பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) நீறு ஏறு திருமேனி - ஊழிக் காலத்தில் ஒருவராய் எஞ்சி நிற்கும் தமது திருமேனிமேல் அக்காலத்து உலகம் அழிந்து எஞ்சிய சாம்பல் கிடக்கப்பெற்றவர் என்க. ஏழுலகு - மேல் ஏழு, கீழ் ஏழு உலகங்கள். ஏழ்மலை - ஏழு பெருமலைகள் எனப்படும். கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம் என்பன. (3) படிறன் - படிற்று வேடம் மேற்கொண்டவன். செற்றார் - பகைவர். - (5) உலந்தார் - இறந்தவர். - (6) தாமரையான் - பிரமன். தகவுடையார் - அடிமைப் பண்புடையவர். இருக்கை - விரும்பி வாழுமிடம். "ஏந்தெழி லிதயம் கோயில் மாளிகை" (திருவிசை - சாட்டிய); கலை - மான். - (8) தன்னியல்வார் - தன்னையொத்த இயல்பினை யுடையவர்; "மற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்" (தேவா - தாண்). தாங்கரிய சிவம் - தாம் எல்லாவற்றையுந் தாங்கியும், தம்மைத் தாங்குவார் பிறர் எவர்க்கு மரிதாகிய முழு முதல். - (9) அக்காலன் - பிறர் எல்லாருடைய காலங்களும் அளப்பவனாகிய அந்த என்று அகரம் உலகறி சுட்டு. - (10) ஓங்காரத் துட்பொருள் - பிரணவ மந்திரத்தாற் குறிக்கப்படும் பொருள். வேள் வொலி - வேள்வியொலி. இருசுடர் மீதோடா - இலங்கையினுள் சூரிய சந்திரர்கள் தம் வழிச் செல்லாது இராவணனது ஆணை வழியே இயங்கினர் என்ற வரலாறு குறித்தது. தலவிசேடம் :- திருமழபாடி - மழு ஆடிய இடம் ஆதலின் மழுவாடி எனப்படும் என்றும், மழுவாடி என்பது மழபாடி என மருவி வழங்குவதாயிற்று என்றும் கூறுப. மழவரால் ஆளப்பட்டது என்றும் பொருள் கூறுவர். புருடாமிருகம், பிரமனுலகத்திலிருந்த சிவலிங்கத்தை இங்குக் கொணர்ந்து தாபித்த மிருகம், பிரமனுலகத்திலிருந்தே சிவலிங்கத்தை இங்குக் கொணர்ந்து தாபித்த காலத்தில் பிரமதேவர் அதனைத் தம் வல்லமை கொண்டு பெயர்த்தெடுக்க முயன்றபோது அது வாராமை கண்டு, இது "வயிரத் தூணோ?" என்று வியந்தமையால், சுவாமி வயிரத்தூணாதர் எனப்படுவர். திருநந்தி தேவர் சுயசையம்மையை மணஞ் செய்துகொண்ட தலம். இந்திரன், திருமால் முதலியோர் பூசித்துப் பேறு பெற்றனர். ஆளுடைய நம்பிகள் இங்கு வாராமல் திருவாலம்பொழிலில் எழுந்தருளி யிருந்த பாது, இரவில் அவர் கனவில் இறைவர் போந்து, "மழபாடிக்கு வர மறந்தனையோ?" என்று நினைப்பிக்க, நம்பிகள் "பொன்னார் மேனியனே" என்று பதிகம் பாடி "உன்னை யல்லால் இனி யாரை நினைக்கேன்?" என்று துதித்துப் போந்து வழிப்பட்டருளிய தலம். மூவர் பாடலும் பெற்ற பெருமையுடையது. சுவாமி - வயிரத்தூணாதர். வடமொழியில் வஜ்ர ஸ்தம்பேசுவரர் என்பர்; அம்மை - அழகம்மை; பதிகம் 6. இது கொள்ளிடத் திருநதியின் வடகரையில் உள்ளது. தென் கரையில் உள்ள திருப்பெரும்புலியூரினின்றும் கொள்ளிடத்தைப் பரிசினாற் கடந்து கரை வழி இரண்டு நாழிகை யளவில் அடையத் தக்கது. கொள்ளிடம் இங்கு வடக்கு நோக்கிச் செல்கின்றது. 1652. | சேர்ந்து விருப்பொடும் புக்குத் திருநட மாளிகை முன்னர்ச் சார்ந்து வலங்கொண் டிறைஞ்சித் தம்பெரு மான்றிரு முன்பு நேர்ந்த பரிவொடுந் தாழ்ந்து நிறைந்தொழி யாவன்பு பொங்க ஆர்ந்தகண் ணீர்மழை தூங்க வயர்வுறுந் தன்மைய ரானார்; |
387 1653. | "திருப்பூந் துருத்தி யமர்ந்த செஞ்சடை யானையா னேற்றுப் பொருப்பூர்ந் தருளும் பிரானைப் பொய்யிலி யைக்கண்டே "னென்று விருப்புறு தாண்டகத் தோடு மேவிய காதல் விளைப்ப "இருப்போந் திருவடிக் கீழ்நா" மென்னுங் குறுந்தொகை பாடி, |
|