மாயை என்ற பரிக்கிரக சத்தியினின்றும் புவனங்களை உளவாக்கி; விரிந்துபல உயிராகி - உயிர்களைத் தன்னுள் ஊழியில் ஒடுக்கி மீளப் பிறப்பித்து. "விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை" (பிள் - தேவா - புறம்பயம் - 3) - திருத்தளி - திருப்புத்தூர்க் கோயிலின் பெயர். சுவாமி பெயர் திருத்தளிநாதர். - (3) இப்பாட்டுத் தருமிக்குப் பொற்கிழியளித்த திருவிளையாடல் குறித்தது. கொன்றை - தலமரம். தென்காட்டும் - தென் - இசை. - (5) மன்றாடி - மன்றில் ஆடுபவன். சங்காத்தி - தோழன். - (6) காம்பாடு - மூங்கில் போன்ற. ஆடு - உவமவுருபு. - (8) வேதியன் - மார்க்கண்டேயர். அக்கு அரும்பு - அக்கு - சங்குமணி. அரும்புபோல - அரும்புகின்ற. உருவும் மெய்யும் பற்றிவந்த உவமம். - (9) கோள் - கொள்கை. கொடுஞ்சினம் - இங்கு ஆணவமலம். தலவிசேடம் :- திருப்புத்தூர் - பாண்டி நாட்டில் 6-வது தலம். கோயில் திருத்தளி - (ஸ்ரீதளி) என வழங்கப்பெறும். திருத்தாண்டகம் பார்க்க. உமையம்மையார் - இலக்குமி முதலியோர் பூசித்த தலம். சுவாமி அம்மை கோயில்களுக்கு இடையில் வயிரவர் கோயில் விளக்கமாக வுள்ளது. நடராசருக்குச் சிலை உருவமாகிய மூலத்தானம் அமைந்துள்ளது இத்தலச்சிறப்பு. ஆலவாய்ப் பெருமான் தருமிக்குப் பொற்கிழி யளித்த திருவிளையாடலை அப்பர் சுவாமிகள் திருத்தாண்டகப் பதிகத்துள் எடுத்துப் போற்றியருளினர். பாண்டிநாட்டில் ஆளுடைய பிள்ளையார் சமணழித்துச் சைவம் பெருக்கிய பின்பு, தமது பிரிவாற்றாது உடன்வர ஒருப்பட்ட மங்கையர்க்கரசியார் நின்றசீர்நெடுமாறர் குலச்சிறையார் இவர்களைத் தேற்றி, அந்நாட்டின் தலங்களைச் சென்று வணங்கி எழுந்தருளியிருந்தபோது இத்தலத்தையும் வணங்கிப் பதிகம் பாடியருளினர். சுவாமி - புத்தூரீசர் - திருத்தளி நாதர். (ஸ்ரீதளி நாதர் என்பர் வடவர்); அம்மை - சிவகாமியம்மை; தீர்த்தம் - ஸ்ரீ தளிதீர்த்தம்; சிவகங்கை; மரம் - கொன்றை; கோயிலினுள் உள்ளது. பதிகம் 2. இது பிரான்மலை என்னும் திருக் கொடுங்குன்றைத்தினின்றும் தென் கிழக்கே மட்சாலை வழி 15 நாழிகையளவில் உள்ளது. நாயனார் வந்தவழி (புதுக்கோட்டை) திருமயத்தினின்றும் 15 நாழிகையளவில் கற்சாலைவழி வரும் பாதை. இங்கு நின்றும் மீளவும் 40 நாழிகையளவில் கற்சாலை வழி மதுரை அடையத்தக்கது. பஸ் வசதி உண்டு. 1668. | சென்றணைந்து மதுரையினின்ற றிருந்தியநூற் சங்கத்துள் அன்றிருந்து தமிழாராய்ந் தருளியவங் கணர்கோயில் முன்றிலினை வலங்கொண்டு முன்னிறைஞ்சி யுள்புக்கு வன்றனிமால் விடையானை வணங்கிமகிழ் வொடுந்திளைத்தார். |
(இ-ள்.) சென்று அணைந்து - மதுரை நகரத்தினுட் சென்று சேர்ந்து; திருந்திய நூல்........வலங்கொண்டு - திருத்தமடைந்த நூல்களையுடைய புலவர் கூடிய சங்கத்தினுள் முன்னாளில் வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்தருளிய இறையனாரது திருக்கோயிலின் திருமுற்றத்தினை வலமாகச் சூழ்ந்து; முன் இறைஞ்சி - வெளியே திருமுன்பு வீழ்ந்து வணங்கி; உள்புக்கு - திருக்கோயிலினுள்ளே புகுந்து; வன்றனி......திளைத்தார் - வலிய ஒப்பற்ற பெரிய இடபத்தையுடைய சொக்கலிங்கப் பெருமானை வணங்கி மகிழ்ச்சியினுள் மூழ்கி ஆனந்த அனுபவத்தை அடைந்தனர். (வி-ரை.) மதுரையினில்..........தமிழ் ஆராய்ந்தருளிய அங்கணர் - ஆலவாய்ப் பெருமான் தலைச் சங்கப்புலவராயிருந்து தமிழ் வளர்த்த வரலாறு குறித்தது. இது பற்றி மூர்த்திநாயனார் புராணத்துள் 968 - 974 பாட்டுக்களின்கீழ் உரைத்தவையும், |