பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்673

 

செய்தருளி. "மன்ற பாண்டியன் கேட்பக் கிளக்கு மெய்ஞ்ஞானத்தின்" (இருபா இருபஃது). திருப்பாசுரத்தால் உண்மை ஞானத்தைப் பாண்டியனுக்கு உபதேசித்து, அதனால் உலகுக்குஅறிவுறுத்தியருளி என்பதும் குறிப்பு. "பலர் புகழ் தென்னவ னறியும் பான்மையால்" , "உள்ள வண்ணம் பலருமுணர்ந்துய்யப் பகர்ந்து" (திருஞான - புரா - 820 - 821) என்பவை காண்க. பாசநீக்கமும் சிவப்பேறும் என அருள் செய்தல் இரண்டு திறப்படுதலின் கூனிமிர்த்து என்றும், அருளி என்றும் கூறினார். கூன் - உடற்கூனும், "ஏழு பிறப்பின் முடங்கு கூ"னுமாம். நிமிர்ந்தருளி என்று சேர்த்து ஒரு செயலாக்கி உரைப்பாருமுண்டு.

திருநீற்றின் ஒளி கண்டு - திருநீற்றின் ஒளி எங்கும் விளங்கச்செய்து. "தொண்டரை விளக்கங் காண", "நன்னெறி.....காட்டு மாற்றால்" (369) முதலியவை காண்க.

காணல் - விளக்கம் செய்தல். பிறர் காணும்படி தாம் காண. "அரனடியார் பாற் பூதிசாதன விளக்கம் போற்றல் பெறா தொழியக் கண்டு" (திருஞான - புரா - 18) என்ற நிலையை நீக்கி, அதனை விளக்கஞ் செய்வதற்காகவே அவதரித்தவர் ஆளுடைய பிள்ளையார் என்றும், அச்செயல் பாண்டி நாட்டில் நிகழ்ந்தது என்றும் குறிப்பதற்கு அமணர் கட்டழித்து - அருளி - ஒளி கண்டு - என்று இவ்வாறு கூறினார்.

கண்மனத்து.........வருகின்றார் - திருமறைக்காட்டி னின்றும் நாயனாரை அரிதிற் பிரிந்த பிள்ளையார், பாண்டி நாடு சென்று, மீண்டு, நாயனாரைச் சந்திக்கும் அவ்வளவும் பிள்ளையாரது சரித நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறுமாற்றால் "அமணர்தமை வாதிற் கட்டழித்துக் - கூனிமிர்த் தருளித் - திருநீற்றின் ஒளி கண்டு - மறையவனார் வருகின்றார்" என்று சுருங்கக்கூறிய அமைதி கண்டு களிக்க. அதன் பெருக்கம் பிள்ளையாரது சரித நிகழ்ச்சியாகலான் அவர்தம் புராணத்துள் - 617 முதல் 930 வரை உள்ள பாட்டுக்களால் விரித்துக்கூற வைத்ததும் கண்டுகொள்க. "தமிழ் நாட்டிற் போனார் ஞானத் தலைவனார்" (1554) என்று விடுத்த அந்நிலையினின்றும், "மறையவனார் வருகின்றார்" என்று ஈண்டு எடுத்துத் தொடங்கிக் கொள்க. அவர் சரிதத்தின் நீண்ட நிகழ்ச்சிகள் எல்லாம் வருகின்றார் என்ற நிகழ்கால வினைமுற்றெச்சத்தாற் பெற வைத்த அமைதியும் கருதுக.

சண்பைநகர் மறையவனார் - ஆளுடைய பிள்ளையார். நாயனார் தம்முடன் வருதலை மறுத்துத் தங்க வைத்துச்சென்றவர் என்ற குறிப்புப்பட மறையவனார் என்றார்.

வருகின்றார் - பாண்டி நாட்டினின்றும் வருவாராகிய என்று முற்றெச்சம்.

அவர் இருப்ப - மறையவனார் வருகின்றார் (1656). - நாட்டு வந்தணைந்தார் - கேட்டுப்புறம்பணையில் வந்தணைந்தார் - (1657) என்று இரண்டு பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக் கொள்க.

391

1657. (வி-ரை.) தீந்தமிழ் நாடு - பாண்டி நாடு - "தமிழ்நாட்டில் போனார்" (1554) என்றதனையே தொடர்ந்து கூறியதும்; முன்னர்ச் சமணர் சார்பு பெற்றுத் தமிழ் நாடாகிய அளவில் மட்டும் நின்றது, இப்போது பிள்ளையாரது திருவருளும் ஞானத் தமிழும் பெற்றதனால் தீந்தமிழ் நாடு ஆகி விளங்கியது என்ற குறிப்பும் பெற வைத்த நயமும் கண்டுகொள்க. "தெய்வத் தமிழ்" (970), "மும்மைத் தமிழ்" (972), "மெய்ம்மைப் பொருளாந் தமிழ் நூல்" (974) என்றவிடங்களிலுரைத்தவற்றையும் இங்கு நினைவுகூர்க.

நாட்டு இடை நின்றும் - நாட்டினின்றும் என்னாது இடை நின்றும் என்றது பிள்ளையார் சைவத் தாபனத்தின் பின், பாண்டி நாட்டிற் பலதலங்களையும் வழி