| பத்து நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல், பத்து நூறவன் பல்சடை தோண்மிசை பத்தி யாமில மாதலின் ஞானத்தால், பத்தி யானிடங் கொண்டது பள்ளியே. |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- ஒன்று என்ற எண்ணில் தொங்கிப் பத்து வரையும் எண்ணலங்காரமாகப் பெருக வரும்படி ஒன்று முதல் பத்துப் பாட்டுவரை தொகுத்தார். "ஒன்று கொலாம்" என்ற விடந்தீர்த்த பதிகம் போன்ற அமைப்புடையது இப்பதிகம். இறைவரது இறைமைக் குணங்களை எண் வரிசைப்படத் தொகுத்துக் கூறுவது. மேலும் பெரியோர்கள்பாற் கேட்டுணர்ந்து பயிலத் தக்கது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஒன்றி - கலந்து. - (2) இரண்டு - செய்தொழில் - கோபப் பிரசாதங்கள். இரண்டு - கோலம் - சிவம் சத்தி. இரண்டு போது - நினைப்பு - மறைப்பு; பெத்தம் - முத்தி; இரபு - பகல். - (3) மூன்று மூர்த்தி - அரன் - அரி - அயன். மூழவிலைச் சூலம் - மூவர் தொழிலும் தமது என்று குறிப்பது. "மூவிலை யொருதாட் சூல மேந்துதல், மூவரும் யானென மொழிந்தவாறே" (ஒற்றி - ஒருபா வொருபஃது - 6 - 11-ம் திருமுறை.) தீத்தொழில் - வேள்வி. "தொலையா நிதியமெய்தித் தந்தையைத் தீத்தொழில் மூட்டிய கோன்" (ஆளு - பிள் - அந் - 85). தீத்தொழில் மூன்றினன் - ஆகவனீயம் - காருக பத்தியம் தட்சிணாக்கினி என்ற மூவேள்விகளிலும் வந்தருள்பவன். மூன்று போது - முற்பகல் - நண்பகல் - பிற்பகல். "முட்டாத முச்சந்தி", "சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச் சகளி செய்திறைஞ்சு" (தேவா). - (4) நாலின் மேன்முகம் - பிரமதேவனுக்கு ஓர் காலத்தில் நான்குக்கு மேற்பட இருந்த ஐந்தாவது முகம். செற்றது - கிள்ளியது. நாலும் - அறம் பொரு ளின்பம் வீடு உணர்த்தும் அறநூல் வேதம். உணர்ந்தது நாலு வேதம் எனவும் சரித்தது நாலு நன்னெறி எனவும் கூட்டுக. நாலு நன்நெறி - சரியை முதலிய சிவநெறி நான்கு.- (5) அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி - அஞ்சும் - முன்னையது, ஆனைந்து; அஞ்சும் - பின்னையது, ஐந்தொழில். ஓர் - ஒப்பற்ற. ஓர் அஞ்சும் ஆடி - ஆனைந்தும் மஞ்சனமாடி; ஓர் அஞ்சும் ஆடி - ஒப்பற்ற ஐந்தொழிற்கூத்து இயற்றி; அஞ்சுகொலாமவ ராடின தாமே" (தேவா). அஞ்சுபோல் அரையார்த்ததன் - அரையிற் கட்டியது ஐந்தலை அரவு என்றபடி; "அஞ்சு கொலாமவ ராடர வின்படம்." அஞ்சும் அஞ்சும் ஓர் ஓர் அஞ்சும் - ஐம்பூதங்கள்; ஐந்து தன்மாத்திரைகள்; ஞானேந்திரியம் ஐந்து; கன்மேந்திரியம் ஐந்து; அஞ்சுமாம் - ஐம்புலன்களுமாம்.- (6) ஆறு கூர்மையாக்கு - கூர்மை - அறிவு கூர்ந்து செல்லும் நிலை. ஆறு (போல்) - அறுசமயத் தவ்வவர் பொருள்.- (7) பொழில் - புவனம். "ஏழுடையான் பொருள்" (கோவை). ஏழுபோற்றும் - மேல் ஏழும் சுரத்தில் பாடிப் புகழும். நரம்பு ஏழு - யாழின் ஏழிசை; ஏழும் சூழ் ஏழ் பிறப்பிலும். - (8) எட்டு மூர்த்தி - இறைவரது அட்டமூர்த்தம் = (ஐம்பூதம் - சூரியன் - சந்திரன் - ஆன்மா). எட்டு வான்குணம் - தன்வயத்தனாதல் முதலிய இறைமைக் குணங்கள் எட்டு. "எண்குணத்தான்" (குறள்). - (9) ஒன்ப தொன்பதியான் - ஒன்பதொன்பதாகிய எண்பத்தொரு பதங்களிற் பேசப்படுபவன். என்பத்தொரு பதங்களையும் தன்னையடையும் வழியாகவுடையவன்; ஒளி களி - (ஞான) ஒளியும், சிவ ஆனந்தமுடைய. ஒளி களிறு என்பது பாடமாயின் ஞானத்தையே ஆனையாகவுடைய என்று கொள்க. ஒன்பதொன்பது பல்கணம் - சிவகணங்களாகிய பதினெண் கணங்கள். ஒன்பதாம் தீத்தொழில் - "ஒன்பது போலவர் வாசல் வகுத்தன" என்பறபடி ஒன்பது வாயிலும் தீமையினிற் சொல்வன. உரை ஒன்பதொத்து நின்று என்னுள் ஒடுங்கும் - என் பேச்சுக்கள் முதலிய எல்லாம் எவ்வளவு விரிந்து சூழினும் முடிவில் "நான்" என்ற அகங்கார நிலை |