பொது - "தொழற்பாலதே" என்னும் திருக்குறுந்தொகை Vதிருச்சிற்றம்பலம் | குறுந்தொகை |
| அண்டத் தானை யமரர் தொழப்படும், பண்டத் தானைப் பவித்திர மாந்திரு முண்டத் தானைமுற் றாத விளம்பிறைத், துண்டத் தானைக்கண் டீர்தொழற்பாலதே. பருதி யானைப் பல்வேறு சமயங்கள், கருதி யானைக் கண்டார் மனமேவிய பிரிதி யானைப் பிறரறி யாததோர், சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே. ஆதிப் பாலட்ட மூர்த்தியை யானஞ்சும், வேதிப் பானைநம் மேல்வினை வெந்தறச் சாதிப் பானைத் தவத்திடை மாற்றங்கள், சோதிப் பானைக்கண் டீர்தொழற்பாலதே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- அண்டத்தான், அமரர்தொழப்படும் பண்டத்தான், பவித்திரமாந் திருமுண்டத்தான், பல்வேறு சமயங்கள் கருதியான், நியம நெறிகளை ஓதியான், நம்மேல் வினைவெந்தறச் சாதிப்பான், தவத்திடைமாற்றங்கள் சோதிப்பான், என்றின்ன பலவாற்றானும் அறியப்படுகின்ற சிவபெருமானையே நாம் தொழற்பாலது; வேறு எவரையுமன்று; உலகரே காண்மின். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பண்டம் - உறுப்பொருள் - முத்தி. "பாதம் பணி வார்கள்பெறு பண்டம்மது பணியாய்" (நம்பி - தேவா). பவித்திரம் - தூய்மை; திருமுண்டம் - திருநீறு. கண்டீர் - உலகினரை நோக்கி வற்புறுத்தியது.- (3) சுண்ணம் - திருநீறு. - (4) விடலையான் - பெருமையிற் சிறந்தோன்; படலை - பச்சிலையும் மலர்களும் விரவத் தொடுக்கும் மாலைவகை. நடலை - நடிப்பு - (5) பல்வேறு சமயங்கள் கருதியான் - பல சமயங்களை வகுத்தவன்; சமயங்களாலும் கருதப்படுவன்; "ஆறுசமயத் தவரவரைத் தேற்றுந் தகையன" (தேவா). பிரிதி - பிரீதி - விருப்பம். - (6) ஓதியான் - வகுத்துரைத்தவன். - (8) வேதிப்பான் - விரும்புபவன்; சாதிப்பான் - உறுதிபுரிபவன்; சோதிப்பான் - தூய்மைசெய்பவன். - (9) தோற்றினான் - தன்னுள் ஒடுக்கி மீளத்தோற்றுவிப்பவன். அமரர்கள் நஞ்சினால் இறந்து படாவண்ணம் உளதாம்படி செய்தவன் என்றலுமாம்.- (10) விட்டிட்டான் - வெளிப்படுத்தான். பொது - இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை VIதிருச்சிற்றம்பலம் | குறுந்தொகை |
| புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர், நக்க ணைந்து நறுமலர் கொய்திலர்; சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை, மிக்குக் காணலுற் றாரங் கிருவரே. 1 செங்க ணானும் பிரமனுந் தம்முளே, யெங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார்; இங்குற்றே னென்றிலிங்கத்தேதோன்றினான், பொங்குசெஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே |
2 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- பொய்யும் பொக்கமும் போக்கித் திருவலகு திருமெழுக்கு இடமாலும், மலர் கொய்து சுமந்து இண்டை புனைந்து சூட்டாமலும், நீர்சுமந்தாட்டி அட்டமாங்கம் அடிவீழ்ந்து நினையாமலும், கண்டி பூண்டு கபாலங் கைக் கொள்ளாமலும், சங்கமூதாமலும் பிரம விட்டுணுக்களாகிய இருவரும் தம்மாற்றலாற் சிவனைக் காணலுற்றக் காண்கிலராகச், சிவபிரான், அருளினால் தாமாகவே இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான். |