பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்647

 

மிக்கவற்றுக்கெல்லாம் மிக்கவராயும். பகை - சகச மலம் என்னும் ஆணவப் பகை. - (2) ஆர்த்த - கட்டிய. "சித்த மெனுந் திண்கயிற்றாற் றிருப்பாதங் கட்டுவித்த, வித்தகனார்" (திருவா). என்றபடி என் அன்பினாற் பிணைக்கப்பட்ட. கட்டுவித்த - பிறவினையாகக் கொண்டுரைத்தலுமாம். "அத்தாவுன் னடியேனை அன்பால் ஆர்த்தாய்" (தாண்). - (3) செல்வாய்த்திருவானாய் - செலவு - பொருள். திரு - அருட்டிரு. - (4) வெண்கயிலை - வெள்ளிய பனிக்கட்டியால் மூடப்பட்ட கயிலைமலை. "பொன்னின் வெண்டிரு நீறு புனைந்தென"; இப்பதிக மூழுமையும் கயிலைமலையிறைவர் என்ற தன்மைப்பற்றிக் குறிப்பது காண்க. வான்கயிலை மேவினாய் - ஆதிக்கயிலாயன் - முன்கயிலை மேவினாய் - தலையார் கயிலாயன் - பூங்கயிலை மேவினாய் - வானக்கயிலாயன் என்ற பலவும் காண்க. - (6) அக்கு ஆரம் - உருத்திராக்கமணி. தெக்காரமாகோணம் - திருநாகைக் காரோணம்? - திரிகோணமலை?.- (7) இகழும் தலை - இகழ்தற்குரிய தலையோடு. ஏந்தி - பெயர். ஏந்துபவன். அகழும் மதில் - சகரர்களால் அகழப்பட்ட - தோண்டப்பட்ட - கடலாகிய மதில். இராமேச்சரம் கடலாற் சூழப்பட்டதென்பது - (8) முத்து இளையாய் - முன்னும் பின்னும் உள்ளவர். - (9) தந்தைதாய் இல்லாதாய் - பிறப்பு இல்லாதவர். - (10) மறித்தான் - மறித்தானாகிய அரக்கன். மறித்தல் - குறுக்கிட்டு அசைத்தல்.

V திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

மெய்த்தானத் தகம்படியு ளைவர் நின்று
வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம்
இத்தானத் திருத்திங்ங னுய்வா னெண்ணு
மிதனையொழி யியம்பக்கே ளேழை நெஞ்சே!
மைத்தான நீணயனி பங்கன் வங்கம்
வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய
நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

1

தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப்
பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த
வனைத்துலகு மாளலா மென்று பேசு
மாங்காரந் தவிர்நெஞ்சே! யமரர்க் காக
முனைத்துவரு மதின்மூன்றும் பொன்ற வன்று
முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க
நினைத்தபெருங் கருணையனெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

5

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஏழை நெஞ்சே! வினைக்குக் கூடாம் இவ்வுடலின் நின்று இங்ஙன் உய்யலாம் என்று எண்ணும் இதனை ஒழி!; குடிவாழ்க்கை வாழ்வு எண்ணிக் குலைகை தவிர்; தளர்ந்து அஞ்சவேண்டா; மதியாலிந்த அனைத்துலக மாளலாமென்று பேசும் ஆங்காரந் தவிர்; இவ்வுடல் வாழ்வை மெய்யென்றெண்ணி வினையிலே கிடந்தழுந்தி வியவேல்! போகமென்னும் வலைப்பட்டு வீழாதே வருக; புலைவாழ்வுன்னி யிருந்தாங் கிடர்ப்பட வேண்டா; உனக்கு இவ்வுடலின் தன்மை உரித்தன்று; இறைவரது திருநெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கா லுய்யலாமே.