கோடிகா என்றும், கோடீச்சுரம் என்றும், உருத்திரகோடி என்றும் உரைப்பினுமமையும். கோடி - எண்ணிறந்தன என்ற பொருளில் வைத்து எண்ணிலாத கோயில் என்றலுமாம். - (8) நெடுமூக்கு - துதிக்கை. பண்டே இடைமருது இடமாக்கிக் கொண்டார் என்றும், பண்டேபோல இந்நாள் என்னை ஆட்கொண்ட என்றும் இருவழியும் கூட்டி உரைக்க நின்றது. - (9) பகன் - 12 சூரியர்களுள் ஒருவர். இரவிகளில் ஒருவன் - என்பதும் காண்க. வியாத்திரன் - தொழினடத்துவோன். வேள்வியெல்லாம்......அருளும் செய்தார் - மேலே கூறியவை வேள்வியழித்தருளிய வகைகள். அருளும் - அழித்ததன்றிப் பின் அருளும் என்று உம்மை இறந்தது தழுவியது. அருள் - அழித்த பின்னர்ச் செய்தது. தக்கனை மீள உயிர்ப்பித்து ஆட்டுத்தலையருளியதும் பிறவுமாம். எமது இறைவர் காய்தலும் அருளுதலும் இரண்டும் செய்யவல்லவர் என்ற குறிப்புமாம். "கோபப்பிரசாதம்" (11-ம் திருமுறை) பார்க்க. அடியேனை ஆட்கொண்டருளியதும் அவ்வாறே என்பதும் குறிப்பு. - (10) சாமத்தின்.....தடவி - வீணை தடவுதல் என்பது மரபு. வார்தல், வடித்தல், உந்துதல், உறழ்தல் என்னும் நால்வகை வினைகளுள் ஒன்று. "மிகநல்ல வீணை தடவி" (பிள். தேவா). வீணை தடவும் இசை என்பது புன்ருற்பவத்தின் பொருட்டு இறைவர் செய்யும் நாதமுழக்கு. "வருங்கடன் மீள நின் றெம்மிறை நல்வீணை வாசிக்கும்" (திருவிருத்). அதுவே மறையொலியாம் என்பார் சாமத்தின் இசை என்றார். ஒருக்கி - ஒருமுகமாய்த் தன்வயமாக்கி.-(11) குடமுழ நந்தீரனை வாசகனாக் கொண்டார், இறைவரது திருக்கூத்துக் கியையக் குடமுழா முழக்கும் நந்தி பெருமானை மாணிக்கவாசகராக வரும்படியாக அருளிக்கொண்டவர். பௌத்தசமயம் அதிகரித்ததனால் சைவசமய விளக்கம் குறைய அதனை நீக்கியருளும்படி தேவர்கள் வேண்ட இறைவரது ஆணையால் திருநந்தி தேவரே திருவாதவூரராக அவதரித்தருளினர் என்ற வரலாறு திருப்பெருந்துறையின் வடமொழிப் புராணமாகிய ஸ்ரீ ஆதிகைலாய மான்மியத்தாலும், மாணிக்க வாசகரின் வடமொழிச் சரிதமாகிய ஸ்ரீமணிவாக்கிய சரித்திரத்தாலும் அறியப்படும் என்பது மகாமகோபாத்தியாயர் ஸ்ரீ உ. வே. சாமிநாதையர் அவர்கள் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராண முன்னுரையில் எழுதிய குறிப்பு. குரா - இறைவர் பூசைக்குகந்த கோட்டுப்பூ வகையுள் ஒன்று. "திருக்குரா நீழற்கீழ் நின்ற" (திருவிசைப்பா). தென்றல் நெடுந்தேரோன் - மன்மதன். பராபரன் - பரத்துக்குப் பரன். முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருள். பரைக்குப் - உமையம்மைக்குப் - பரன் என்றலுமாம். பருப்பதம் - மேருமலை. கைக்கொண்டார் - வில்லாக வளைத்துக் கையிற் கொண்டார். இராவணன் என்ற பேர் - இராவணன் என்பது அனேக காலம் கயிலைக்கீழ் அமுக்குண்டு அமுததனாற் போந்தபெயர். இராவணன் - அழுபவன். பொது IVதிருச்சிற்றம்பலம் | அடைவு திருத்தாண்டகம் |
| பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக் கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார் கமழ்கொல்லி யறப்பள்ளி கலவஞ் சாரற் சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி செழுநனி பள்ளிதவப் பள்ளிசீரார் பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம் பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே. |
1 |