன்பன் நீயே யென்றும் இவ்வாறு பலவாறும் நின்ற நெய்த்தானத்திறைவரே! நீர் எனது நெஞ்சினுள்ளீர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வகை எலாம் உடையாய் - ஆன்மாக்களின் பாசத்தைப் போக்கி இன்பமளிக்கும் வகைகள். மிகை எலாம் மிக்காயும்