பக்கம் எண் :


658திருத்தொண்டர் புராணம்

 

சிவனடிக்கன்புக் காரணம் என்பார் ஆகில் என்றார். அன்பர் ஆகில் என்றது அன்பர் ஆவதன் அருமை குறித்தது. (இப்பாட்டு இந்நாளில் சமூக சீர்திருத்தம் என்ற பேரால் பலராலும் உண்மை திறம்பிய நெறியில் தவறாகப் பொருள் செய்யப்பட்டுக் கையாளப்படுகின்றது.)

பொது

III திருச்சிற்றம்பலம்

தனித் திருத்தாண்டகம்

ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டா
         ரதிகைவீ ரட்டான மாட்சி கொண்டார்
தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்
         தலையதனிற்பலி கொண்டார் நிறைவாந் தன்மை
வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்
         மானிடங்கொண் டார்வலங்கை மழுவாட் கொண்டார்
காமனையு முடல்கொண்டார் கண்ணா னோக்கிக்
         கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே.

1

குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்
         குடமுழநந் தீசனைவா சகனாகக் கொண்டார்
சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார்
         தென்றனெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார்
பராபரனென் பதுதமது தேரோனைப் பொன்றக் கொண்டார்
         பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
இராவணனென் றவனைப்பே ரியம்பக் கொண்டா
         ரிடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

11

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- அதிகை வீரட்டானம் ஆட்சிகொண்டார், வாமனனார் மாகாயத்துதிரங் கொண்டார், கண்ணப்பர் பணியுங்கொள் கபாலியார், சுந்தரனைத் துணைக்கவரி வீசக்கொண்டார், மாகாளன் வாசல் காப்பாகக்கொண்டார் என்பன முதலிய பெருமைகளாலறியப்படும் இறைவர் சமணதீர்த்தும் சூலை தீர்த்தும் ஆமயந் தீர்த்துஞ் செடியேனையும் ஆளாக்கொண்ட சிவனார்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஆமயம் - பசுத்தன்மை. நோயுமாம். அதிகை வீரட்டானம் - நாயனாரை இறைவர் ஆட்கொண்டருளிய தலம். தாமரையோன் - பிரமன்; வாமனனார் - வாமனாவதாரங்கொண்ட விட்டுணு. கண்ணானோக்கி - முன்னும் பின்னும் சென்றியைந்து கண்ணானோக்கிக் காமனை உடல்கொண்டார் எனவும், கண்ணானோக்கிக் கண்ணப்பர் பணியுங்கொள் எனவும் உரைக்கும்படி வைத்த இடைநிலைத் தீபம்.- (4) பொக்கணம் - பூதிப்பை. கொடியான் - சலந்தராசுரன்; செடியேன் - அழகுடையவன். செடி - முடைநாற்ற முடைய அழுக்கு. "செடி தலை" "செடியாய வுடறீர்ப்பான்" என்ற ஆட்சிகள் காண்க.- (5) அந்தகன் - அந்தகாசுரன்; சுந்தரனை.....வீசக்கொண்டார் - ஆலால சுந்தரர் என்ற நம்பியாரூரரின் முன்னைநிலை வரலாறு. மகாளான் - மகாகாளர்; மேற்குவாயிற் காவலர்கள் எழுவருள் இவர் சிவபூசையில் வைத்து வழிபடப்படுபவர். ஆகமவிதிகள் பார்க்க. தந்திர மந்திரத்தராய் - சிவபூசையில் எண்ணப்படும் மந்திரவுருவினுள் நின்று. தந்திரம் - சிவபூசை செய்யும் முறை. தந்திரம் ஆகமத்தையும், மந்திரம் வேதத்தையும் குறிக்குமென்றலுமாம்.- (6) பளிங்கு - சுத்த ஸ்படிக சங்காசம் என்ற திருமேனி நிலை. மேன்முகமாகிய ஈசான முகத்தின் வடிவம்; திருநீற்றின் ஒளி என்றலுமாம். - (7) கோடி - கோடிக் குழகர்.