சிவபெருமான் நேரே வெளிப்பட்டருளக் கண்டு வணங்கி, "வடிவேறு திரிசூலம்" என்று தொடங்கும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தினால் துதித்துப் போய்த், திருநீறு நிறைந்த திருமேனியுடைய புனிதராகிய சிவபெருமானது திருத்தலங்கள் பிறவற்றையும் போய்ப் பணிவாராகி, 407 1673.(இ-ள்.) வெளிப்படை. தென்னிலங்கையின் இராவணனுடைய பத்துத் தலைகளையும் துண்டித்து வீழ்த்திய அரசனாகும் இராமனுக்கு அதனால் வரும் பெரும் பாதகத்தைத் தீர்த்த சிவபெருமானைச் சென்று வணங்க எண்ணிப்போய் மிகுந்த மகிழ்ச்சி பொருந்தவும் மனம் கரைந்து உருகவும் வாகீசர் தொழுது எழுந்தனராகி, 408 1674.(இ-ள்.) வெளிப்படை. தேவர்கள் தொழுகின்ற ஒப்பற்ற முதல் வரைத், திருவிராமேச்சுரத்தில் பொருந்திய சங்கரனைத், திருமுன்பு நின்று, விருப்பம் மிக்க மொழிகளால் நிறைந்த திருநேரிசைகள் முதலாகிய தமிழ்ப் பதிகங்களைப் பாடித் திருநாவுக்கரசு நாயனார் நன்மை பெருகும்படி திருத்தொண்டுகளைச் செய்து அங்கு விரும்பி எழுந்தருளி யிருந்தனர். 409 இந்த நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1671.(வி-ரை.) செஞ்சுடரை - சுடர்போல் ஒளி தருபவை, "சோதியே சுடரே" (திருவா). செழும் பொருள் நூல் - இறையனா ரகப்பொருள் என்னும் தமிழ் நூல், மறை என்பாருமுண்டு. இதுபற்றி மூர்த்தி நாயனார் புராணத்தில் "செம்மைப் பொருளும் தருவார்" (974) என்றவிடத்து உரைத்தவை பார்க்க. நேரிசையும் தாண்டகமும் முதலான தமிழ் - தமிழ் - தமிழ்ப் பதிகங்கள். நேரிசை - "வேதியா வேத கீதா" என்ற ஒரு பதிகம் மட்டும் இப்போது கிடைத்துள்ளது. இப்பாட்டிற் குறித்த தாண்டகப் பதிகம் கிடைத்திலது! பேணு - தாம் நியதியாய்ப் பேணும். இறைவர் விரும்பும் என்றலுமாம். மருவார் - பகைவர். 406 திருவாலவாய் II திருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| வேதியா வேத கீதா விண்ணவ ரண்ணா வென்றென் றோதியே மலர்க டூவி யொருங்கிநின் கழல்கள் காணப் பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும் ஆதியே யால வாயி லப்பனே யருள்செ யாயே. 1 நறுமலர் நீருங் கொண்டு நாடொரு மேத்தி வாழ்த்திச் செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம் மறிகடல் வண்ணன் பாகா மாமறை யங்க மாறும் அறிவனே யால லாயி லப்பனே யருள்செ யாயே. 8 பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையிற் புந்தி யொன்றிப் பிடித்துநின் றாள்க ளென்றும் பிதற்றிநா னிருக்க மாட்டேன் எடுப்பனென் றிலங்கைக் கோன்வந் தெடுத்தலு மிருப துதோன் அடர்த்தனே யால வாயி லப்பனே யருள்செ யாயே. |
10 திருச்சிற்றம்பலம் |