பார் பரவும் - உலகம் போற்றும் சிறப்புக் குவச்சிறையார் புராணத்து விரிக்கப்படுவது. "மங்கையர்க்கரசி" என்ற திருப்பதிகமும் பார்க்க. சீர்திகழும் - திருநீற்றின்....கூனிமிர்ந்த - பார் பரவும் - இம்மூன்று சிறப்புக்களையும் ஆளுடையபிள்ளையார் எழுந்தருளிய அருளிப்பாடுகளின் பிற்குறிப்புப்படக் கூறிய அமைதியும் காண்க. பணிவுற்று - அடிபோற்ற - "எல்லையிலா நீறு போற்று மிருவரையுஞ் சென்று காணுங் கருத்துடையேன்" (1553) என்று ஆளுடையபிள்ளையார் எழுந்தருளியபடியே, அவர் "பாண்டிமா தேவியார் பரிவும், குலச்சிறையார் பெருமையும்" உரைத்தருளக்கேட்டு நாயனாரும் போந்தருளினார்; நாயனாரது நல்வரவு கேட்ட மாதவியார் முதலிய மூவர்களும் எதிர்கொண்டு போற்றினர்; இது நாயனார் திருவாலவாயிறைவரைப் பணிந்த பின்பு திரு ஆலவாயில் நிகழ்ந்தது என்ற இவ்வளவும் உய்த்துணர வைத்தனர். பின்னர் ஆளுடையபிள்ளையார் புராணத்து விரித்துரைக்கக்கிடத்தலின் அதுபோல ஈண்டும் கொள்க என்பதாம். ஆரகிலா - அமைதிபடாத - நிரம்பாத. சார்வு அடைய - அடைதலினால். சார்வுடைய - திருமேனி சேரவருளுடையதனாற் கூனிமிர்ந்த தென்னவனார் - என்பனவும் பாடங்கள். 405 1671. | திருவால வாயமர்ந்த செஞ்சுடரைச் செழும்பொருணூல் தருவானை நேரிசையுந் தாண்டகமு முதலான பெருவாய்மைத் தமிழ்பாடிப் பேணுதிருப் பணிசெய்து மருவார்தம் புரமெரித்தார் பூவணத்தை வந்தடைந்தார், |
406 1672. | கொடிமாட நிலவுதிருப் பூவணத்துக் கோயிலினுள் நெடியானுக் கறிவரியார் நேர்தோன்றக் கண்டிறைஞ்சி "வடிவேறு திரிசூலத்" தாண்டகத்தால் வழுத்திப்போய்ப் பொடிநீடு திருமேனிப் புனிதர்பதி பிறபணிவார், |
407 1673. | தென்னிலங்கை யிராவணன்றன் சிரமீரைந் துந்துணித்த மன்னவனா மிராமனுக்கு வரும்பெரும்பா தகந்தீர்த்த பிஞ்ஞகனைத் தொழுவதற்கு நினைந்துபோய் பெருமகிழ்ச்சி துன்னிமனங் கரைந்துருகத் தொழுதெழுந்தார் சொல்லரசர்; |
1674. | தேவர்தொழுந் தனிமுதலைத் திருவிரா மீச்சரத்து மேவியசங் கரனையெதிர் நின்றுவிருப் புறுமொழியால் பாவுதிரு நேரிசைகண் முதலான தமிழ்பாடி நாவரசர் திருத்தொண்டு நலம்பெருகச் செய்தமர்ந்தார். |
409 1671.(இ-ள்.) வெளிப்படை. திருவாலவாயில் விரும்பி வீற்றிருந்தருளும் செஞ்சுடர் போன்றவரை, செழும் அகப்பொருள் நூலைத் தந்தவரைத் திரு நேரிசையும் திருத்தாண்டகமும் முதலாகிய பெரிய வாய்மையுடைய தமிழ்ப் பதிகங்களைப் பாடி, விரும்பும் திருப்பணிகளைச் செய்து, அதன் பின்னர்ப், பகைவர்களுடைய திரிபுரங்களை எரித்த சிவபெருமானது திருப்பூவணத்தை வாகீசர் வந்தடைந்தனராகி, 406 1672.(இ-ள்.) வெளிப்படை. கொடிகள் கட்டிய மாடங்கள் நிறைந்த திருப்பூவணத்தில் திருக்கோயிலினுள்ளே, திருமாலுக்கும் அறிவரியாராகிய |