னுடைக் கேள்வன் மகன்றகப்பன் தமையன்" (திருவா - பொற்சு - 13); "அரனுக்குத் தாயு மகளுநற் றாரமு மாவளே" (திருமந் - 4 - 295).- (2) ஞான - வித்து - ஞானம் முளைத்தற் கிடமாயுள்ளவர்; ஞானத்து - ஞானத்தினால்; அறிவு கொடுத்து; ஞானத் தளையிடுதல் - அறிவினுள்ளே முழுதும் கொண்டுவைத்தல்.- (4) தமர் குழு - அடியார் கூட்டம்.- (5) கலங்கப் பெறுதிரேல் - கலங்காமல் நிற்கப் பெற்றீராயின. கொன்றிடுகிற்குமே - கொல்லவல்லதா? (அன்று). ஏகாரவினா எதிர்மறைப் பொருளில் வந்தது. நாயனாரின் சரிதக் குறிப்புப்பட நின்றது.- (6); பூசைக்கொள்ளும் இறைவரையும், பூசை செய்யும் உயிரையும், பூசைக் கரணங்களையும், சாதனங்களையும் உருசி பெற உறுதிப் பொருள்பட வினா முகத்தால் உரைப்பது. "செய்வினையுஞ் செய்வானு மதன்பயனுஞ் சேர்ப்பானு, மெய்வகையா னான்காகும் விதித்த பொருள்" (சாக் - புரா - 5). - (7) உலகினரை நோக்கி எளிதாகிய நல்லுபதேசம். - (8) "அவனருளாலே அவன்றாள் வணங்ங்கி" என்ற திருவாசகக் கருத்து.- (9) முன்னிரண்டு அடிகளில் சிவானந்தானு பவத்தையும், பின்னிரண்டடிகளில் முன்னர்ப் பாசத்தழுந்திய இருண்மல நிலைமையும் கூறினார். பொது - காலபாசத் திருக்குறுந்தொகை IIIதிருச்சிற்றம்பலம் | குறுந்தொகை |
| கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப் பண்டுநான் செய்த பாழிமை கேட்டிரேற் கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக் கொண்ட தொண்டரைத் துனனிலுஞ் சூழலே. 1 படையும் பாசமும் பற்றிய கையினீர் அடையன் மின்னம தீச னடியரை விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம் புடைபு காதுநீர் போற்றியே போமினே. 7 இன்னங் கேண்மி னிளம்பிறை சூடிய மன்னன் பாத மனத்துட னேத்துவார் மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரந் தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே. 9 அரக்க னீரைக் தலையுமோர் தாளினா னெருக்கி யூன்றியிட் டான்றமர் நிற்கினுஞ் சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர் சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே. |
11 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- சிவனடியார் பக்கற் செல்லாதீர் என்று இயமன் தூதுவருக்கு ஆணையிட்டது. இப்பதிகப் பாராயணம் எவ்வித சங்கடங்களையும் நீக்க வல்லது. சில பிரதிகளில் இது காலபாராயணத் திருக்குறுந்தொகை என்றே காணப்படுகின்றது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கொள்ளரியான் - கொள்ள அரியான். பாழிமை - அடிமைத்திறத்தின் உறைப்பு. கேட்டிரேல் - சூழலே - கேட்பீராகில் சூழற்க - சூழாதேயுங்கள். மேற்பாட்டுக்களிலும் இவ்வாறே கூட்டி முடிக்க. சூழற்க - எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. இப்பதிக முழுமையும் ஆணையாகவரும் |