ஒருவகை முல்லை. இளங்கோயில் - கோயில் திருப்பணி செய்யும் காலத்தில் அது முடியும் வரை இறைவர் எழுந்தருளியுள்ள இடம் என்ப. பாலத்தாபனம் என்பது வடமொழி; ஆகமம் - "இருக்கு ஓதி.......ஏத்தும் - என்பது அக்காலத்தில் மந்திர உருவத்தில் இறைவர் அமர்ந்து வீற்றிருக்கும் தன்மையும் அந்நாள்களில் வேதங்கள் மிகுதியும் ஓதப்படுதலும் குறித்தது. "மீயச்சூர் இளங்கோயில்." - (6) இப்பாட்டில் காடு என்ற பெயர்பெற்ற தலங்கள் தொகுக்கப்பட்டன. ஆலங்காடு - பனங்காடு - முதலியவை மரங்களாற் போந்த பெயர். பாவையர்கள்....பொய்கை - "பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர்" (பிள் - தேவா) என்றபடி பெண்கள் வரம்பெற மூழ்கும் முக்குளம். விலையாம் வளை திளைக்க - "கையார் வளை சிலம்ப" (திருவா). வேறாம் - மாறும். வினை வேறாதல் - துன்பம் தருதல் மாறி இன்பம் பயக்கும் தன்மையுடையனவாதல்.- (7) இப்பாட்டில் வாயில் என்ற பேருடையதலங்கள் தொகுக்கப்பட்டன. கடுவாயர் - "இடுதுவர்க்காயொடு சுக்குத்தின்னும்" என்றபடி மருந்து உண்ணும் வாயினை உடையார் - சமணர். நெய்தல் வாயில் - முல்லை வாயில் - ஞாழல் வாயில் - முதலியவை செடி - கொடி - என்றிவற்றாற் போந்தபெயர். குடவாயில் - குணவாயில். திசை காரணமாக வந்தபெயர்.- (8) ஈச்சுரம் - என்ற பெயருடைய தலங்கள் இப்பாட்டிற் றொகுக்கப்பட்டன. நந்திகேச்சுரம் - மாகாளேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், இராமேச்சுரம் - முதலியவை அவ்வத்தலங்களில் பூசித்துப் பேறுபெற்றவர்களின் பேரால் வழங்கப்படுவன. சுரம்பலவும் - சுரம் - ஈச்சுரம் என்பது சுரம் என்று முதற்குறைந்து வழங்கப்பட்டதென்பர். - (9) இறைவன் எழுந்தருளிய திரு மலைகளை வகுத்துரைப்பது இத்திருப்பாட்டு. கேதாரம் - இமயச்சாரலில் உள்ள மலை. அண்ணா - திருவண்ணாமலை. மகேந்திரமாமலை - கயிலாயம் என்ப. "மன்னு மாமலை மகேந்திர மதனிற், சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்", "மற்றவை தம்மை மகேந்திரத்திருந், துற்றவைம் முகங்களாற் பணித்தருளியும்" (திருவா). ஏமகூடம் - இலங்கையில் உள்ளது; முருகப்பெருமான் போர்முகத் தெழுந்தருளியபோது தங்கும் பாசறை வீடு வகுத்த மலை. கந்தபுராணம் ஏமகூடப்படலம் பார்க்க. கதிர்காமம் என்ப. விந்தமாமலை - வழிமறித்துத் தருக்கி எழுந்த இதனை அகத்தியர் பிலத்தில் அழுத்திப் பின் எழுவித்தனர் என்பது வரலாறு. விந்தம் பிலம்புகு படலம் (கந்தபுரா) முதலியவை பார்க்க. வேதமலை - திருக்கழுக்குன்றம். சையம் - காவிரி பிறக்கும் மலை. குடகு நாட்டில் உள்ளது. பொதியின்மலை - பொதிகை. உதயம் - உதயகிரி. அத்தம் - அத்தமனகிரி. - (10) ஆறு என்றும், குளம் என்றும், களம் என்றும், கா என்றும் பெயர் வழங்கும் சிவதலங்கள் இத்திருப்பாட்டில் தொகுதிப்படுத்தப்பட்டன. தெள்ளாறு - "நள்ளாறு தெள்ளாறு". (நம்பி - புக்கொளியூர் அவிநாசி). தளிக்குளம் - "தஞ்சைத் தளிக்குளத்தார்" (தாண் - வீழி - 8) தஞ்சைப் பெரிய கோயில் என்ற இராசராசேச்சரத்தின் வடபுறம் சிவகங்கை என்ற தீர்த்தக் குளத்தி னடுவுள் உள்ள தளி. - (11) துறை என்ற பெயருடைய தலங்கள் இத்திருப்பாட்டிற் றொகுக்கப்படுவன. எழுவர் தவத்துறை - இது இப்போது லாலுகுடி (திருச்சிராப்பள்ளி சில்லா) என வழங்கப்படுவது. திருவங்கமாலை V திருச்சிற்றம்பலம் | பண் - சாதாரி |
| தலையே நீவணங்காய் - தலை - மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத் - தலையே நீவணங்காய் |
1 |