| சிந்தையி ருமககொன்று சொல்லக் கொண்மன் றிகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ் சென்னி யெந்தையார் திருநாம நமச்சி வாயவென் றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே. |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- திருவையாறுள்ளிட்ட ஏழு பெருந்தலங்களையும் இன்னும் சில தலங்களையும் சிறப்பித்து, அவற்றைச் சிந்தித்து, அத்தலங்களின் திருப்பெயர்களை மந்திரமாக்கொண்டு சொல்லவே பிறவித் துன்ப நீங்கி முத்திப்பேறு வரும் என்றும், மகா மந்திரமாய் எந்தையார் திருநாமமாகிய திருவைந்தெழுத்தை விதிப்படி எண்ணுவோர் அவ்வாறே சிவலோகம் பெறுவர் என்றும் எடுத்து உரைப்பது இத்திருப்பதிகக் கருத்து. சிறப்பாய் ஒரு தலத்தையும் பற்றாமல் நிற்பதாலும, பொதுவகையாற் பல கருத்துக்களை எடுத்து உபதேசிப்பதாலும் இத்திருப்பதிகம் பொது(ப் பதிகம்) என்றும், பலவகைத் திருத்தாண்டகம் என்றும் பெயர் பெறும். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஒருத்தி - முன்னையது, உமாதேவியையும், பின்னையது, கங்கையையும் குறித்தன. அடங்க என்றும், பயில என்றும், வருவன தாழ்வு - ஏற்றக் குறிப்புள்ளிட்டுச் சுவைபட நின்றன. நிலை - பாகத்தடங்கிய நிலை. தளர என்றது தளர்வுறும்படி - கீழ்த் தாழும்படி. ஆயிரமாழகம் - பல ஆறுகள். அடங்கக் கண்டும் - பயிலக்கண்டும் - அதனால் வைத்த என்க. அதனால் வைத்தலாவது அரவும் மதியும் பகையின்றி வைக்க இருத்தல் போல ஒருத்தியும் ஒருத்தியும் இகலின்றி இருக்கும்படி வைத்த என்பது குறிப்பு. ஒருக்கா - ஒருமைப்படச் செய்யாத. தொண்டர் - தொண்டாந் தன்மையில் வருவோர். தனித்தண்டு - ஒரு தண்டு - என்று கூட்டுக. தண்டு - ஊன்றுகோல். தனித்து - துணையின்றி என்றலுமாம். பூந்துருத்தி பூந்துருத்தி - திருத்தலப் பெயரினைப் பல்காலும் எண்ணிச் சொல்லுதல் குறிக்க அடுக்கி வைத்தார். 2 முதல் 9 வரை திருப்பாட்டுக்களிலும் இவ்வாறே வருதல் காண்க. இறைவர் விளக்கம்பெற எழுந்தருளிய தலங்களின் பெயர்களை உரைப்பதுவே தீமைகளைப் போக்கி நன்மைதரும் என்பது. துருத்தி உடம்பு. கொல்லனது உலைத்துருத்தி போன்று தோலால் மூடப்பட்டு உயிர்த்தலும் பொருந்துதலால் உடலைத் துருத்தி என்றார். உருவகம். போக்கல் - ஆம் - என்க. ஆம் - உளதாகும். ஏகாரம் தேற்றம். பின்வரும் திருப்பாட்டுக்களினும் இவ்வாறே கொள்க. - (2) ஐத்தானத்து - அகம் - மிடறு - ஐ - சுற்றி - என்க. தனது தானமாகிய உள்மிடற்றினை ஐ சுற்றி. ஐ - கோழை; கபம் என்பர் வடவர். அகத்து அடைந்தால் - உயிர்ப்பு உள்ளே அடங்கினால். யாதொன்று மிடுவார் - உணவு முதலியவை தருவார். - (3) பொய் ஆறா ஆறே - பொய்யின் வழியே மனம் அமைந்து அதன்படியே; பொருளே - அழியும் தன்மையான உலகப் பொருள்களையே; கையாறாக் கரணம் - மதுகை - வல்லமை - மாறாத முயற்சி. கரணம் - பொருள்; கையில் நீங்காத பொருள் என்றலுமாம். - (4) இழவு ஒன்று - இழந்து போகக்கூடிய ஒன்றையும். இழிவு சிறப்பும்மை தொக்கது. ஒன்று ஈயார் - ஒன்றினையும் ஈயமாட்டார். இங்கும் உம்மை தொக்கது. கழனங் கோவை - அற்றபோது நெகிழ்ந்து கழியும் கோவை. நம் கழல் கோவை என்று கூட்டிக் காலிலிடும் விலங்கு என்றலுமாம். அழல் - சுடு பிறவி. பயின்று எழுந்த - பல பிறவிகளிலும் தொடர்ந்து வருதலால் மேன்மேல் - எழுந்த. பயின்று - பயின்றதனால். காரணப் பொருளில்வந்த வினையெச்சம். பழவினை - என்ற குறிப்புமது. - (5) ஊற்றுத்துறை ஒன்பது - மலம் நீர் ஊறும் துறைகள் போன்ற உடலின் ஒன்பதுவாயில். நின்று ஓரீர் - நின்றபோது அவற்றின் உண்மையியல்பை நினைந்து பார்க்கமாட்டீர். மாற்றுத்துறை - இப்பிறவியிற் றீர்ந்து இறந்துபடுதல். வேற்றுத் தொழில் - அறத்தின் வேறுபட்ட மறத்தொழில். - |