பாவன் - நிறைந்தவன். பரவுதல் - நிறைதல். மங்கையோடு மேவனை - மீனாட்சியம்மையார் பொருட்டு எழுந்தருளி வந்து மணஞ்செய்து அரசு வீற்றிருந்த வரலாற்றின் குறிப்பு. - (7) துறந்தார் - ஏனைய எல்லாப் பற்றுக்களையும் விட்டுத் தம்மையே பற்றினவர். மற்றொரு...சிறந்தான் - நாயனாரது பூசாமூர்த்தி. - (8) இப்பாட்டு யாவரும் பாடஞ்செய்து ஓதத்தக்கது. - (9) வளை விலி - வேறு எதனாலும் வளைக்கப்படமாட்டாதவன். - (10) என்தலை.....தாபித்திருந்தான் - நாயனாரது அகப்பூசையில் துவாத சாந்தத்தினின்று எடுத்துவைத்து தியானிக்கும் மூர்த்திமான். "உச்சிமேலுறைபவர்" (பின் - அச்சிறுபாக்கம்) இத்தலம் துவாத சாந்தத்தலமாதலின் அதன் மூர்த்தியாதலும் குறிப்பு. (11) தூர்த்தன் - தீயவன் - பிறன் மனை விரும்புவன்; இராவணன். அடியேனுக் கன்பன் - பூசைக்கிரங்கும் மூர்த்தி. அளவிலா....தீர்த்தன் - காலங்கடந்தவன். தலவிசேடன் :- முன்னர் மூர்த்தி நாயனார் புராணத்திறுதியி லுரைக்கப்பட்டது. (பக்கம் - 1310). 404 1670. | சீர்திகழும் பாண்டிமா தேவியார் திருநீற்றின் சார்வடையக் கூனிமிர்ந்த தென்னவனார் தம்முடனே பார்பரவுங் குலச்சிறையார் வாகீசர் தமைப்பணிவுற் றாரகிலாக் காதன்மிக வடிபோற்ற வங்கிருந்தார். |
405 (இ-ள்.) சீர்திகழும் பாண்டிமா தேவியார் - சிறப்புடன் விளங்கும் மங்கையர்க்கரசியம்மையாரும்; திருநீற்றின் ... தென்னவனார் - திருநீற்றின் சார்பு அடைதலினால் கூன் நிமிர்ந்த நின்றசீர்நெடுமாறப் பாண்டியனாரும்; தம்முடனே - இவர்களுடனே; பார்பரவும் குலச்சிறையார் - உலகம் போற்றும் குலச்சிறையாரும்; தமைப் பணிவுற்று ... அடிபோற்ற - தம்மை வந்து பணிந்து, நிரம்புதல் பெறாது பெருகிய காதல் மிகும்படி தமது திருவடிகளைப் போற்றி நிற்க; வாகீசர் அங்கு இருந்தார் - வாகீச மாமுனிவர் அத்தலத்தே எழுந்தருளியிருந்தனர். (வி-ரை.) சீர்திகழும் - சீர் - தாம் அவதரித்த சோழநாட்டைப் போலவே பாண்டியநாடும் திருநீற்றின் ஒளியில் விளங்கும்படி செய்த சிறப்பு. "தங்கள் திருநாடு போற்செழியர் தென்னாடு விளக்கும் சீர்விளக்கு" (மங்கை - புரா - 3). சீர்திகழும் என்றது அச்சிறப்பினால் புகழ் விளங்கும்; என்றும் மாறாது சைவச் சிறப்பில் விளங்கும் என்றலுமாம். பாண்டிமா தேவியார் - முன்னர் "வளவர் மகளார் தென்னன் றேவியாங் கோதில் குணத்துப் பாண்டியா தேவியார்" (1549) என்று புராணத்திலும், "வளவர் கோன் பாவை...பாண்டிமா தேவி" என்று ஆளுடையபிள்ளையார் தேவாரத்திலும் கண்டதுபோலன்றி, இங்குப், பாண்டிமாதேவி என்ற நிலையாற் கூறியது, பிள்ளையாரது திருவருளினாலே பாண்டியரும் சைவத்திறஞ் சார்ந் துயர்ந்திருந்த பிற்றைநிலைக் குறிப்பு. ஆயினும் சிறப்புப்பற்றி முன் வைக்கப்பட்டார் என்று குறிக்கவும் சீர்திகழும் என்றார். திருநீற்றின் சார்வு அடையக் கூன் நிமிர்ந்த - "வேந்தனு மோங்குக" என்ற ஆளுடைய பிள்ளையார் (திருஞான - புரா - 847 பார்க்க.) திருவாக்கின் பயனாகக் கூன் நிமிர்ந்ததனை நீற்றின் சார்வினால் நிகழ்ந்ததாகக் கூறினார். நீற்றின் சார்பாவது சைவச் சார்பு. திருநீற்றுப் பதிகப் பயன் என்ற குறிப்புமாம். "சார் புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச், சார்தரர் சார்தரு நோய்" (குறள்) என்ற உண்மை இங்கு முற்றும் பொருந்துதல் காண்க. தம்முடனே - உடன் உருபைச் சிறப்புப் பற்றித் தேவியார் - தென்னவனார் இவர்களுடன் புணர்த்தி ஓதினார். |