பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்681

 

வைப்பதும் ஈடேற்றுவதும் தமிழ்மொழியேயாம் என்பது கருத்து. "தென்றமிழ்ப் பயனாயுள்ள திருத்தொண்டைத் தொகை" (358), "ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்" (970) முதலியவையும், "வாயிருந் தமிழே படித்தாளுறா, ஆயிரஞ் சமணும் மழிவாக்கினான்" (பழையாறை வடதளி - தேவா) என்ற கருத்தும் கருதுக.

காண்பதற்கு - முன்னர் மனத்துட் கண்டு கொண்டே இருந்தாரேனும், இப்போது நேரே கண்களாற் காணுதற்கு. "சந்தித்தே யிந்தப்பார் சனங்க ணின்று தங்க ணாற் றாமே காணா வாழ்வார" (பிள் - தேவா - கழுமலம்).

மனங் கொண்டார் - திருவுளங் கொண்டருளினர்; கருதினர்.

400

1666.

பிரமபுரத் திருமுனிவர் பெருந்தொண்டை நன்னாட்டில்
அரன்மகிழுந் தானங்க ளணைந்திறைஞ்சிப் பாடுதற்கங்
குரனுடைய திருநாவுக் கரசருரை செய்தருளப்
புரமெரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுதகன்றார்.

401

(இ-ள்.) வெளிப்படை. சீகாழியில் வந்தருளிய திருஞானசம்பந்த நாயனாரைப் பெரிய தொண்டை நன்னாட்டில் சிவபெருமான் விரும்பி எழுந்தருளும் திருத்தலங்களை அணைந்து வணங்கித் தேவாரப் பதிகங்களைப் பாடியருளும்படி வலிமையுடைய திருநாவுக்கரசு நாயனார் சொல்லியருள, அதன்படி இசைந்து, திரிபுரமெரித்த பெருமானுடைய திருமகனாராகிய ஆளுடையபிள்ளையாரும் திருப்பூந்துருத்தியைத் தொழுது புறப்பட்டருளினர்.

(வி-ரை.) தொண்டை நன்னாட்டுக்கு எழுந்தருளித் தேவாரப் பதிகங்கள் அருளிச்செய்து வரவேண்டுமென்று நாயனார் ஆளுடைய பிள்ளையாருக்குச் சொல்லியருள, அதன்படி அவர் எழுந்தருளினர் என்பது இப்பாட்டின் கருத்து.

தம்மைப் பிரிந்து பாண்டியநாடு சென்ற பின்னர் உள்ள, போக்கும் வரவும் பிள்ளையாரை நாயனார் கேட்க, அதற்குப் பிள்ளையார் பாண்டிநாடு நிகழ்ச்சிகளையும் அரசியார் மந்திரியார் இவர்களது அன்பின் திறங்களையும் சொல்ல, அன்பர்களைக் காணும் விருப்பமுற்று நாயனார் தமிழ்நாடு காண மனங்கொண்டார்; அவ்வாறே, தாம் பிரிந்த பின், நாயனார் சிவத்தலங்கள் சென்று வணங்கியவற்றைப் பிள்ளையார் வினவ, நாயனார் தாம் தொண்டை நன்னாடு சென்று மீண்டு திருப்பூந்துருத்தியில் எழுந்தருளியிருந்த அளவும் சொல்லித் தொண்டை நாட்டில் பிள்ளையார் சென்று பாடும்படி சொல்லியருள அவரும் அது மனங்கொண்டனர். இவ்விரு பெருமக்களும் இவ்வாறு வழிப்படுத்திக்கொண்டு அமைந்தமை ஏனையடியார்களுக்கும் உலகத்திற்கும் வழிகாட்டும்படியாம் என்க.

பிரமபுரத் திருமுனிவர் - "திருஞான மாமுனிவர்" (1661) என்றவிடத்துரைத்தவை பார்க்க. திருமறைக காட்டில் கடைசியாகத் தாம் கேட்ட "வேயுறு தோளி" என்ற பதிகத் திருக்கடைக்காப்பில் பிள்ளையார், தம்மை "முனிவன்" என்றறிவித்தனையே தொடர்ந்து, நாயனாரும், அவரை "முனிவர்" என்ற அத்தன்மைபற்றியே எண்ணியருளினார் என்ற குறிப்புப்படத் திருமுனிவர் என்றார்.

பாடுதற்கு - பாடும்படி; முனிவர் - அணைந்து - பாடியருளுதல் வேண்டுமென்று.

உரை செய்தருள - உலகமுய்யக் காட்டும் வகையால் எடுத்துச் சொல்ல. அவ்வாறு பிள்ளையார்பால் உரைக்கும் தன்மை அவரால் "அப்பர்" என்று போற்றப்பட்ட நாயனாருக்கே உண்டு என்பார் உரனுடைய என்றார். உரன் - ஞானத்தின் திண்மை. உரை செய்த அவ்வாறே நாயனாரிடம் விடை கொண்