பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்691

 

படைமலிந்த மழுவாளு மானுந் தோன்றும்
         பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்று
நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
         நான்மறையி னொலிதோன்று நயனந் தோன்றும்
உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்று
         மூரல்வெண் சிரமாலை யுலாவித் தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
         பொழிறிகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

4

அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்று
         மணிகிளரு முருமென்ன வடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
         மணமலிந்த நடந்தோன்று மணியார் வைகைத்
திருக்கோட்டி னின்றதோர் திறமுந் தோன்றுஞ்
         செக்கர்வா னொளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்
         பொழிறிகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

9

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- பொழில்கள் திகழும் திருப்பூவணத்தில் கோயிலினுள் இறைவர் தமது திருவுருவம் நேர் தோன்றக் காட்சியளித் தருளுகின்றார்; அத்தோற்றத்தில், வடிவேலு திரிசூலம், சடைமேல் இளமதியம், கொன்றைக்கண்ணி முதலியன எல்லாம் தோன்றும், ஆணாகிப் பெண்ணாய் வடிவுதோன்றும்; மின்னிடையாள் பாகமும் பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளையும் தோன்றும்; மயலாகும் தன் அடியார்க்கருளி மறுபிறவி யறுத்தருளும் வகையும், ஆரொருவ ருள்குவா ருள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்; வைகைத் திருக்கோட்டினின்ற திறமும் தோன்றும்; சண்டிக்கருளித் தன் முடிமேல் அலர் மாலை அளித்தல் தோன்றும் என்றிவ்வாறு பலவும் அத்திருக்காட்சியைப் பாராட்டிப் போற்றியது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வடிவு - ஒளி; அழகு, "மருள்பொழி மும்மலஞ் சிதைக்கும் வடிச்சூலம் வெயிலெறிப்ப" (சிறுத் - புரா - 35). வடிவு - வடிவம். மூர்த்தம் என்று கொண்டு. இச்சாஞானக்கிரியை - ஆரணி ஜனனி ரோதயித்ரி - அயன் அரி அரன் என்னும் இவர்கள் மூர்த்தமாய் விளங்கும் என்றலுமாம். வடியேறு என்று பாடங்கொண்டு, வடி - கூர்மை என்பாருமுண்டு குழை தோடு கலந்து - இடப்பால் தோடும் வலப்பால் குழையுமாகக்கூடி. கலந்து - வெவ்வேறாகிய ஆண்பெண் வடிவம் ஒன்றாகக் கூடி. இதனையே "ஆணாகிப் பெண்ணாய் வடிவு" (2) என்பார். - (2) ஊண் ஆகி - பலிதேர்வாராகி. குற்றார் - பகைவர்; முப்புரவாணர். - (3) ஐவகையால் நினைவார் - ஐந்து சாதாக்கியங்களாக. சிவனை ஐந்து முகங்களையுடைய சதாசிவ மூர்த்தியாக நினைந்து பூசிப் போர் என்றலுமாம். ஐந்தெழுத்தாகிய மந்திர உருவினராகவும், ஐந்தொழிற் பெருங்கூத்துடையவராகவும் நினைவோர் என்றலும் பொருந்தும். திருவங்க மாலையிற் கூறியவாறு ஐம்பொறிகளாலும் என்றலுமாம். - (4) படை மலிந்த - படைகளுட் சிறந்த. பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை - முருகப்பெருமான் இங்கு நாயனார்க்கு எதிர் தோன்றிக் காட்சி தந்தருளிய திருவுருவம், இத்தலத் தெழுந்தருளியுள்ள சோமாஸ்கந்த மூர்த்தம் என்பது குறிப்பு. இங்கு இரசவாதஞ் செய்த திருவிளையாடல் வரலாறும், பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்" (7) என்னும் குறிப்பும் கருதுக. - (5) மயல் - வேறு ஒன்றும் தோற்