பக்கம் எண் :


66திருத்தொண்டர் புராணம்

 

போவார்கள்......புகன்று - புகன்று - போவார்கள் என்க. போவதாகிய செயல் முன்னரும், புகன்றதாகிய செயல் பின்னரும் நிகழ்ந்தமையால் அம்முறையே வினைமுற்றெச்சத்தின் முன் வைத்தார். இது நம்மாற் போக்கரிது என்றதனை நோயாளியின் எதிரிற் கூறுதல் மரபன்று; ஆதலின் அவ்விடம் விட்டுப் போயின பின் புகன்றனர் என்பதும் குறிப்பு. போக்கு அரிதாம் - மாற்றுதல் அரிதாகும்.

போவார்கள் - போவார்களாகி. மேல்வரும் பாட்டில் "குண்டர்கள்" என்ற எழுவாயுடன் கூட்டுக. குண்டர்களும் - உணர்ந்தாராய் - மனத்தினராய்ப் - புகன்று போவார்கள் - கைவிட்டார் என்று கூட்டி முடித்துக்கொள்க.

54

1320. (வி-ரை.) குண்டர்கள் - கீழோர் - சமணர். உம்மை தாம் உயர்ந்த உறவென்று சார்ந்த அவர்களும் என உயர்வு சிறப்பு.

கைவிட்டார் - கை- தான் தனித்து வேறு பொருள்தராது சார்ந்த சொல்லுக்கு உறுதிப் பொருள் தந்து நிற்பதோர் முன்னொட்டுமொழி. கை கூடும் என்பதுபோல. இதனை உபசர்க்கம் என்பர் வடவர்.

கைக்கொண்டு - பற்றிக்கொண்டு. கைக் கொள்ளுதல் - வசமாக்குதல்.

கைவிட்டார் - கைக்கொண்டு - இரண்டிடத்தும் கை என்றது ஒரு பொருள் தந்து நின்றது. குண்டர்கள் விடவும், சூலை கொள்ளவும் நின்ற அந்த நிலையினை இவ்வாறு ஒரு தன்மைப்பட்ட சொற்களாற் கூறிய குறிப்பினை ஓர்க. சூலை - இறைவரருளிய அருட்சத்தி. இறைவரருள் கொள்ளவே முன்கொண்டிருந்த மயக்கம் விட்டது என்ற குறிப்புக் காண்க. சார்ந்ததன் வண்ணமாய் நிற்பது ஆன்மாவின் இயல் என்பதும், உலகத்தைப் பற்றி அதனோடு அத்துவிதமாய் நின்ற உயிர்ப்போதம் அதனை விட்டபோது இறைவனருளைப் பற்றிக்கொண்டு அதனோடு அத்துவிதமாய் நிற்குமென்பதும் உணர்த்தப்பட்ட குறிப்பும் கண்டு கொள்க. முடுகுதல் - பெருகி அலைத்தல்.

மதிமயங்கிப் பண்டை உறவு உணர்ந்தார்க்கு - மதிமயக்கமாவது இனி இந்நிலையில் இங்குத் துணையாவார் யாவரோ? என்று தெரியாது மனங் கலங்குதல் என்ற பொருளில் நின்றது. பண்டை உறவு உணர்ந்தார் அவர்க்கு என்க. புதிதாய் உறவாகக் கொள்ளப்பட்டார் கைவிட்டகலவே, இதுகாறும் மறந்திருந்த பண்டை உறவு உணர்வில் வந்தது; அவ்வாறு வரப்பெற்ற அவர்க்கு.

உணர்ந்தார்க்கு உளராக்கொண்டு - அவர்க்குத் திலகவதியார் உளர் என்ற உணர்ச்சி வரவே அதனை உட்கொண்டு, தீராநோய் மிக்க பொழுதிலே பழைய உறவினரின் நினைவு வருதல் உலக இயல்புமாமென்க. நடுக்காட்டில் நள்ளிரவில் உழல்வார்க்கு மின்போல இறைவரருளால் மயக்கத்தினிடை ஒரு நல்லுணர்வு உதிக்கும்.

ஊட்டுவான் - அடிசில் சமைத்தளிக்கும் ஏவலான். "திருமடத்தி லமுதாக்குவார்" (திருஞான - புரா - 567), "அமுதமைப்போர்" (மேற்படி 568), "கொணர்ந்தமுது சமைத்தளிக்கும் பரிசனம்" (ஏயர்கோன் - புரா - 175) முதலியவை காண்க.

அடிசிலமைத்து இடைவிடாது கவளக்கணக்காகக் கையில் இட்டு உண்பித்தலால் ஊட்டுவான் என்றார் என்பது ஆறுமுகத் தம்பிரானாருரை. ஊட்டுவான் - இடநோக்கி உணவு என்ற செயப்படுபொருள் வருவிக்க. இங்குத் திலகவதியார் பாற் சேரும் நல்லூழ்ப் பயனை ஊட்டுவிப்பான் என்றதொரு தொனிப்பொருளும் கொள்ளவைத்த தெய்வக் கவிநலம் காண்க. "அதன்பயனும் கொடுப்பானும்" (சாக்கியர் - புரா - 5) என்பது சைவத்தற மன்றோ?

விட்டார் - செல்ல விடுத்தனர். குறிப்பு உணர்த்த விட்டார் என்று கூட்டுக. அந்தக் குறிப்பினை அவன் வாக்கில்வைத்து, 1322-ல் கூறுதல் காண்க. தமது