| அக்கு மாமையும் பூண்டன லேந்தியில், புக்குப் பல்பலி தேரும் புராணனை, நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ!. தொக்க வானவ ராற்றொழு வானையே. 14 தருமந் தான்றவந் தான்றவத் தால்வருங், கருமந் தான்கரு மான்மறிக் கையினான், அருமந் தன்ன வதிர்கழல் சேர்மினோ, சிரமஞ் சேரழற் றீவினை யாளரே. 21 நமச்சி வாயவென் பாருள ரேலவர், தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால், அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும், இமைத்து நிற்பது சால வரியதே. பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச், சொற்பல் காலநின் றேத்துமின் றொல்வினை, வெற்பிற் றோன்றிய வெங்கதிர் கண்டவப், புற்ப னிக்கெடு மாறது போலுமே. |
23 | இலங்கை மன்னனை யீரைந்து பத்துமன், றலங்க லோடுட னேசெல வூன்றிய, நலங்கொள் சேவடி நாடொறு நாடொறும், வலங்கொண் டேத்துவர் வானுலகாள்வரே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- சித்தத்துள்ளே சிவனைச் சிந்திக்குந் திறங்களைக் கூறியது. "சிந்திப்பார் மனத்தான்" என்று தொடங்குதலால் இப்பதிகம் சித்தத்தொகை எனப் பெயர் பெற்றது. முப்பது பாட்டும் கொண்டமைந்த சிறப்புடையது; ஆயினும் பெரும்பான்மை பற்றிப் பதிகம் எனப்படும். தேவாரத் திருமுறைகளுள் பேரெண்ணாகிய 30 பாட்டுப் பதிகம் இது ஒன்றேயாம். இதனுள் அகர முதல் ஒளகாரம் வரைப் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களையும், ஃ என்னும் ஆய்த எழுத்தையும், ககரமுதலாக வரும் மெய் யெழுத்துக்களில் ஏற்றபடி அமைந்த பதினான்கு மெய் எழுத்துக்களையும் குறியீடு பெறும்படி 2 முதல் 28 வரை உள்ள பாட்டுக்களில் முறையே முதலெழுத்தாய் வரும்படி யாக்கப்பட்ட தமிழ்ப்பெருஞ் சிறப்புடையது இத்திருப்பதிகம். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (3) சோதியுட் சோதியாய் நின்ற சோதியே - "சோதியே சுடரே சூழொளி விளக்கே" (திருவா). "ஒளியா யொளியாத னொளியா யொளியத னொளியுந் தணிதரு மொளியாகி" (பேரூர்ப் புரா - நிருத் - பட - 93). - (5) ஈறில் கூறை - திக்குக்கள் ஆகிய ஆடை.. "திகம்பரன்." வீறு - பெருமை. ஊறலாய் அருளூற்றை உடையவரே. - (7) ஊரிலாய் - பேரிலாய் - "ஊரிலான்.......பேரிலான்" (கந்த - புரா - மாயைப் - 1); சேர்விலார்கட்குத் தீயவை தீயவே என்றதனால் அடி சேர்ந்தார்க்குத் தீயவை தீயவே என்றதனால் அடி சேர்ந்தார்க்குத் தீயவும் நன்மையாம் என்றபடி.-(11) அரு அரா - அரு - பெரிய; கொடிய. அரா - பாம்பு.-(12) ஓத வண்ணன் - திருமால் ஓதம் - கடல், கருதப்படுமவர் - பாதம் - தியானிக்கப்படுபவருடைய - தியேயப் பொருளாயுள்ளவருடைய - திருவடி - "சி ஏகோத் தியேய." என்பது வேதம். (சிவன் ஒருவனே தியானிக்கப்படுபவர்). - (14) அக்கும் - அக்கமணி. எலும்பு என்றலுமாம். அஃ என்ற ஆய்த எழுத்தின் குறியீடாக வைத்தோதப்பட்டது. நீர்கள் - வணங்காதாரை நோக்கி இரங்கிக் கூறியது. - (15) இங்கணார் - இங்கு எளிதில் வருபவர். - (16) ஙகர வெல் கொடி - இடபக்கொடி. வெல் கொடி - யாவரையும் வெல்லும் கொடி. படுத்திருக்கும் நிலையில் இடபத்தின் வடிவம் ஙகரம் போன்றிருத்தலின் இவ்வாறு கூறினார். மகர வெல் கொடி மைந்தன் - மன்மதன். வெல் கொடி - சிவனையன்றிப் பிறரை வெல்லும். - (17) சரணமாம் படியார் - புகலடையத் தக்கவர். - (19) இடபம் - டகரத்தின் குறியீடாக வைத்தோதியது. - (2)) இணர்ந்து - ணகரத்தின் குறியீடாக வைத்தோதியது. இணர் என்னும் பெயரடியாகப் பிறந்த பெயரெச்சம். கொத்தாகப் பூத்து. - (21) சிரமஞ்சேர் - துன்பப்படுத்தும். அழல் - கொடிய. - (23) சொற் |