பக்கம் எண் :


662திருத்தொண்டர் புராணம்

 

தேடிக் கண்டுகொண்டேன் - திரு - மாலொடு நன்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுள்ளே - தேடிக் கண்டுகொண்டேன்.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- மனித உடலின் புற உறுப்புக்களும் அக உறுப்புக்களும் எல்லாம் சிவபெருமானை வழிபட்டு நலமடைவதற்காகவே படைக்கப்பட்டன. ஆதலின் அந்தந்த உறுப்புக்களும் எவ்வாறு வழிபட்டு உறுதி பெறுதல் வேண்டும் என்பதனையும், அதுவே உயிர்கள் மேனிலை அடையும்வழி என்பதனையும் காட்டி மக்களை வழிப்படுத்துகின்றது இப்பதிகக் கருத்து. இதனை ஆசிரியர் "செல்கதி காட்டிடப் போற்றும் திருவங்கமாலை" என்று குறிப்பிடுதல் காண்க. இப்பதிகம் 12 பாட்டுக்களையுடையது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- தலைமாலை - ஒவ்வோர் ஊழி முடிவிலும் அழிந்த பிரம விட்டுணுக்களுடைய தலைகளாலாகிய மாலை. தலைக்குத் தலைமாலையணிந்த தென்னே" (நம்பி - அஞ்சைக்களம்). தலையாலே - பிரமன் தலையோட்டிலே.- (3) செம்பவளம்போல் மேனி - எரிபோல் மேனி என்று தனித்தனி கூட்டுக. - (4) முரலுதல் - மூக்கின்வழி வரும் மெல்லொலியால் போற்றுதல். "மூக்கினான் முரன்றோதி" - "ஞமண ஞாஞண ஞாண ஞோணமென் றோதி" (தேவா). முரலுதல் - மூக்கின்றொழிலாகிய முகர்தல் என்றலுமாம்.- (5) பேய் - சிவக்ணப்பேய்கள்.-(8) ஆக்கை - யாக்கை உடம்பு. (எலும்பு நரம்புகளாற் கட்டப்பட்டது.) கையலாட்டுதல் - கையால் தூவுதல். - (9) கோகரணம் - சிவலிங்க வுருவம் பசுவின் காதுபோல் அமைந்ததாதலின் இப்பெயர் பெற்றது. துளுவ நாட்டில் பாடல்பெற்ற தலம்.-(10) குற்றாலத்துறை கூத்தன் - "குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தா" (திருவா). இக்கோயில் குற்றால நகரின் உள்ளே உள்ள தனிச்சிறு பழங்கோயில். அருவியின் பக்கத்துள்ள குறும்பலா எனப்பட்ட தனிக்கோயில் வேறு.-(11) இறுமாந்து....எண்ணப்பட்டு - சிவகணத்துள் ஒருவன் என்பது பெருமை செய்யும் பெருமித உணர்ச்சி. கீழ்மைக் குணங்களுள் வைத்து எண்ணப்படும் இறுமாப்பன்று. "சிந்தையார்க் குள்ள செருக்கு" (அற்பு - அந் - 79); "யானே தவமுடையேன்.......ஆளாயினேன்" (மேற்படி - 7); "உண்டே யெனக் கரிய தொன்று" (மேற்படி - 10). - (12) என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன் - "என்னெஞ்சத் தானென்பன் யான்" (அற் - அந் - 6).

பன்மைத் தொகை - இவை தனிக் குறுந்தொகை - காலபாசக் குறுந்தொகை - "மறக்கிற்பனே" என்ற குறுந்தொகை - "தொழற்பாலதே" என்ற குறுந்தொகை - இலிங்க புராணக் குறுந்தொகை - மனத்தொகை - சித்தத் தொகை - உள்ளத்தொகை - ஆதிபுராணத் தொகை முதலிய பொதுக் குறுந்தொகைத் திருப்பதிகங்கள். தொகை - குறுந்தொகை என்றும், பல கருத்துக்களைத் தொகுக்கும் பதிகம் என்றும், ஒரே சொன் முடிபும் கருத்து முடிபும் கொண்ட பல பாட்டுக்களின் தொகுதி என்றும் பல பொருளும்பட நின்றது.

தனிக் குறுந்தொகை

Iதிருச்சிற்றம்பலம்

குறுந்தொகை

ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம், ஒன்று கீளுமை யோடு முடுத்தது,
ஒன்று வெண்டலை யேந்தியெம் முள்ளத்தே, ஒன்றி நின்றங் குறையு மொருவனே.