வாக்கில் தாமே சொல்லிவிட இயலாதபடி நோயால் நொந்தாராதலின், குறிப்பால் உணர்த்த நின்றமை பற்றி, அப்பொருளை இங்கு விரித்துக்கூறாது, உணர்த்த உணர்ந்த அவன் வாக்காற் கூறிய நயமும் தகுதியும் உணர்க. குறிப்பு உணர்த்த - சொல்லிவிட்ட அச்செய்தியின் குறிப்பாவது திலகவதியாரை இங்கு வந்து தமக்கு உதவும்படி வேண்டுதலாகும். அதனை அவனும் நேர்முகமாகக் கூறாது, "உய்யும்படி கேட்டு" என்று குறிப்பா லுணர்த்தியதும், அக்குறிப்பினை அறிந்துகொண்ட அம்மையாரும் "யானங்குன் னுடன்போந்து நன்றறியா ரமண் பள்ளி நண்ணுகிலேன்" என்று விடையளித்துத் தம்பியாரைச் சமணத்தை விட்டுத் திருவதிகை சேரும்படி குறிப்பா லுணர்த்தியதும், அதனை அக்குறிப்பினா லுணார்ந்த அவரும் ஈசரருள் கூடுதலால்.......செவ்வாறு சேர்திலக வதியார்தாள் சேர்வனெனத்" துணிந்தெழுந்ததும் இங்கு வைத்து ஒருங்கு காணுமாறு குறிப்பு உணர்த்த என்று வைத்த சொற்றிறம் கண்டு களிக்கத்தக்கது. இவையே அறிவோர்களது சொற்களுக்கு இலக்கியமாவன என்பதும் கண்டு கொள்க. "கூறாமை நோக்கிக் குறிப்பறிவார்", "குறிப்பிற் குறிப்புணர்வார்" என்றும் பலவாறும் இவ்வறிவு நுட்பம் பிறிதோர் சார்பு பற்றித் திருக்குறளினுள் விதந்து கூறப்படுதல் காண்க. 55 1321. | ஆங்கவன்போய்த் திருவதிகை தனையடைய வருந்தவத்தார் பூங்கமழ்நந் தனவனத்தின் புறம்பணையக் கண்டிறைஞ்சி "யீங்கியா னுமக்கிளையா ரேவலினால் வந்த"தெனத் "தீங்குளவோ" வெனவினவ, மற்றவனுஞ் செப்புவான், |
56 1322. | "கொல்லாது சூலைநோய் குடர்முடக்கித் தீராமை யெல்லாருங் கைவிட்டா ரிதுசெயலென் முன்பிறந்த நல்லாள்பாற் சென்றியம்பி நானுய்யும் படிகேட்டிங் கல்லாகும் பொழுதணைவா யென்றா"ரென் றறிவித்தான். |
57 1321. (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறே அவன் போயத் திருவதிகையினை அணைய, அந்நேரத்தில் அருந்தவத்தாராகிய திலகவதியம்மையார் பூக்கள் மணம் வீசுகின்ற திருநந்தவனத்தின் புறத்தே அணைந்தாராக, அவரைக்கண்டு வணங்கி, "யான் இங்கே உமக்கு இளையாரது ஏவலினால் வந்தது" என்று சொல்ல அதுகேட்டு அவர்" தீங்கு உளவோ?" என்று கேட்க, மற்று அவனும் சொல்வானாகி, 56 1322. (இ-ள்.) வெளிப்படை. "சூலையானது கொல்வதுமட்டில் செய்யாது, குடரினை முடக்கித் தீராநோயாக அவர்பால் நின்றது; எல்லாருங் கை விட்டனர்; இந்தச் செய்தியை என் முன்பிறந்த நல்லாளிடத்துச் சென்று சொல்லி, நான் உய்யும் வகையினை அவர்பாற் கேட்டு, இங்கு இராப்போதில் அணைவாய் என்றனர்" என்று அறிவித்தான். 57 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. 1321. (வி-ரை.) ஆங்கு - அவர் விட்ட ஆங்கே - அவ்வாறே. அப்பொழுதே என்றலுமாம். அருந்தவத்தார் - "திருப்பணிகள் பலசெய்தார்" (1309), "தவ விளக்கனையார்" (1311) என்றவை காண்க. தவம் - ஈண்டுச் சரியையினைக்குறித்து நின்றது. பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணைய - பூக்கமழ் என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. மருணீக்கியாரின் வினையது வலிமை மெலியும் காலம் என்பது குறிப்பு. அதிகாலையில் மலர்கள் விரிந்து மணங் கமழ்வன. ஊட்டுவான் |