பக்கம் எண் :


690திருத்தொண்டர் புராணம்

 

பதிகக் குறிப்பு :- வேதியா, வேதகீதா, நம்பனே, ஆளும் வல்வினைகள் தீர்க்கும் அருமருந்து, சிலந்தியை அரசாள அருளினாய், என்று பலவும் ஓதியே, வழுவிலாது உன்னை வாழ்த்தி, நறுமலர் நீருங்கொண்டு நாடொறும் ஏத்திப் பிதற்றி நான் இருக்க மாட்டேன்; நின்தாள் கருதி நான் காண்பதாக அலந்தனன்; ஆல வாயிலப்பனே! நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம், வஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம் அருள் செய்யாயே.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வேத கீதா - வேத கீதங்களாற் பேசப்படுபவரே; கீதமாக வேதங்களைச் சொன்னவரே; அண்ணா - மூத்தவரே; அணுகப் படாதவரே என்றலுமாம். ஒருங்கி - ஒன்றியிருந்து. ஓதியே மலர்கள் தூவி - பூசித்து. - (2) போத்தினிப் பிரவா வண்ணம்...அருள் செய்யாயே - "பிறவாமை வேண்டும்" என்று அம்மை வரங் கேட்டமைபோல் அப்பரும் கேட்டனர் என்க. (3) மருந்து - பிறவியாகிய மூலநோய் தீர்ப்பவனாதலின் மருந்தென் றுபசரித்தார். ஆளும் - அடிமைப்படுத்தும். - (4) சைவனே - சிவமுத்துவமுடைய தலைவன். - (5) பளகனேன் - குற்றமுடையவன். - (6) எஞ்சலில் புகல் - தவிர்க்க முடியாது சென்று அடையுமிடம். - (7) வழுவிலாது உன்னை வாழ்த்தி வழிபடும் - ஆன்மார்த்தமாக நித்திய பூசை செய்யும் என்பது குறிப்பு. "நறுமலர் நீருங்கொண்டு நாடொறும் ஏத்தி வாழ்த்திச் செறிவன சித்தம் வைத்து (8) என்றதுமிது. - (9) சிலந்தியை அரசு அது ஆள - கோச்செங்கட் சோழர் சரிதம்.

1672. (வி-ரை.) கோயிலினுள் - நேர் தோன்ற - நாயனாருக்கு இறைவர் இங்குத் திருக்கோயிலினுள் நேரே முன்னின்று திருவுருவம் காட்டிக் காட்சி கொடுத்தருளினர்; அக்காட்சியினையே ஒவ்வோர் பகுதியாகத் தனித்தனி கண்டு தனித்தனி வணங்கித் "தோன்றும் தோன்றும்" என்ற அடுக்கினால் உறுதிபடப் போற்றினார் என்பது திருத்தாண்டகப் பதிகத்தாற் றேற்றமாக விளங்கும். தாண்டகத்தால் வழுத்தி என்றதும் இக்குறிப்புத்தருவதாம்.

தோன்ற - தேவாரச் சொல்லாட்சி போற்றப்பட்டது.

பொடி நீடு திருமேனி - பொடி - திருநீறு. "பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்" என்ற தேவார நினைவுக்குறிப்பு.

நெடியானுக்கு அறிவு அரியாராயினும் அடியாருக்குத்தாமே எளியாராய் நேரே காட்சிதந்து தோன்ற என்பது குறிப்பு. நெடியானுக்கும் என்று உயர்வு சிறப்பும், பிரமனுக்கேயன்றி நெடியானுக்கும் என்று எச்சமுமகாய் பொருள் தரும் உம்மை தொக்கது.

407

திருப்பூவணம்

திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

வடிவேலு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
         வளர்சடைமே லிளமதியந் தோன்றுந் தோன்றுங்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
         காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
         எழிறிகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
         பொழிறிகழும் பூவணத்தென் புனித னார்க்கே.

1