பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மெய்த்தானத்து - உடம்பினிடத்து. மெய் - உடல். ஐவர் - ஐம்புலவாசை. வேண்டிற்றுக் குறை முடித்து - தாம் வேண்டியபடியே நுகர்வித்து. மைத்தானம் - மை பூசுதற்கிடமாகிய. நினையுமா - நினைக்கும் வகையால். ஆ - ஆறு. கடைக்குறை. - (2) துறவா ஆக்கை - "துறக்கப்படாத உடல்" (திருவிருத்தம்). துறவா - நீக்க முடியாத. எந்த வகையாலும் பெறுதலைத் தடுக்காலாகாத என்றலுமாம்.- (3) பாழாம் குரம்பை - பாழ்படுக்கும் உடல். இரவிக் குலம் - பன்னிரண்டு ஞாயிறுகள் என்பர். - (4) தலையாய்க் கடையாகும் வாழ்வு - உயர்வாகியது மானுட வாழ்வாயினும் கடைபட்டொழிவது என்ற குறிப்பு. - (5) தினைத்தனை - தினையளவும். இழிவு சிறப்பும்மை தொக்கது. பொறை - தாங்கும் தகுதி. கூடு - உடல். முனைத்து வரும்.......நினைத்த பெருங்கருணையன் பெருங்கருணை எனப்பட்டது அவர்களுக்கும் பிறர்க்கும் நற்பயன் தருதலால். - (6) மிறைபடும் - அழியும். குறைவுடையார் - குறைந்து வந்தடைவோர். வேல் - ஆயுதப் பொதுமை குறித்துச் சூலம் என்ற பொருள் தந்து நின்றது. - (7) பேச - பேசவும். தூசு - உடை; தூசு அக்கரி என்க. தூசாக. தொடரகில்லா - தொடரமாட்டாத. கில் - ஆற்றலுணர்த்தும் இடைநிலை. - (8) தாழ - விரும்ப. - (9) நிரந்தரமா - என்றும். அமராடி - அழித்து. தலவிசேடம் :- திருநெய்த்தானம் - காவிரிக்கு வடகரையில் 52-வது தலம். வடவர் இதனைக் கிருதஸ்தானம் என்று மொழிபெயர்த்து வழங்கிக் கொள்வர். ஆனால் நெய்யாடுதல் என்பது ஒருவகை விழாக் கொண்டாட்டாம். "திருமலி நெய் யாடல் விழாச் செங்காட்டங் குடியெடுப்ப" (சிறுத் - புரா - 18), "மீதணியு நெய்யணி விழா வொடு திளைப்பார்" (திருஞான - புரா - 35) முதலியன காண்க. அவ்விழாச் சிறப்பினாற் போந்த பெயர். "நெய்யாடிய பெருமானிடம்" என்பது ஆளுடைய பிள்ளையார் தேவாரம். திருவையாறுள்ளிட்ட ஏழு தலங்களுள் ஒன்று; சரசுவதி வழிபட்ட தலம். சுவாமி - நெய்யாடியப்பர்; அம்மை - வாலாம்பிகை. பதிகம் - 6. திருவையாற்றுக்கு மேற்கே மட்சாலை வழி ஒரு நாழிகையில் உள்ளது. திருமழபாடி திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| நீறேறு திருமேனி யுடையான் கண்டாய் நெற்றிமே லொன்றைக்கண் ணிறைந்தான் கண்டாய் கூறாக வுமைபாகங் கொண்டான் கண்டாய் கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய் ஏறேறி யெங்குந் திரிவான் கண்டா யேழுலகு மேழ்மலையு மானான் கண்டாய் மாறானார் தம்மரண மட்டான் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் றானே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- மழபாடி மன்னும் மாணாளன்றானே, நீறேறு திருமேனியுடையான், தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான், புணர்ச்சிப் பொருளாகி நின்றான், ஆரேனுந் தன்னடியார்க் கன்பன், தன்னியல்வார் மற்றொருவரில்லான், தாங்கரிய சிவந் தானாய் நின்றான், கண்ணப்பர்க் கருள் செய் காளை, ஓங்காரத்துட் பொருளாய் நின்றான் என்றிவை முதலிய தன்மைகளா லறியப்படுவர். |