பக்கம் எண் :


686திருத்தொண்டர் புராணம்

 

துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
         தூழத்த வெண்முறுவ லுமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
         சிவனடியே சிந்திக்கப் பெற்றே னானே.

1

வாயானை மனத்தானை மனத்து ணின்ற
         கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத்
தூயானைத் தூவெள்ளை யேற்றான் றன்னைச்
         சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
         தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ்
சேயானைத் தென்கூடற் றிருவால வாய்ச்
         சிவனடியே சிந்திக்கப் பெற்றே னானே.

8

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- எல்லார்க்கும் முன்னேதோன்றி முளைத்தான், உமையோடாடித் திளைத்தான், உமையோடுடனாகியிருந்தான், கடைக்கண்ணால் மங்கையுமை நோக்கா வென்மேல் ஊனமது வெல்லாம் ஒழித்தான், உணர்வாகி யடியேன துள்ளே நின்ற தேனமுது, படியெழுதலாகாத மங்கையோடு மேவன், மற்றொருபற்றில்லா அடியேற் கென்றுஞ் சிறந்தான், வாயான், மனத்தான், மனத்துள் நின்ற கருத்தான், கருத்தறிந்து முடிப்பான், என்தலையினுச்சி யென்றுந் தாபித்திருந்தான், அடியேனுக்கன்பன், அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற தீர்த்தன் என்றிவை முதலிய தன்மைகளால் அறியப்படுகின்ற தென்கூடற் றிருவாலவாய்ச் சிவனடியே நான் சிந்திக்கப் பெற்றேன்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) முளைத்தானை எல்லார்க்கு முன்னே தோன்றி - உலகந் தோன்றுவதற்கு முன் விளங்கியவர். "முன்னர்த் தோன்றிய முறையால்" (திருவிளை - புரா - வெள் - பட). வளைத்தான் - மூன்றாம் பிறையினது வளைவுக்கேற்ப அணிபெறச் சூடினான. நீறாத் - துளைத்தான் என்க. உமை - மீனாட்சியம்மையார். இத்தலத்தில் மீனாட்சியம்மையார் பொருட்டு வந்து வீற்றிருந்தருளும் சிறப்பும், இங்கு அம்மையாரின் பெருஞ் சிறப்பும் குறித்தது - (2) (4) (5)-ம் பார்க்க. சிந்திக்கப்பெற்றேன் - நித்திய பூசைசெய்யும் குறிப்பு. - (2) மேலார்கள் - பெருந்தேவர்கள். பொன்மை - திருமேனி நிறம். "பீதம் தற்புருஷாநநம்" என்பது ஆகமம்; ஆதலின் தற்புருடமுகங் குறித்த தென்றலுமாம். நீறு - சத்யோ சாத முகத்தின் நிறம். நீறு - திருநீறு - என்றலுமாம். ஊழிக்காலத்து எஞ்சியிருந்த நீறும், ஆளுடையபிள்ளையாருக்கு அருளிய நீறும் குறிப்பு. (3) நீர்த் திரளை நீள் சடைமேல் நிறைவித்தலும், நிலமருவி நீரோடக்காண்டலும் மாறுபட்ட தன்மைகள். சிவனது எல்லாம் வல்ல தன்மை குறிப்பு. நீரோட - கங்கையை உலகில் சிறிதாக ஓடிவரச் செய்த என்றதும் குறிப்பு. (4) கடைக் கண்ணால் மங்கையுமை நோக்கா - ஆன்மாக்களின் பொருட்டுப் புனருற்பவத்தின் முன் செய்யும் அருட்பார்வை. என்மேல்....தேனமுது - நாயனாரது பூசைக்குகந்த நாயகன் என்ற குறிப்பு. மங்கை - மீனாட்சியம்மையார். - (5) உமை - மீனாட்சியம்மை. - (6) மூவன் - அயன் அரி அரன் என்ற மூவரும் தாமேயாவர். தானேயாய் நின்று மூவராய் விரிந்தான் என்ற தன்மை குறித்தலால் இச்சொல் பொதுப்பிரி பாற்சொல்லாகாமையும், "ஒருமைக் கல்ல தெண்ணுமுறை நில்லாது" (தொல் - சொல் - கிளவி - 44) என்ற விதியுடன் மாறுபடாமையும் காண்க.