பக்கம் எண் :


674திருத்தொண்டர் புராணம்

 

பட்டுத் தங்கிய செயல் குறித்தது. அவர்தம் புராணம் 884 முதல் 895 வரை பாட்டுக்கள் பார்க்க.

செழும்பொன்னி வாய்ந்த வளந்தரு நாட்டு வந்தணைந்தார் - சோழ நாட்டில் வந்து சேர்ந்தாராகி. வருகின்றார் - (1656) - அணைந்தார் - வந்தணைந்தார் என்று கூட்டுக. அணைந்தார் - அணைந்தாராகி; முற்றெச்சம்.

பொன்னி நாட்டு வந்தணைந்தார் - கேட்டுப் - புறம்பணையில் வந்தணைந்தார் - பாண்டி நாட்டினின்றும் சோழ நாட்டில் எழுந்தருளி ஆளுடைய பிள்ளையார் திருப்பூந்துருத்தி யருகு சேரும் வரை உள்ள அவர்தம் சரிதப்பகுதி குறித்தது. (திருஞான - புரா - 896 - 927 வரை பார்க்க). இருந்தமை கேட்டு - திருக்கடவூர் தொழுது வருகின்றபோது அடியார்பால் வினவி அவர்கள் மொழியக்கேட்டு. திருஞான - புரா - 927 - 928 - 929 பார்க்க.

"விரைந்தவர்பாற் செல்வன்" என - இது பிள்யைாரது மனநிலை. "ஆண்ட வரசினைக் காணும், ஒப்பரிய பெருவிருப்பு மிக்கோங்க" (திருஞா - புரா - 929). நாயனாரை நெடுநாட் பிரிந்த பிரிவாற்றாமையைக் கருதி விரைந்து செல்வன் என்றார்.

வாக்கினுக்கு வேந்தர் - "வாகீச மாமுனிவர்" (திருஞான - புரா - 927) என்றும், "நாவரசர்" (மேற்படி - 930) என்றும் பின்னர் ஆளுடைய பிள்ளையார் புராணத்துள் இச்செய்தி கூறுமிடத்து இத் தன்மையாலே குறிப்பது காண்க. இறைவர் ஆட்கொண்டு கொடுத்த பெயராற் கூறுதலும், முன்னர்ப் பிரிந்த பிள்யைார் அத்தன்மை நினைந்தே பின்னரும் காணக் காதல் கொண்டனர் என்று குறிப்பிற் பெறவைக்க "ஆண்டவரசு" (928 - 929) என்று கூறுதலும் காண்க.

புறம்பணை - நகர்ப்புறத்து வயல்கள் சூழ்ந்த மருதநிலப் பரப்பு. இதனுள் நாயனாரும் பிள்ளையாரும் சந்தித்த இடம் இப்பொழுதும் சம்பந்தர் மேடு (சம்பந்திமேடு என்று தவறாய் வழங்குவது) என்ற பெயரால் வழங்கப்படுகின்றது. அது சுற்றிலுமுள்ள வயல்களுக்கிடையே சிறிது மேடாய் உள்ளது; தென்மேற்கே 2 நாழிகையளவில் உள்ள வெள்ளாம் பரம்பூரி (திருவாலம் பொழிலி)னின்றும் திருப்பூந்துருத்திக்கு வரும் வழியில் வெள்ளாம் பரம்பையினின்றும்  நாழிகை யளவில் உள்ளது. "தென் பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானை" (திருத்தாண்) என்பது காண்க. இத் திருவாலம் பொழிலில் நாயனார் செய்த திருவுழவாரப் பணிவிடைக்கு அத்தலத்து வைணவர்கள் இடையூறு செய்தமை யறிந்த ஆளுடைய பிள்ளையாரது அருணினைவினால் காவிரி (குடமுருட்டி) பெருகி அவ்வைணவர்களுடைய வீடுகளையும் விட்டுணு கோயிலையும் பெயர்த்துச் சேந்தலைப்பெருமாள் என்றும் சுந்தரப் பெருமாள் கோயில் உள்ள இடத்தில் சேர்த்தது என்றும், அது முதல் இன்றும் வைணவக் குடிகள் அங்கு இரவில் தங்கக் கூடாது என்றும், ஒரு கர்ணபரம்பரை வரலாறும் வழங்குகின்றது. (இவ்வரலாறு திருப்பூந்துருத்தியிலிருந்து அன்பர் ஒருவர் எழுதியனுப்பி உதவியது). புறம்பணையில் - புறம்பு அணைந்த இடத்தில் என்பர் இராமநாதச் செட்டியார்.

செம்பொன்னி என்று பாடங்கொண்டு செந்நிறமுடைய நீரையுடைய காவிரி என்றுரைப்பர் ஆறுமுகத்தம்பிரனார்.

392

1658.

சண்பைவருந் தமிழ்விரக ரெழுந்தருளத் தாங்கேட்டு
மண்பரவும் பெருங்கீர்த்தி வாகீசர் மனமகிழ்ந்து
கண்பெருகுங் களிகொள்ளக் கண்டிறைஞ்சுங் காதலினால்
எண்பெருகும் விருப்பெய்த வெழுந்தருளியெதிர்சென்றார்.

393